Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1+1 ஜூஸ்.. சடசடன்னு உடல் எடை குறையுதாமே.. வைட்டமின் + தாதுக்களின் "பவர்ஹவுஸ்" ஜூஸ் பற்றி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வைட்டமின்கள் + தாதுக்களின் "பவர்ஹவுஸ்" என்று சொல்லப்படும் காய் முட்டைக்கோஸ் ஆகும்.. உடல்எடை குறைய பலவிதமான ஜூஸ்களை முயற்சித்து பார்த்தவர்கள், முட்டைக்கோஸ் ஜூஸையும் முயற்சித்து பார்க்கலாம் என்கிறார்கள்..
வழக்கமாக முட்டைகோஸ் குழம்பு, பொரியல் செய்வார்கள்.. அல்லது சூப்கள், சாலடுகள் செய்வார்கள்.. சிலர் ஆம்லெட்களிலும் சேர்த்து பயன்படுத்துவார்கள்.

உடல் எடை: ஆனால் ஜூஸாக செய்து சாப்பிடும்போது நிறைய பலனை தருகிறதாம். பச்சை, ஊதா கலர்களில் உள்ள கோஸ்களை மிஸ் பண்ணவே கூடாது என்கிறார்கள். இவைகளில்தான், ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

Health Benefits of Cabbage Juice and Do you know how Cabbage Juice helps in weight loss

முட்டைக்கோஸில், வைட்டமின்கள், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், பொட்டாசியம், மெக்னீசியம், தயாமின், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, பைட்டோநியூட்ரியண்ட்ஸ், நார்ச்சத்து போன்றவை நிரம்பி உள்ளதால், ஒரு சத்தான காய்கறியாக திகழ்கிறது.. அத்துடன் குடலுக்கு நன்மை செய்யும், பாக்டீரியாக்களின் அளவை அதிகரித்து, கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.

முட்டைக்கோஸ் ஜூஸ்: முட்டைக்கோஸை பொடிபொடியாக நறுக்கி கொண்டு, அதனுடன் சிறிது இஞ்சி, சீரகம், புதினா இலைகள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து ஜூஸை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.. இதில், சிறிது கல் உப்பு, சிறிது எலுமிச்சம் சாறு, சிறிது மிளகுதூள் சேர்த்தால், முட்டைக்கோஸ் ஜூஸ் ரெடி

இந்த ஜூஸை காலை வெறும் வயிற்றில் குடித்தால், உடல் எடை குறையுமாம்.. காரணம், முட்டைகோஸில் கார்போஹைட்ரேட் என்பது சுத்தமாக கிடையாது.. அதனால், இந்த ஜூஸ் குடிக்கும்போது, அதிகமான கொலஸ்டிரால் கரைந்துவிடும்.. தொப்பை, மற்றும் தொங்கும் தசைகளும் குறைய ஆரம்பித்துவிடும்.

பலன்கள்: இந்த ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. கொலஸ்டிரால் இல்லாதவர்கள் இதை ஜூஸை குடிக்கும்போது, எதிர்காலத்தில், உடலில் கெட்ட அல்லது அதிக கொலஸ்ட்ரால் வருவதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிடும் என்கின்றன ஆய்வுகள்.

வைட்டமின் கே நிறைந்த முட்டைகோஸ் ஜூஸ், ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கிறது.. மலச்சிக்கல், குடல் பிரச்சினை, போன்றவற்றை தடுக்கிறது. அல்சர் பிரச்சனை இருந்தாலும் தீர்ந்துவிடும்.

தொற்றுநோய்கள்: அதுமட்டுமல்ல, முட்டைக்கோஸில் உள்ள சல்ஃபோராபேன், செல்களை புற்றுநோய் காரணிகளிலிருந்து தடுக்க பெரிதும் துணைபுரிகிறது.. முட்டைக்கோஸ் ஜூஸில் ஐசோசயனேட் உள்ளதால், மார்பக புற்றுநோய், நுரையீரல், வயிறு, புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற அபாயங்களையும் தடுக்க உதவுகிறது.

வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் எடுக்க முடியாமல்போனால், இரவு நேரங்களிலாவது, சூப் போல வைத்து, முட்டைக்கோஸை சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+