வெறும் வயிற்றில் "இதை" சாப்பிட்டாலே போதும்.. மறந்தும் தொடக்கூடாத காலை உணவு இதுதான்.. சூப்பர் இலை சூப்
சென்னை: ஒருவருக்கு காலை உணவுதான் மிக மிக முக்கியமாகிறது.. காலையில், குறிப்பாக வெறும் வயிற்றில் நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அதுதான் நம்முடைய அன்றைய தினத்தின் மொத்த ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. அப்படியானால், வெறும் வயிற்றில் நாம் என்னதான் சாப்பிடுவது?
வெறும் வயிற்றில் நீராகராம் குடிக்கலாம்.. நீச்சத்தண்ணி என்பார்கள்.. ஐஸ் பிரியாணி என்பார்கள்.. பழைய சோறு கஞ்சி என்பார்கள்.. மீந்துபோன இந்த பழைய சோறுதான், சீனாவிலும் பாரம்பரிய சாப்பாடு.

பழைய சோறு: நம்ம பக்கத்து மாநிலமான கேரளாவில்கூட, இதுபாரம்பர்யம் மிக்க உணவாக விளங்குகிறது. அவ்வளவு ஏன், உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு என்று அமெரிக்க ஆய்விலும் தெரியவந்துள்ளது.
உண்மையை சொல்லப்போனால், வடித்த சாதத்தை விட, இந்த பழைய சோறு தண்ணீரில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன.. வழக்கமாக சாதத்தில் உள்ள இரும்பு சத்தைவிட, 21 மடங்கு இரும்புச்சத்து இந்த நீராகாரத்தில் உள்ளதாம். உடலில் எதிர்ப்பு சத்துக்களை அதிகரிக்க செய்வதால்தான், இதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.
இரும்புச்சத்து: இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிட்டால், லட்சக்கணக்கான நல்ல, நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிவிடும்.. இதை வெறும் வயிற்றில் குடிக்கும்போது, உடல் உஷ்ணம் குறையும்...
மிகச்சிறந்த மலமிளக்கி.. அல்சர் புண்களும் மெல்ல மெல்ல ஆறும்.. சிறுகுடல் ஆரோக்கியம் அடையும்.. மிகச்சிறந்த எனர்ஜி நிறைந்த பானமாகவும், திகழ்கிறது. இதனால், புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் நிறைந்துள்ளதால், உடல் எடையை குறைப்பதில் மிகப்பெரிய பங்கினை இந்த பழைய சோறு தண்ணீர் வகிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், வயதான தோற்றத்தை தள்ளி போட செய்கிறது.
டீ காபி: வெறும் வயிற்றில், டீ, காபியை அறவே தவிர்க்க வேண்டும். வயிற்றுக்கோளாறு, குடல்புண், செரிமானக் குறைபாடுகளை தந்துவிடும்.. அதற்கு பதிலாக, எளிதில் சக்தி தரக்கூடியதும், எளிதில் ஜீரணமாகக்கூடியதுமான பானங்கள் அல்லது உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
வெந்தய விதையில் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு நல்லது மற்றும் உடலில் சேரும் நச்சுக்களை இது வெளியேற்றும். இந்த சூப்பர்ஃபுட் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இவை வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக, வெந்தயத்தில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். வெந்தயத்தில் டீ போட்டுக்குடிக்கலாம்..
சீரக டீ : அல்லது சீரகத்தண்ணீர் அல்லது சீரகத்தில் டீ போட்டுக் குடிக்கலாம்.. சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.. வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கக்கூடியது. குழந்தைகளுக்கு பல தானியங்கள் கலந்த சத்து மாவுக்கஞ்சி பால், வெல்லம், நாட்டுச்சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.
அல்லது கேழ்வரகை முளைக்கட்டி அரைத்து, பால் எடுத்து கஞ்சி காய்ச்சியும் தரலாம்.. கால்சியம் நிறைவாக உள்ளதால், எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த பானமாக உள்ளது. அதேபோல, பாதாம், சோயா போன்றவற்றை நீரில் ஊறவைத்து அரைத்து, பால் எடுத்து, கஞ்சி காய்ச்சி தந்தாலும், உடல் பலம் பெறும். இதனுடன் வெல்லம், ஏலப்பொடி, நாட்டுச்சர்க்கரை அல்லது பனைவெல்லம் கலந்து குடிக்க தரலாம்.
இளம்பெண்களாக இருந்தால், உளுந்தங்கஞ்சி காய்ச்சி தரலாம்.. அதேபோல தேங்காய்ப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால், அல்சர் வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கும். அல்சர் பிரச்சனையும் தீரும். முருங்கையிலை சூப் குடிக்கலாம்.

காய்கறிகள்: காய்கறிகளில் சூப் வைத்து மிளகு சேர்த்து குடிக்கலாம்.. கேரட், முள்ளங்கி, வெள்ளரியாக இருந்தால் பச்சையாகவே சாப்பிடலாம்.. முளைக்கட்டிய பயறு வகைகள் ஏதாவது ஒன்றை காலையிலேயே எடுத்துக் கொள்ளலாம்.. இவைகளில், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகின்றன. இதயத்தை காக்கின்றன.
அதேசமயம், காலையிலேயே அதுவும் வெறும் வயிற்றிலேயே மிகவும் புளிப்பு உணவுகளான எலுமிச்சை, புளி, தக்காளி போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.. வாழைப்பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், சிக்கன், மட்டன், மீன் போன்ற இறைச்சியை தவிர்க்க வேண்டும்.
பித்தம், வாந்தி: முக்கியமாக, வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கவே கூடாது... பித்தம், வாதத்தை அதிகப்படுத்தி, வயிற்று உபாதைகள், குடல் நோய்களை தந்துவிடும். வாழைப்பழத்தை எப்போதுமே உணவுக்கு பிறகு சாப்பிடுவதே சிறந்தது. வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து, நீரில் ஊற வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நல்ல பலன் தரும்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications