சர்க்கரை நோயாளி மோர் குடிக்கலாமா? கர்ப்பிணி ஒரு கிளாஸ் மோர் குடித்தால் பல நன்மை! ஜில் ஜில் நீர் மோர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தயிர் சாப்பிடுவதை காட்டிலும், நீர்மோர் சாப்பிட சொல்வது சிறந்தது என்பார்கள்.. ஏன் தெரியும்? வெறும் குளிர்ச்சிக்காகவே மட்டுமே நீர் மோர் சாப்பிடப்படுகிறதா? மோரில் உள்ள சத்துக்கள் என்னென்ன? பெண்களுக்கு மோர் எந்த வகையில் உதவுகிறது? மோர் குடிப்பதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன? சர்க்கரை நோயாளிகள் நீர்மோர் குடிக்கலாமா? இவைகளை எல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

நீர் மோர் தயாரிப்பது எப்படி தெரியுமா? இஞ்சி, கருமிளகு, சீரகம் இவைகளை கலந்து மோர் தயாரிக்கும்போது, கூடுதல் சத்துக்களை பெற முடியும். இதை காலையில் குடித்து வந்தால், உடல் சூடு, உடல் வறட்சி நீங்கும். செரிமானம் சீராகும்.. கொழுப்புக்கள் கரைந்து வெளியேறும்.. மலச்சிக்கல் தீர்ந்து குடல் பாதுகாப்பு அதிகரிக்கும்..

Sugar patients Buttermilk pregnant woman

மோரில் உள்ள சத்துக்கள்

நாள்தோறும் மோர் குடித்து வந்தால், உடலின் வளர்சிதை மாற்றம் அளவு அதிகமாகும்.. ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் மோர் குடிக்க வேண்டும். இதனால் ரத்த அழுத்தம் சீராகி, இதயமும் சீராக செயல்பட உதவும்.. கல்லீரலை சுற்றியுள்ள நச்சுக்களும் நீங்குகிறது.

100 மி.லி. மோரில் 62 கலோரிகள், புரதம் 3 கிராம், கொழுப்பு 3 கிராம், கார்போஹைட்ரேட் 5 கிராம் இருக்கிறது. மேலும் இதில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் A, C, B12, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், பான்டோதனிக் ஆசிட் போன்ற வைட்டமின்களும், தாதுக்களும் இருக்கின்றன.

கல்லீரலின் ஆரோக்கியம்

245 மில்லி லிட்டர் மோரில், 8 மி.கி புரோட்டீன், 98 கலோரிகள், 22 சதவீதம் கால்சியம், 22 சதவீதம் வைட்டமின், B12-ம், 3 மி.கி நார்ச்சத்து, 16 சதவீதம் சோடியம் போன்ற சத்துக்களும், ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர், ஆன்டி-பாக்டீரியல் போன்ற பண்புகளும் நிறைந்துள்ளன.

மோரில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் pH சமநிலையை சீராக்க துணை புரிகிறது.. இதனால் அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் குறைக்கிறது. நாம் சாப்பிடும் உணவிலுள்ள கழிவுகளை போக்கி, உணவின் சத்துக்களை முழுமையாக உடலுக்கு கொண்டு சேர்க்கும் பணியை மோரில் உள்ள சேர்மங்கள் செய்கின்றன.. இதனால், கல்லீரலின் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.

உடல் எடை குறைக்க

நீர் மோரில் பயோ ஆக்டிவ் புரதங்களும், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளதால் வாய், தொண்டை ஆரோக்கியம் காக்கப்படுகிறது. உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கலோரிகளை குறைந்த மோர் குடிக்கலாம். அதாவது 1 டம்ளர் மோரில் 40 கலோரிகளைவிட குறைவாக உள்ளதாம். கால்சியம் அதிகமாக உள்ள நீர்மோரை குடித்தால், எலும்புகளை பலமாக்கும்.. பற்களையும் உறுதி பெறச்செய்யும்..

பெண்களுக்கு உதவும் மோர்

பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் வாயு தொந்தரவுக்கு மோர் மருந்தாகிறது.. இதனால் அன்றாட தேவைப்படும் புரதமும் பெண்களுக்கு கிடைத்துவிடும்.. தலைமுடி அதிகமாக கொட்டினால், அல்லது தோல் சருமம் ஆரோக்கியமற்று காணப்பட்டால், நீர்மோர் அதற்கு உதவுகிறது. அதனால்தான் மோரில முகத்திற்கு மசாஜ் செய்வார்கள். இப்படி செய்வதால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கி சருமம் மினுமினுக்கும். மினுமினு சருமம் ஏற்படுவதுடன், தலைமுடி உதிர்வும் கட்டுக்குள் வரும்.

மோரில் வைட்டமின் C, B உள்ளதால் தலைமுடியும் வளர்ச்சி பெறும்.. மோரில் உளள லாக்டிக் அமிலம் மயிர்க்கால்களில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்ற செய்கிறது.. அடர்ந்த புதிய முடியை ஊக்குவிக்கிறது..

லாக்டிக் அமிலம்

அதனால்தான், தலை முடியை மோரை விட்டு சிலர் அலசுவார்கள்.. மோரில் உள்ள புரோபயாடிக் லாக்டிக் அமிலம், தலைமுடி மட்டுமல்லாமல் சருமத்துக்கும் மிகவும் நல்லது. நீர்மோர் தலைமுடிக்கு சிறந்த ஊட்டச்சத்தினை வழங்குகிறது..

மோரில் லாக்டிக் அமிலம், கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் D, A, B12, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், தலைமுடிக்கு சிறந்த சத்துக்கள் கிடைக்கின்றன.. மோரை தலைக்கு தேய்த்து, மசாஜ் செய்து 20 நிமிடம் ஊறவைத்து குளித்து வந்தால், இறந்த செல்கள் நீங்கி, தலைமுடியும் நீளமாக வளரச்செய்யும்.

சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

சர்க்கரை நோயாளிகளுக்கு நீர் மோர் மிகவும் நல்லது.. வெப்பத்தின் காரணமாக ஏற்படும் நீர் இழப்பு சார்ந்த அசௌகரியங்களையும், நோய்களையும் தடுத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க மோர் உதவுகிறது.. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக் இன்டெக்ஸ்) 35 என்று மிகக் குறைந்த அளவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக குடிக்கலாம்.

மோரில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளை பலப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புப்புரை) போன்ற எலும்பு நோய்களை வராமல் தடுக்கிறது. மோரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தி ஈறுகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. எனவே, உப்பு சேர்க்காமல் இயற்கை மோர் குடிப்பது நல்லது.

கர்ப்பிணிகள்

கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துக்கள் அவசியம்.தேவை.. வயிற்றிலுள்ள குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் கால்சியம் கட்டாயம் தேவை.. அந்த சத்துக்கள் மோரில் உள்ளது.. மோரிலுள்ள புரோபயாடிக், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கர்ப்பகாலத்தில் ஏற்படும் செரிமான கோளாறுகளையும் தீர்க்கிறது.. இது நல்ல நுண்ணுயிரிகளை குடலுக்குள் அதிகரிக்க செய்வதால் வயிற்றுப்போக்கு பிரச்சனை, இரைப்பை பிரச்சனைகளை குறைக்க செய்கிறது.

அதுமட்டுமல்ல கர்ப்பிணிகள் மோர் குடித்து வரும்போது, உடல் சூடு தணிகிறது.. நீரிழப்பை தடுக்க முடிகிறது.. குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் புரதம், வைட்டமின் D போன்ற சத்துக்கள் தாய்க்கு, சேய்க்கும் கிடைக்கிறது. எனவே மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று மோரை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

எப்போது மோர் குடிக்கலாம்

வெறும் வயிற்றில் மோர் குடிக்கக்கூடாது.. இது வயிறு எரிச்சல் உள்ளிட்ட உபாதைகளை ஏற்படுத்திவிடும். அதற்காக அதிகமாகவும் மோர் குடிக்கக்கூடாது.. 2 கிளாஸ் குடிக்கலாம். ஏனென்றால் மோரில் சோடியம் அதிகமாக உள்ளதால், அலர்ஜிகள் வரலாம். அதிலும், கிட்னி பாதிப்பு இருந்தால் மோர் அதிகம் குடிப்பதை தவிர்க்கலாம். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களும் மோர் குடிப்பதை குறைத்து கொள்ளலாம். அதிகமாக குடித்தால் ரத்த அழுத்தம் மேலும் அதிகமாகிவிடுமாம்.

அதேபோல மூட்டு வலி இருப்பவர்கள் மோர் தவிர்ப்பதே நல்லது. மூட்டு வலி, தசை வலி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் மோர் அதிகம் சேர்க்க கூடாது. மோர் சாப்பிடுவதால் மூட்டுகளில் விறைப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு..

எப்போதுமே முன்கூட்டியே மோர் தயாரித்து வைத்து கொள்ளக்கூடாது.. எப்போதுமே மோர் கலந்த சிறிது நேரத்திலேயே குடித்துவிட வேண்டும்.. அதை எடுத்துவைத்து, நேரம் கழித்து குடிக்கக்கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+