முந்நூறு நோயை விரட்டும் முருங்கைக்கீரை.. அதென்ன முருங்கை டீ? முருங்கையிலை கஷாயம் குடிக்கலாமா? அருமை
சென்னை: முருங்கைக்கீரையை தினமும் ஒரு கைப்பிடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முருங்கையிலையில் டீ தயாரித்து குடித்தால், என்னென்ன நோய்கள் தீரும்? முருங்கை கஷாயம் யாருக்கு நல்லது? சுருக்கமாக பார்ப்போம்.
முருங்கை கீரையில், துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் உள்ளன.. எனவே, உணவில் இந்த கீரையை சேர்த்து கொள்ளும்போது, வைட்டமின் A, B, K, D, E, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல முக்கிய சத்துக்கள் கிடைக்கும்.

மருத்துவ குணம்: இந்த முருங்கைக்கீரையில் 90 வகையான சத்துக்களும், 46 வகையான மருத்துவ குணமும் உள்ளதால், கிட்டத்தட்ட மனித உடலில் 300 வகையான நோய்கள் வராமல் தடுக்க செய்கிறது இந்த முருங்கைக்கீரை.. அதுமட்டுமல்ல, 67 வகையான நோய்களை குணப்படுத்துவதாக ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.
மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட, 25 மடங்கு இரும்பு சத்து அதிகமாக உள்ளதால்தான், பெண்கள், குழந்தைகள் அனைவருமே முருங்கைக்கீரையை தவறாமல் சாப்பிட சொல்கிறார்கள்.
இரும்புச்சத்து: மற்ற கீரைகளில் இருப்பதைவிட, 75 சதவீத அதிகமான இரும்புச்சத்து, முருங்கை கீரையில் உள்ளது. ஆரஞ்சைவிட 7 மடங்கு அதிகமான வைட்டமின் C-யும், பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியமும், கேரட்டில் உள்ளது போல வைட்டமின் A சத்துக்களும், வாழைப்பழத்தில் உள்ளதுபோல போல 3 மடங்கு பொட்டாசியம் சத்துக்களும் முருங்கை கீரையில் உள்ளது.
ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் முருங்கைக்கீரையில் உள்ளன.
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க கூடாத கீரை இதுவாகும்.. ஏனென்றால், முருங்கை காய்கள், பட்டை மற்றும் இலைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குளோரோஜெனிக் அமிலம் மற்றும் உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் முருங்கையிலையில் அடங்கியிருப்பதால், உடல் எடையும் மெல்ல குறைய துவங்கும்.
முருங்கை இலைகளை சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் குறையும்... அல்சரை குணப்படுத்தும்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.. இந்த கீரையிலிருக்கும் ஆக்ஸிஜனேற்றங்கள், உடலில் ஏற்படும் வீக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது.. இதயத்தை காக்கிறது..
முருங்கைக்கீரை எப்படி சாப்பிட்டாலும் பலன் தரக்கூடியது.. இந்த கீரை காய்ந்து போனாலும் சத்துக்களை இழப்பதில்லை.. அந்தவகையில், டீ தயாரித்தும் குடிக்கலாம்..
முருங்கை டீ : ஏனென்றால், முருங்கை டீயில், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் உட்பட ஏராளமான சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவைகள் இருப்பதால், உடலிலுள்ள வீக்கத்தை குறைக்க செய்கின்றன.. இதன்மூலம், உடலிலுள்ள யூரிக் அமிலம் குறைக்கப்படுகிறது. இதனால் கீல்வாதத்தின் வலியும் மெல்ல குறைய ஆரம்பிக்கிறது.
கஷாயம்: இக்கீரையில் கஷாயம் வைத்தும் குடிக்கலாம்.. ரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துவதற்கு, இந்த முருங்கை இலை கஷாயம் உதவியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முருங்கைகாய் கஷாயம் குடித்தவர்களுக்கு சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் இரண்டிலும் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
நோய் தொற்று பாதிப்புகளிலிருந்து உடலை பாதுகாப்பதில் முருங்கையிலை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆய்வில் 1.5 ஸ்பூன் அளவுக்கு முருங்கை இலை பவுடரை தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர். அதோடு நீரிழிவு நோய், இதய பாதிப்பு , அல்சைமர் போன்ற பிரச்னைகளும் இருக்காது என்றும் தெரியவந்துள்ளது.
மூட்டுவலி, வாயுக் கோளாறு, கண் தொடர்பான நோய்களுக்கு முருங்கைக் கீரையை அவித்து சாப்பிட்டு வந்தாலே போதுமாம்.. வாயுக்கோளாறு இருப்பவர்கள் இந்தக்கீரையுடன் பூண்டு பல் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வாயு பிரச்சனை அண்டாது
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications