கோழிக்கறி எடுக்கறீங்களா? தினமும் சாப்பிடலாமா? சிக்கனில் இந்த "பீஸ்" மட்டும் தொடாதீங்க.. ஓஹோ அப்படியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசைவ உணவுகளில் கடல் உணவுகளுக்கு அடுத்தபடியாக உள்ளது கோழிக்கறிகள்.. நிறைய சத்துக்கள் உள்ள கோழிக்கறியை எப்படி சாப்பிடலாம்? தினமும் சிக்கன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? அதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

கோழிக்கறியில் அதிக அளவு புரோட்டீன் நிறைந்திருக்கின்றன.. இதனால் உடலுக்கு தேவையான அதிக ஆற்றலை சிக்கன் தருகின்றன.. அத்துடன் இது ஜீரணிக்க எளிதானது. எனவே கோழிக்கறி சாப்பிடுவது உங்கள் உடலை வலுவாக வைக்க உதவும்.

chicken chicken skin

கோழியில் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது.. இது கால்சியத்துடன் உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க தூண்டுகிறது.. இந்த அத்தியாவசிய தாதுக்கள், சிறுநீரகம், கல்லீரல், மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை வெகுவாக ஆதரிக்கிறது.. B-வைட்டமின், நியாசின் புற்றுநோய் மற்றும் பிற வகை மரபணு (DNA) சேதத்திலிருந்தும் நம்மை பாதுகாக்க செய்கிறது.

கொழுப்புகள்: எனினும் தினமும் சிக்கன் சாப்பிடுவது நல்லதா? என்ற சந்தேகம் வலுக்கிறது.. உண்மையை சொல்லப்போனால், தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரித்துவிடுமாம்.. கோழியில் உள்ள புரதம் உடலுக்கு நல்லதுதான் என்றாலும், அதிகப்படியான புரதத்தை சாப்பிட்டால், அது கொழுப்பாக உடலில் தேங்க ஆரம்பித்துவிடும். எனவே, தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடல் எடை கூடும் அபாயம் உள்ளது.

எல்டிஎல் கொலஸ்ட்ரால் அதாவது குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் கொலஸ்ட்ரால் என்பது நம்முடைய உடலுக்கு கெடுதலை தந்துவிடும்.. தமனிகளில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால் ரத்த ஓட்டத்தை இது தடுக்க நேர்ந்துவிடும். இதனால், இதயம் தொடர்பான அபாயமும் உடலுக்கு நேரிடலாம்.

சிறுநீர் பாதை: சில வகை கோழிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றை உண்டுபண்ணுவதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சிக்கன், உடலுக்கு சூட்டை தந்துவிடும்.. இது உடலிலுள்ள ஒட்டுமொத்த வெப்பநிலையையும் அதிகரிக்கலாம், அதிலும் கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடும்போது பல உஷ்ண தொந்தரவுகள் வரலாம்.

ஒருவேளை இயல்பாகவே சூடு உடம்பு உடையவர்கள் கோழிக்கறி சாப்பிட்ட பிறகு மூக்கில் ரத்தம் கொட்டினால், சில நாட்களுக்கு சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்துவிட வேண்டும். இதுபோன்ற தொந்தரவு இருந்தால் அல்லது சிக்கன் சாப்பிட்ட பிறகு வேறு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும்.

தோல் பகுதி: சிக்கனை அளவுடன் சாப்பிடுவது ஆரோக்கியமானதுதான்.. ஆனால், தினமும் சாப்பிடுவதால் இதுபோன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்... அதேபோல, கோழியின் தோல் பகுதியினை சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.. காரணம், இந்த தோலில் அதிக அளவு கெட்ட கொழுப்பும், குளோரின் எச்சங்களும் இருக்கக்கூடாது என்கிறார்கள்.

அப்படியே சிக்கன் தோல் சாப்பிட்டாலும், உடம்பில் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம். எனவே, தோலை தவிர்த்துவிட்டு சாப்பிடுவதே ஆரோக்கியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+