Sombu uses: சோம்பு தண்ணீர் குடிங்க! தொப்பை குறைந்து! வயிறு ஃபிளாட்டாகுமே!
சென்னை: சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் யாவை என்பதை பார்க்கலாம். சோம்பை ஒரு வாசனை பொருளாக பார்க்காமல் அதில் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சோம்பு 'அபியேசியே' குடும்பத்தைச் சேர்ந்த நறுமணமிக்க ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் தென்மேற்கு ஆசியா பகுதிகளை தாயகமாகக் கொண்டது.

சோம்பு அதிமதுரம், அன்னாசிப்பூ வகையில் பயன்படுத்தப்படும் சில செடிகளுக்கு இணையான சுவையை உடையது. சோம்பு மருத்துவத்தில் பயன்படும் ஓர் மூலிகைத் தாவரம் ஆகும்.
பெருஞ்சீரகம் மருத்துவ பயன்கள்
இந்திய மசாலா பொருட்களில் தவிர்க்க முடியாத ஒரு மசாலா பொருள் தான் சோம்பு. இந்தியர்கள் உணவிற்குப் பின் வாய் புத்துணர்ச்சிக்காக சாப்பிடுவார்கள். சோம்பு வாய் புத்துணர்ச்சிக்கு மட்டுமல்லாமல் இன்னும் பல ஏராளமான உடல் நன்மைகளை கொண்டிருக்கிறது. அதனால்தான் சோம்பு உணவில் முக்கிய அங்கமாகக் இருக்கிறது. சோம்பு சேர்த்து சமைக்கும் உணவுகள் ஒரு வித நறுமணத்துடன் இருக்கும். இது பெருஞ்சீரகம் என்றும் அழைக்கப்படுகிறது.
சோம்பின் மருத்துவ பயன்கள்
பிரியாணி, பல வகை அசைவ உணவு போன்ற மசாலா அதிகம் சேர்த்த உணவுகளை சாப்பிட்டபின் இறுதியாக சோம்பு கொஞ்சம் வாயில் போட்டு கொண்டால் அந்த உணவு எளிதில் செரிக்கும்.
நல்ல தூக்கம் பெற உதவும்
ஒரு சிலருக்கு வேலைப்பளு, மனஅழுத்தம் மற்றும் உடல் நல பிரச்சனைகள் காரணமாக சரியாக தூக்கம் வராது. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு தினமும் சோம்பு சேர்த்த உணவுகளை உணவில் சேர்த்து வந்தால் அதில் உள்ள மெக்னீசியம் சத்து நரம்புகளுக்கு வலிமையளித்து ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவுகிறது.
மலட்டுத்தன்மை போக்கும்
மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ள ஆண் பெண் இருவரும் மற்ற மருந்துகளை சாப்பிடும் போது, சிறிதளவு சோம்பையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே மலட்டுத்தன்மை நீங்கும்.
உடலுக்கு குளிர்ச்சியளிக்கும்
உடல் சூட்டைத் தணிக்க வெறும் வாயில் சோம்புவை மென்று தின்றால் உடல் சூடு தணியும். வெயில் காலங்களில் சமைக்கப்படும் உணவுகளில் சோம்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதன் காரணம் சோம்பில் உள்ள குளிர்ச்சித் தன்மைக்காகத்தான்.
வயிற்று வலி தீரும்
குழந்தைகள் வயிற்று வலியால் துடித்தால் உடனே சோம்பு கொடுங்கள். இதனால் வயிறு களிமண் போல் கணமாக இருந்தாலோ, வயிற்று வலி இருந்தாலோ வலி உடனடியாக சரியாகும்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்
நீரிழிவு நோய் உள்ளவர்கள் சோம்பை கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் பராமரிக்கும்.
வாயுப் பிரச்சனை நீங்கும்
உடல் அஜீரணத்தால் வாயுப் பிரச்சனை ஏற்படுகிறது. சோம்பை சிறிது சாப்பிட்டால் வயிற்றுக்குச் செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தை சரி செய்து ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனால் வாயு பிரச்சனை குணமாகும்.
கண் பார்வை தெளிவடையும்
கண்கள் மங்களாகத் தெரிவது, தூரப் பார்வை, கிட்டப் பார்வை போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் சோம்பை தினமும் எடுத்துக் கொள்ளலாம். கண் பார்வைக் கோளாறுகள் இல்லாதோரும் உட்கொள்வதால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
புத்துணர்ச்சி அளிக்கும்
சோம்பு டீயை தினமும் குடித்து வந்தால் உடலின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். டீ, காஃபிக்கு சோம்பு டீ நல்ல மாற்றாக இருக்கும். இதை அருந்துவதால் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
சுவாச பிரச்சனைளை நீக்கும்
குளிர்காலங்கள் மற்றும் மழைக்காலங்களில் ஜலதோஷம் வந்தால் சரியாக சுவாசிக்க கூட முடியாது, அந்த சமயங்களில் மிகவும் சிரமப்படுவோம். அந்த சமயங்களில் இந்த சோம்பை சிறிது எடுத்துக்கொண்டு வெறும் வாயில் நன்றாக மென்று சாப்பிட்டு, ஒரு டம்ளர் வெந்நீர் பருகி வந்தால், இந்த ஜலதோஷம் பிரச்சனை உடனே சரியாகும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்கும்
குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு மார்பகங்களில் பால் சுரப்பு, சில சமயங்களில் குறைந்து தேவையான அளவு கிடைக்காது. தாய்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் சோம்பை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இதிலுள்ள "அனீதோல்" எனப்படும் வேதிப்பொருள், பெண்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.
நீர்கோர்ப்பு சரியாகும்
நீர்கோர்ப்பு அல்லது நீர்கோர்த்துக்கொள்ளுதல் என்பது சிலருக்கு கை கால்களில் உள்ள திசுக்களில் நீர் அதிகம் சேர்ந்து நடக்கும்போதும் மற்ற வேலைகள் செய்யும்போதும் மிகுந்த துன்பத்தை கொடுக்கும். நீர்கோர்த்துக் கொள்ளுதல் பிரச்சனை உள்ளவர்கள், அவ்வப்போது சோம்பு சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்திருக்கும் அதிகளவு நீரை, சிறுநீர் மூலமாக வெளியேற்றும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications