காராமணியின் ஆரோக்கியம்.. எலும்பு பாதிப்பு, மஞ்சள் காமாலைக்கு உதவும் பயிறுகளின் ராணி.. மருத்துவ நன்மை
சென்னை: அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பயிராக உள்ளதால்தான், பயிறுகளின் ராணி என்று காராமணியை சொல்கிறார்கள்.. இந்த காராமணியை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? சர்க்கரை நோயாளிகள் இந்த பயிறை தவறவிடக்கூடாது என்று சொல்ல என்ன காரணம் தெரியுமா?
தட்டைப்பயிறு என்று சொல்லப்படும் காரமணியில் கிளைசெமிக் குறியீட்டின் அளவு குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக உள்ளது. நீரிழிவு நோயாளிகளின் இந்த பயிற்றினை சாப்பிட்டு வரும்போது இன்சுலின் சுரப்பு சீராகும் என்கிறார்கள்.

சர்க்கரை சத்து: உயர் ரத்த சர்க்கரை பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த காராமணி பயிறு சிறந்தது.. காரணம், இதில், சர்க்கரையை தவிர, பல்வேறு நோய்களை சீராக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. காராமணியில் உள்ள மெக்னீசியம், இன்சுலின் சுரப்பினை சீராக்குகிறது..
நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதச்சத்து, வைட்டமின் C போன்றவை அடங்கிய இந்த பயிறுகள் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடியவை. அதிக நார்ச்சத்து என்பதால், மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக காராமணி திகழ்கிறது.
இதனால் உடம்பில் தேங்கியிருக்கும் நச்சுக்கள், கழிவுகளும் வெளியேறி உடல் எடையை குறைக்க உதவு புரிகிறது. அதைவிட முக்கியமாக அரை கப் காரமணியில் 1 கிராம் கொழுப்பு மட்டுமே இருப்பதால், உடல் எடை குறைப்போருக்கு தேர்ந்த உணவாக உள்ளது.
ஃபோலேட் என்ற இரும்புச்சத்துக்கள் கர்ப்பிணிகளுக்கு அவசிய தேவையாக உள்ளது. அந்த சத்துக்கள் அபரிமிதமாகவே காராமணியில் அடங்கியிருக்கிறது. கர்ப்பிணிகள் காராமணி சாப்பிட்டு வரும்போது, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அபாரமாக இருக்கும். பாலூட்டும் பெண்களும், குழந்தைகளும் கட்டாயம் சாப்பிட வேண்டியது இந்த காராமணி.
புற்றுநோய் அபாயம்: குளிர்ச்சி தன்மையுடைய காராமணிகள், உடலிலுள்ள உஷ்ணத்தை தணிக்கிறது. பித்தம், கபம் இரண்டின் அளவையும் குறைக்க உதவுகிறது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் நிறைந்துள்ளதால், சருமம் பொலிவு பெறும். இதே ஆக்சிடென்ட்ஸ்கள், கேன்சர் அபாயத்தையும் தடுக்க செயல்படுகிறது. முக்கியமாக குடல் புற்றுநோய்களை எதிர்க்கும் பண்புகள் இந்த காராமணிக்கு நிறையவே உள்ளது..
வைட்டமின் B உள்ளதால், கல்லீரல் தொடர்பான அத்தனை பிரச்சனைகளையும் காராமணி தீர்க்கிறது. அதனால் ஈரலை தாக்கக்கூடிய நோய்கள் முதல் மஞ்சள் காமாலை வரை மருந்தாகும் உணவுதான் காராமணி. காராமணியிலுள்ள மெக்னீசியம், மாங்கனீசு சத்துக்கள், உடல் எலும்புகள், பற்களை உறுதிகொள்ள செய்கிறது. தசைகளுக்கு புரோட்டீனும், கால்சியமும் காராமணியில் நிறைய உள்ளது.
நிம்மதி தூக்கம்: உடலின் தசைகளையும் எலும்புகளையும் பலப்படுத்துவதுடன், சருமத்தை கவசம் போல காத்து, தோல் சுருக்கத்தை தடுக்கின்றன. இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு காராமணி கை கொடுத்து உதவுகிறது.. இந்த பயிறுகளில் டிரிப்தோபன் என்ற சத்து நிறைந்திப்பதால், உடல் சோர்வை நீக்கி, நிம்மதியான தூக்கத்துக்கு வழி வகுக்கிறது.
தட்டை பயறுகளில் அதிகளவிலான நார்ச்சத்தும், புரதமும் நிறைந்திருப்தபால், வயிறில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, செரிமான செயல்முறைக்கு உதவிடும். வயிற்று சுகவீனம் சரியாகி, உணவுகள் செரிக்க உதவிடும். தொடர்ந்து காராமணியை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். முடி உதிர்வையும் உடனடியாக குறைக்கும். இதில் உள்ள வைட்டமின் A மற்றும் C சத்துக்கள் ஆன்டி ஆக்சிடென்ட் குணங்கள் நிறைந்தது. இதனால் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சரும அணுக்களை பாதுகாக்கின்றன.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications