வாய் புற்றுநோய்.. கொட்டைப்பாக்கும், கொழுந்து வெத்தலயும் உடலுக்கு நல்லதா? ஆரோக்கியமான கொட்டை பாக்கு
சென்னை: வெற்றிலை, பாக்கு போடுவது நன்மையா? தீமையா? என்ற ஆய்வுகள் இன்னமும் பல்வேறு தரப்பில் நடந்து வருகின்றன.. வெற்றி, கொட்டை பாக்குகள் தவிர்க்க முடியாத கலவையாக இருந்தாலும், அனைவருமே இதனை சாப்பிடலாமா? யார் யார் தவிர்க்கலாம்?
செரிமானத்துக்காக வெற்றிலை போடும் பழக்கம் நம்முடைய பழக்கத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது.. இதற்கு காரணம், துவர்ப்புச்சுவை கொண்ட கொட்டை பாக்குகள், கழிவுகளையும், நச்சுக்களையும், நீக்கி மலமிளக்கிகளாக செயல்பட்டு, குடலையும் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.. இயற்கையான கால்சியமும் நமக்கு உடலில் சேர்கிறது.

கொட்டை பாக்கு: கொட்டை பாக்குகள் கிருமிகளுக்கு எதிராக செயல்படக்கூடியவை. எனவே, இரைப்பையில் உள்ள தொற்றுகளை நீக்குகின்றன. கொழுந்து வெற்றிலையும், கொட்டைப்பாக்கும் சுண்ணாம்புடன் சேர்த்து சாப்பிடும்போது, உடலிலுள்ள பித்தம், வாதத்தை கட்டுக்குள் கொண்டுவரும் என்பார்கள்.. கொட்டைப்பாக்குகளின் துவர்ப்பு சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.. அதனால், இந்த பாக்கை இடித்து டீ போல குடித்து வந்தால், நீரிழிவு கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
எனினும் கொட்டைப்பாக்குகள் நன்மைகளைவிட, தீமைகளையே அதிகம் தருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.. 80 சதவீத வாய்ப் புற்றுநோய்க்கு காரணம் புகையிலை என்பதை மறுக்க முடியாது.. சிகரெட், பீடி போன்றவை மட்டுமல்லாமல், பான்மசாலா, குட்கா, வெற்றிலைப் பாக்கு, புகையிலை போன்ற பழக்கவழக்கங்கள் மூலமாகவும், வாய்ப் புற்றுநோய் வருவதாக கூறுகிறார்கள்.
வாய்ப்புற்று: சுருக்கமாக சொல்லப்போனால், மது, புகையிலைக்கு அடுத்தபடியாக, வாய்ப்புற்றுநோய்க்கான காரணியாக கொட்டைப்பாக்கு உள்ளதாம்.. வெற்றிலை, சுண்ணாம்பு, கொட்டைப்பாக்கு இந்த மூன்றுமே ஒரு மோசமான கலவை என்கிறார்கள்.. 50 சதவீதம் வாய்ப் புற்றுநோய்க்கான காரணியாக இந்த கலவை விளங்குகிறதாம்..
தாம்பூலத்திற்கு மட்டுமே இந்த கலவையை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர, இதையே எந்நேரமும் மென்று வாயில்போட்டு மென்று பழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.
ஆய்வுகள்: Indian Journal of Medical & Pediatrics oncology Trusted மற்றும் அமெரிக்கன் சொசைட்டி ஃபார் க்ளினிக்கல் நியூட்ரிஷியன் போன்ற ஆய்வுகளில் கொட்டை பாக்குகளின் பாதிப்புகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.. வெற்றிலை போடுவதற்கும், வாய், உணவுக்குழாய் புற்றுநோய்க்கும் நிறைய தொடர்கள் உள்ளதால், ஃபைப்ரோஸிஸ்க்கு வாய்ப் புற்றுநோய்க்கு அதிக ஆபத்து இருப்பதாக, அந்த ஆய்வுகள் சொடல்கின்றன.
அதேபோல, கொட்டைப்பாக்குகள், இதய நோய், உடல் பருமன் போன்றவற்றுக்கும் தொடர்பை கொண்டுள்ளதாம். சிலருக்கு கொட்டை பாக்கு சாப்பிட்டால், வாந்தி, வயிற்றுப்போக்கு, ஈறுகள் தொடர்பான பிரச்சனைகள், சிறுநீரக நோய், இதய நோய், குறைந்த ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், போன்றவையும் ஏற்படலாம். இது கடைசியில் மாரடைப்பு, கோமா வரை கொண்டுபோய் விட்டுவிடும்.
தவிர்க்கலாம்: நீண்ட காலமாகவே பாக்கு பயன்படுத்துபவர்களுக்கே இப்படியான நோய்கள் வரக்கூடும்.. எந்நேரமும் கொட்டைப்பாக்கை மென்றால், பல் ஈறுகள் பாதிப்பு, கறை படிவது, ஈறுகள் வலுவிழப்பது, மத்திய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுவது ஏற்படலாம். அதனால், கர்ப்பிணிகள் இந்த கொட்டை பாக்குகளை தொட்டுக்கூட பார்க்க கூடாது.
ஆஸ்துமா நோயாளிகள், வலிப்பு நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்த பிரச்சனை பிரச்சனை உள்ளவர்கள், ஆஸ்துமா நோயாளிகள், அனீமியா உள்ளவர்கள், இந்த கொட்டை பாக்குகளை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications