சுரைக்காய்க்கு உப்பு இல்லையா? ஏன் தெரியுமா? நன்மைகளை தரும் சுரைக்காய்கள்.. இவங்க மட்டும் தொடக்கூடாது
சென்னை: பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் சுரைக்காய்களின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? இந்த சுரைக்காய்களை அனைவருமே சாப்பிடலாமா? சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்கிறார்களே, அது உண்மையா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நீர்க்காயை சேர்ந்த சுரைக்காயில், 98 சதவீதம் தண்ணீர் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.. அதனால்தான், உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சுரைக்காய்கள் கைகொடுத்து உதவுகின்றன. சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்வதால், நச்சுகள் நீங்குவதுடன், உடலுக்கு தேவைப்படும் நார்சத்துக்கள் போதுமான அளவுக்கு கிடைத்துவிடுகின்றன.

அதாவது, 100 கிராம் சுரைக்காயில் 15 கலோரிகள் மட்டுமே இருக்கிறதாம். உடல் பருமன் குறைவதுடன், சர்க்கரையின் அளவையும் சுரைக்காய்கள் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.. காரணம், இது குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட காய்கறியாகும்..
அதுமட்டுமல்ல, அடிக்கடி சுரைக்காயை உணவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு அபாயம் குறைகிறதாம்.. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவும் சேராமல் தடுக்கப்படுவதால், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த பேருதவி புரிகிறது.
வலிப்பு நோய்கள்:
சிறுநீர் கோளாறு இருப்பவர்கள் சுரைக்காயை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது... இதனால் உடலிலுள்ள கெட்ட உப்புகள் அனைத்தும் சிறுநீரகத்தின் வழியே வெளியேறிவிடும்.. உடலில் உள்ள கெட்ட உப்புகளை இந்த சுரைக்காய் வெளியே தள்ளிவிடுவதால், "சுரைக்காயை சாப்பிட்டால் உடலில் உப்பு சத்து இருக்காது" என்பதையே "சுரைக்காயில் உப்பு இல்லை" என்று கிண்டலான சொல்லாடல் மருவி வந்ததாம்.
சுரைக்காய்களில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் அதிகம் உள்ளன.. சமையலில் பயன்படுத்துவதைவிட, சுரைக்காய் ஜூஸ்கள்தான் மருந்தாக அதிகம் பயன்படுகின்றன. இன்சோம்னியா (insomnia), வலிப்பு நோய்களுக்கு சிகிச்சை தருவதில் இந்த சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது..
பித்த கோளாறு:
இந்த ஜூஸை நாம் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.. முதலில் சுரைக்காயை தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.. பிறகு, சுரைக்காய், சிறிது புதினா இலைகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சாறு எடுக்க வேண்டும். இந்த சாற்றில், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு குடிக்கலாம்.
பித்தம் தொந்தரவு இருப்பவர்கள், எலுமிச்சையை தவிர்க்கலாம்.. இந்த சுரைக்காய் ஜூஸில் நார்ச்சத்து தவிர, வைட்டமின், பொட்டாசியம், இரும்புச்சத்து அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் செரிமானம் சீராகிறது.. பித்த சம்பந்தமான கோளாறு, வயிறு உபாதைகள், போன்றவற்றுக்கும் இந்த சுரைக்காய் ஜூஸ் நல்ல பலனை பெற்றுத்தருகின்றன.
பலன்கள்:
இதயநாள நோய் சிகிச்சைக்கும் இந்த சுரைக்காய் ஜூஸ்தான் மருந்தாகிறது. அவ்வளவு ஏன், சுரைக்காய்களை ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால் புற்றுநோய் நோய்கூட அண்டாது.. கல்லீரலில் அழற்சி பிரச்சனை இருந்தால், சுரைக்காய் சாறுடன் சிறிது இஞ்சி சாறு கலந்து குடித்தால், கல்லீரல் வீக்கம் குறையும் என்பார்கள்.
சுரைக்காய் ஜூஸூடன் நல்லெண்ணெய்யும் சேர்த்து தலைமுடியின் வேர்க்கால்களில் நன்றாக தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்தல் குறைவதாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன.
தவிர்க்கலாம்:
எனினும், சீமை சுரைக்காய் அனைவருக்கும் பொருந்தாது. ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சுரைக்காய் ஆபத்தை தந்துவிடுமாம்.. கர்ப்பிணிப் பெண்களும் சுரைக்காயை தவிர்க்கலாம். ஆனால், மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமல் சுரைக்காயை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. அதேபோல, அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள், வாயு, அஜீரணம், வயிற்றுப் புண் இருந்தால் சுரைக்காய் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications