வெள்ளை வெள்ளையா விதை..கருப்பு கருப்பா மூலிகை.. இந்த "டீ" மட்டும் குடிங்க.. சட்டென நடக்கும் ஆச்சரியம்
சென்னை: ஒரே ஒரு பொருளை மட்டுமே வைத்து, முறையாகவும், சரியாகவும், தொடர்ச்சியாகவும் பயன்படுத்தி வந்தால், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் என்கிறார்கள். அதுதான் மிளகு.
சமையலில் நம்மால் தவிர்க்க முடியாதது மிளகு.. அஞ்சறைப்பெட்டியில் கட்டாயம் ஆக்கிரமித்திருக்கும் மூலிகை பொருள் இதுவாகும்.. உணவின் சுவையை கூட்டுவதற்காக மட்டுமின்றி, ஆரோக்கியத்தையும் பேணுவதிலும் மிளகு தரும் பலன் எக்கச்சக்கம். அதனால்தான், 10 மிளகு இருந்தால் பகைவனையும் வெல்லலாம் என்கிறார்கள்.

கருப்பு மிளகுகள்: கருப்பு மற்றும் வெள்ளை மிளகு என்று 2வகையான மிளகுகள் உள்ளன.. இரண்டுமே நன்மை நிறைந்தவை.. கருப்பு மிளகில் மக்னீசியம், இரும்பு, வைட்டமின் கே, நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிரம்பு உள்ளன. அஜீரணக்கோளாறுகளை தீர்ப்பதில் முதன்மையானது மிளகுதான். உடலை நச்சுக்களிலிருந்து காப்பாற்றி, புற்றுநோயிலிருந்தும் விடுவிக்க உதவுவது இந்த மிளகுதான்.
கொலஸ்ட்ரால்: உயர் ரத்த கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், நீரிழிவு நோய்கள், கணைய பாதிப்புகள் போன்றவற்றை தடுத்து நிறுத்தி ஆரோக்கியம் தழைக்க பேருதவி புரிவதும் இந்த மிளகுகள்தான். கருப்பு மிளகை உணவில் சேர்த்து வந்தால், உயர் ரத்த சர்க்கரை அபாயமும் குறைகிறதாம். மிளகை பச்சையாக சாப்பிட்டால், புரதங்கள் செரிக்க உதவும்.. இரைப்பை குடல் நோய்களிலிருந்தும் விடுபடலாம். மலச்சிக்கலும் நிரந்தரமாக தீரும்.
இப்படி ஏகப்பட்ட நன்மைகள் மிளகில் இருந்தாலும், உடல் எடையை குறைக்க அடித்தளமிடுகிறது இந்த மிளகுகள்.. அதனால்தான், சமையலிலும் சரி, சூப்களை வைத்து குடித்தாலும் சரி, இந்த மிளகின் தேவையை தவிர்க்க முடியாமல் உள்ளது. மிளகில் உள்ள பைப்பரின் என்ற சேர்மம், நம்முடைய உடலிலுள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது.
இந்த மிளகை வைத்து டீ போட்டும் குடிக்கலாம்.. இதனால், கொழுப்புகள் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.. அத்துடன், சளி, இருமல், தொண்டை புண், தலைபாரம், இருந்தாலும் நீங்கிவிடும். ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும்.
வெள்ளை மிளகு: இதுபோலவேதான் வெள்ளை மிளகும், உடல் எடையை குறைக்க உதவுகிறது. காரணம் இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.. எனவேதான், ஆயுர்வேதத்தில், முக்கியமான இடத்தை பெற்றுள்ளது இந்த வெள்ளை மிளகு. வெள்ளை மிளகில் நார்ச்சத்து உள்ளது. இதனை தொடர்ந்து உட்கொள்வதால் செரிமான மண்டலம் வலுவடைந்து, அது தொடர்பான பிரச்சனைகள் குறையத் தொடங்குகின்றன.
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு ஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் கலந்து, கொதிக்கவிட வேண்டும்.. 1 டம்ளராக தண்ணீர் சுண்டியதும், எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்க வேண்டும். காலையில் இந்த டீ குடித்து வந்தால் உடல் எடை குறையும் என்கிறார்கள்.

கலோரிகள் எரிப்பு: கருப்பு மிளகு, வெள்ளை மிளகு என இரண்டிலுமே டீ போட்டு குடிக்க முடியாவிட்டாலும், வெறும் மிளகு தண்ணீரை குடித்தாலே போதும் என்கிறார்கள்.. இதனால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்க செய்வதுடன், உடல் எடையும் குறையும். தண்ணீரை கொதிக்க வைத்து, மிளகு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தாலே நன்மைகள் பல கிடைக்கும்.. கலோரிகளும் எரிக்கப்படும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications