அழுவதால் உடலுக்கு ஏற்படும் அற்புத நன்மைகள்! மன அழுத்தத்தை குறைக்கும் இயற்கை மருந்து!
அழுவது என்பது பலவீனத்தின் அடையாளம் என்று நாம் பலமுறை தவறாகக் கருதுகிறோம். ஆனால் உண்மையில் அழுவது என்பது உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் ஒரு அற்புதமான இயற்கை நிகழ்வாகும். இது மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
கண்ணீர் சிந்துவது என்பது வெறும் உணர்ச்சிகளின் வெளிப்பாடு மட்டுமல்ல, அது ஒரு உயிரியல் செயல்முறையாகும். நமது உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் கண்ணீர் ஒரு சிறந்த வடிகாலாகச் செயல்படுகிறது. இதன் அறிவியல் பின்னணியை இங்கே விரிவாகக் காண்போம்.

மன அழுத்தத்தைக் குறைக்கும் கண்ணீர்
நாம் உணர்ச்சிவசப்பட்டு அழும்போது நமது உடலில் உள்ள கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் வெளியேற்றப்படுகின்றன. இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மனதிற்கு ஒருவித நிம்மதியைத் தருகிறது. அழுத பிறகு மனம் லேசாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதற்குத்தான் எந்த துக்கமாக இருந்தாலும் வாய்விட்டு அழுதுவிட வேண்டும் என்பார்கள். துக்கத்தை மனதிற்குள்ளேயே போட்டிருந்தால் அது தேவையற்ற மன அழுத்தத்தை கொடுக்கும்.
அழுகையின் போது உடலில் எண்டோர்பின் மற்றும் ஆக்ஸிடோசின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இயற்கையான வலி நிவாரணிகளாகச் செயல்பட்டு மன மற்றும் உடல் வலியைத் தணிக்கின்றன. எனவே உணர்ச்சிகளை அடக்காமல் வெளிப்படுத்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
கண்ணீரில் 'லைசோசைம்' (Lysozyme) என்ற ஒரு வகை திரவம் உள்ளது. இது கண்களில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டது. வெறும் 5 முதல் 10 நிமிடங்களில் கண்களில் உள்ள 90 சதவீத கிருமிகளை இது நீக்கிவிடும்.
கணினி மற்றும் மொபைல்களைத் தொடர்ந்து பார்ப்பதால் கண்கள் வறண்டு போக வாய்ப்புள்ளது. அழும்போது சுரக்கும் கண்ணீர் கண்களுக்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்கி பார்வையைத் தெளிவாக்குகிறது. இது கண்களின் சவ்வுப் படலத்தைப் பாதுகாத்து எரிச்சலைக் குறைக்கிறது.
தூக்கமின்மைக்குச் சிறந்த தீர்வு
மனதில் பாரத்தை வைத்துக் கொண்டு தூங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு அழுகை ஒரு மருந்தாக அமைகிறது. அழுது முடித்த பிறகு உடல் தளர்வடைந்து இதயம் சீராகத் துடிக்கத் தொடங்கும். இது ஆழ்ந்த உறக்கத்தைப் பெற பெரிதும் உதவுகிறது.
குழந்தைகள் அழுது முடித்தவுடன் சீக்கிரம் தூங்கிவிடுவதை நாம் பார்த்திருப்போம். அதே தத்துவம் பெரியவர்களுக்கும் பொருந்தும். மன அழுத்தம் நீங்கி உடல் அமைதி நிலைக்குத் திரும்புவதால் தூக்கமின்மை பிரச்சனை இயற்கையாகவே சரியாகத் தொடங்குகிறது.
யார் கவனமாக இருக்க வேண்டும்?
- காரணமே இல்லாமல் அடிக்கடி அழுது கொண்டே இருப்பவர்கள்.
- அழுத பிறகும் மனபாரம் குறையாமல் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவது.
- அழுகையினால் அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமல் முடங்கிப் போவது.
- தொடர்ச்சியான சோகம் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள்.
கண்களுக்கான எளிய பராமரிப்பு டிப்ஸ்
அழுது முடித்த பிறகு கண்கள் வீங்கியது போலத் தோன்றினால், ஒரு சுத்தமான துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். இது கண்களின் வீக்கத்தைக் குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும். மேலும் வெள்ளரிக்காய் துண்டுகளைக் கண்களின் மேல் வைப்பதும் சிறந்த பலனைத் தரும். அதற்காக எல்லாவற்றுக்கும் அழுது கொண்டே இருக்கக் கூடாது. நம்மால் முடிந்தவரை பிரச்சினைகளை எதிர்த்து எதிர்நீச்சல் போட வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்கள் விழிப்புணர்விற்காக மட்டுமே பகிரப்படுகிறது. ஏதேனும் தீவிரமான மனநலப் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக ஒரு மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications