Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோழிக்கறி இறக்கை.. இதய நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா.. சிக்கன் லிவர் சத்து என்ன? இது தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோழிக்கறியில் உள்ள சத்துக்கள் என்னென்ன? கோழிக்கறியை இதய நோயாளிகள் சாப்பிடலாமா? சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக சிக்கன் இருக்கிறதா? நிபுணர்கள் சொல்வதென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

சிக்கன் உடலுக்கு நன்மை தரக்கூடியதுதான் என்றாலும், மொத்த கோழிக்கறியுமே சாப்பிடுவது நல்லதில்லையாம்.. சில பகுதிகளில் கொழுப்பு நிறைந்து உள்ளதால், சிக்கன் பகுதிகளையே தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியிருக்கிறது.

chicken chicken liver heart patients

சிக்கன் சத்துக்கள்: சிக்கனில், இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் மற்றும் B, A, D போன்ற வைட்டமின்கள் அடங்கியிருக்கின்றன. பாஸ்பரஸ், கால்சியம் போன்ற நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கும், பற்களுக்கும் பலத்தையும், பாதுகாப்பையும் தருகிறது. எனவே வளரும் பிள்ளைகளுக்கு ஏற்ற உணவாக கோழிக்கறி உள்ளது. அமினோ ஆசிட் நிறைந்துள்ளதால், குழந்தைகளுக்கு சிக்கன் அவசியமான உணவாக உள்ளது.

சளிசூடுத்தன்மை வாய்ந்த சிக்கனை வேக வைத்து சூப் வைத்து, மிளகுத்தூள் சேர்த்து குடிக்கும்போது, சளி, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம் போன்ற சுவாச கோளாறுகள் நீக்க துணைபுரிகிறது.

பெண்கள்: அதேபோல, சிக்கனில் மக்னீசியம் உள்ளதால், பெண்களுக்கு தவிர்க்க முடியாத உணவாகிறது.. இந்த கோழிக்கறியை சாப்பிடும்போது, பெண்களுக்கு ஏற்படும் வயிறு வலி நீங்குகிறது. இந்த சிக்கனிலுள்ள புரோட்டீன்கள், பெண்களுக்கு அவசியமான சத்துக்களாகும்.. கோழிக்கறியில் ஜிங்க் சத்துக்கள் உள்ளதால், ஆண்களின் டெஸ்ட்ரோஜன் அளவை சீராக வைத்திருக்க தூண்டுகிறது. புரதம் உள்ளதால், பெண்களுக்கு அவசியமான உணவாக கருதப்படுகிறது.

சிக்கனில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றாலும், நியாசின் என்ற சத்தும் உள்ளதால், கொலஸ்ட்ரைலை குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.. செலீனியம் என்ற சத்துக்கள் இந்த கோழிக்கறியில் அதிகமாக உள்ளன.. எனவே, மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக இது திகழ்கிறது. வைட்டமின் B5 நிரம்பியிருப்பதால், மன அழுத்தத்தை சிக்கன் விடுவிக்கிறது.

இதயநோய்கள்: வைட்டமின் B6 நிறைந்துள்ளதால், இதய நோய்கள் தடுத்து நிறுத்த உதவுகிறது.. எனினும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிக்கனை கவனமாக சாப்பிட வேண்டுமாம். அதாவது வேகவைத்த கோழியை சரிவிகித அளவிலோ அல்லது குறைந்த மசாலா மற்றும் சுத்தமான எண்ணெயிலோ சமைத்து சாப்பிடலாம். அதேசமயம், கொழுப்பு இல்லாத மற்றும் சீரான அளவில் கோழியை தேர்ந்தெடுத்து சமைப்பது முக்கியம்.

பொதுவாக, இதய நோயாளிகள் சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது தவிர அதிக கொழுப்புள்ள சிக்கன் சாப்பிடுவதும் இதய நோயாளிகளின் பிரச்சனைகளை அதிகரிக்கும்.. எனினும், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், அல்லது சிகிச்சைக்கு மருந்து எடுத்து கொள்பவர்கள், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடலாம்.

தவிர்க்கலாம்: உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், கோழி கால்கள், இறக்கைகள், தொடைப்பகுதியை தவிர்க்க வேண்டும்.. காரணம், இந்த பகுதிகளில் கொழுப்புகள் அதிகமாம்.

கோழியின் மார்பு பகுதியில் நிறைய புரோட்டீன்கள் உள்ளதால், மார்புப்பகுதி சதையையே வாங்கி சமைப்பது நல்லது. அதேபோல, சிக்கன் ஈரல் மிகவும் சத்துக்கள் நிறைந்தது.. அனைத்து உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் இந்த ஈரலில் தான் நிரம்பியிருக்கின்றன. இரும்பு, வைட்டமின் ஏ, காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, செலினியம், துத்தநாகம் இப்படி நிறைணுய சத்துக்கள் உள்ளதால், அனீமியா தொந்தரவு உள்ளவர்கள், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஈரலை தவிர்க்கக்கூடாது.

உயிர்ச்சத்து: போலிக் அமிலமும், B12 உயிர்ச்சத்தும் அதிகமாக உள்ளதால் புதிய ரத்த அணுக்களை உருவாக்கவும் இந்த ஈரல் உதவுகிறது. உடல் சோர்வு நீங்கி, பலம் பெருகும். ஆனால், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இதை குறைவாக சாப்பிட வேண்டுமாம். அதேபோல, எண்ணெய், மசாலா குறைவாக பயன்படுத்தி, முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை சேர்த்து சிக்கன் குழம்பு வைக்கலாம். இப்படி சாப்பிடும்போது, சிக்கனிலுள்ள முழு சத்துக்களையும் வீணாகாமல் பெற முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+