White Pumpkin: தினமும் காலையில் வெறும் வயிற்றில்! வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன பயன்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். உடல் எடையை குறைக்க, உடல் சூட்டை தணிக்க இந்த ஜூஸை குடிக்கலாம். உடலில் உள்ள அழுக்குகளை நீக்கும் சக்தி இந்த வெண் பூசணிக்கு உண்டு.

இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மைகள்?

health white pumpkin

வெள்ளைப் பூசணி உடலுக்கு இது பலவகையாக நன்மைகளை தருகின்றது. இதில் வைட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது.

தினமும் காலையில் காபி அல்லது டீக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால், நாள் முழுவதும் மனநிலை சிறப்பாக இருக்கும். ஏனெனில் வெள்ளைப்பூசணியில் உள்ள சத்துக்களானது நரம்புகள் மற்றும் மூளையை அமைதியடையச் செய்து, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்கும்.

சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும்.

அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி ஜூஸ் உடனடி பலனைத் தரும். தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் உடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெள்ளை பூசணி ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும். உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள் வெள்ளைப் பூசணி ஜூஸைக் குடித்து வந்தால், உடல் சூடு தணியும் மற்றும்ட உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

வெள்ளை பூசணி ஜூஸில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலின் உட்பகுதியில் ஏதேனும் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, அதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டால், அதனை வெள்ளை பூசணி ஜூஸ் தடுக்கும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+