ஓடிடியில் பெத்தி.. ஜான்வி கபூர் கவர்ச்சிக்காக காத்திருந்த ரசிகாஸ் ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம்சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார் உள்ளிட்ட பலர் நடித்த பெத்தி (Peddi) திரைப்படம் ஜூன் 4ம் தேதி தியேட்டரில் வெளியாகி, கவர்ச்சி காட்சிகளுக்காக, விமர்சனங்களை வாங்கிக் கட்டிய நிலையில், ஜூலை 9ஆம் தேதி முதல், Netflix தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆனால், ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகள் பல கட் செய்யப்பட்டுவிட்டன.

ராம்சரண் நடிப்பில் பெத்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியான போது பெரிய விவாதங்கள் கிளம்பிவிட்டது. இதில் ஜான்வி கபூர் ரொம்பவும் கவர்ச்சியாக காட்டப்படுறாங்களே என்று திரைத்துறையினரே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். படம் வெளியான பிறகு சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு அடி வாங்கியது.

ஜான்வி கபூர் காட்சி

இந்த படத்தில் ஜான்விகபூரை இவங்க கவர்ச்சிக்காக மட்டுமே காட்டி இருக்கிறார்கள், அதுவும் கேமரா ஆங்கிள் அவரை ரொம்பவும் மோசமாக காட்டி இருக்கிறது..., ஜான்வி கபூருக்கு தெரிந்தே இப்படி நடித்தாரா? அல்லது அவருக்கே தெரியாம தான் இது போல மோசமான காட்சி எடுத்து வைத்திருக்கிறார்களா? என்று கூட அவருடைய ரசிகர்களும் நொந்து கொண்டனர்.

இந்த விவகாரம் அந்த சமயத்தில் பெண்கள் திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் விதம் குறித்து பெரிய விவாதத்தை கிளப்பியது. ஜான்வி கபூர் ஆச்சியம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் கேரக்டருக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத கவர்ச்சி பொம்மை போல காட்டி இருந்தனர் என்று பலர் சொல்லி வந்தனர்.

Peddi Ram Charan Janhvi Kapoor Buchi Babu Sana Netflix Peddi

பெத்தி திரைப்பட சர்ச்சை

அந்த படத்தில் ராம்சரண் ஆச்சியம்மாவுக்கு அனுமதி இல்லாமல் உதட்டில் முத்தம் தருவது போலவும், அதுதான் காதலை வெளிப்படுத்தும் விதம் என்று நியாயப்படுத்துவது போலவும் காட்சி இருந்தது. இதுவும் விவாதத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது. இது குறித்து நடிகை நித்யா மேனன் ஒரு பேட்டியில் பேசும்போது கூட, நடிகைகள் ஒவ்வொரு படத்திற்கு கமிட்டாகும்போதும் தங்களுடைய எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். தங்களை போகப்பொருளாக பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உறுதியாக சொல்லிவிட வேண்டும் என்று சொல்லி இருந்தார்.

இதுபோல பல பிரபலங்கள் கருத்து தெரிவித்திருந்தனர் இதனாலையே இந்த படத்தின் இயக்குனர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு இருந்தார். அதோடு அவர் ஜான்வி கபூர் கேரக்டரை இவ்வளவு கவர்ச்சியாக காட்டியதற்கு காரணம் என்னவென்றும் அப்போது பேசியிருந்தார். அதாவது நாங்க ஜான்வி கபூரை ஒரு ஸ்ட்ராங்கான கேரக்டரில் தான் காட்ட வேண்டும் என்று காட்சிகள் எடுத்திருந்தோம். ஆனால் படத்தின் நீளம் கருதி சில காட்சிகளை கட்பண்ண வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.

Peddi Ram Charan Janhvi Kapoor Buchi Babu Sana Netflix Peddi

மன்னிப்பு கேட்ட இயக்குனர்

மூன்று காட்சிகளை கட் பண்ணியதால் தான் படத்தில் அவருடைய கேரக்டர் ஸ்ட்ராங்காக இல்லாமல் போய்விட்டது. அதுபோல அவருடைய காட்சிகளும் இப்படி விமர்சனங்களை சந்தித்து விட்டது. நான் பெண்களை போக பொருளாக காட்டும் நபர் கிடையாது என்று கூட அவர் பேசி இருந்தார். இவ்வளவும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த படம் ஓடிடியில் வந்த போது ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகளை அப்படியே தூக்கி விட்டார்கள்.

நடிகை ஸ்ரீதேவியின் கடைசி படத்தில் நடந்த சம்பவம்.. அவர் அறைக்குள் கணவரையே அனுமதிக்கல! போனி கபூர் ஓபன்
இதுதான் இப்ப தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இந்த படம் தியேட்டரில் வெளியான போது தமிழ் ரசிகர்கள் பெரிதாக அதை போய் பார்த்திருக்க மாட்டார்கள். ஓடிடிக்கு வரட்டும் அப்போ பார்த்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தனர். இப்போ ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே படம் ஓடிடிக்கு வந்துவிட்டது‌. ஜான்வி கபூருக்காக ஓடிப்போய் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு தான் கொஞ்சம் ஏமாற்றமாம். அது குறித்து கூட பலர் நொந்து போய் ட்விட்டரில் கமெண்ட்களை கொட்டுகிறார்கள்.

Peddi Ram Charan Janhvi Kapoor Buchi Babu Sana Netflix Peddi

ரசிகர்களுக்கு ஏமாற்றம்

நாங்க நினைச்சது வேற ஆனா இங்க ஜான்விகபூரை எப்படியோ மாற்றிவிட்டார்கள் என்று அவர்கள் புலம்புவதை பார்த்து சிலர் திட்டி தீர்த்து வருகின்றனர். நாங்க படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் அந்த காட்சிகளை எல்லாம் தூக்கிட்டு எடிட்டட் காட்சிகளோடு ஓடிடியில் விட்டிருக்கிறார்கள். நீங்க இப்படி பேசுறீங்களே என்று அவர்கள் பதிலடி சொல்லி வருகிறார்கள். குடும்பத்தோடு இந்த படத்தை பார்க்க முடியாதோ என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு இப்ப கொஞ்சம் நிம்மதி கிடைத்திருக்கிறதாம்.

OTT: இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? வீக் எண்ட்க்கு ரெடியான படங்கள்.. இத்தனை ஹிட் மூவி இருக்கே!
அதே நேரத்தில் சிலர் இயக்குனரையும் பாராட்டுகிறார்கள். இந்த படத்தின் காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதும் அதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த காட்சிகளையும் நீக்கி விட்டாரே என்று சிலர் சொல்லி வருகிறார்கள். அது மட்டும் அல்ல இந்த படத்தின் கிரிக்கெட் காட்சிகளை கூட என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்பது போல எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று கூட சிலர் கலாய்க்கிறார்கள். சரி இன்னும் போக போக இந்த படத்திற்கு என்னவெல்லாம் ட்ரோல் வரப்போகிறதோ பொருத்திருந்து பார்ப்போம்.

கொசுறு தகவல்.. என்னதான் ஆபாச டயலாக்கை கட் செய்து சில கவர்ச்சி சீனை வெட்டினாலும், இப்போது நீங்கள் பார்த்தாலும் ஜான்வி கபூர் வரும் காட்சிகளில் கவர்ச்சிதான் மிஞ்சுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+