முருங்கைக்கீரை செம ஹேர் பேக்.. அடர் தலைமுடிக்கு முருங்கை இலை.. உடையாத தலைமுடிக்கு முருங்கை எண்ணெய்
சென்னை: தலைமுடி வளர்ச்சிக்கும், முருங்கைக்கீரைக்கும் உள்ள நெருக்கம் அதிகம்.. முருங்கைக்கீரைகளை சரியான விகிதத்தில், சரியான முறையில் உணவில் சேர்த்து கொண்டாலே, தலைமுடி பிரச்சனைகள் அத்தனையும் தீரும். அதனை சுருக்கமாக பார்ப்போம்.
முருங்கைக் கீரையில் உள்ள சத்துக்களை அளவிடவே முடியாது.. அதிலுள்ள வைட்டமின் C, வைட்டமின் E போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தலைமுடியை பாதுகாக்க செய்கின்றன..

சத்துக்கள் என்னென்ன: குறிப்பாக, UV கதர்களுக்கு எதிரான சேதத்தில் இருந்து பாதுகாப்பை தருகின்றன.. முருங்கைக் கீரையிலுள்ள வைட்டமின் K சத்துக்கள், மயிர்க்கால்களில் இயற்கையான எண்ணெய் உற்பத்தியின் அளவை அதிகரிக்க செய்கின்றன.. இதனால் தலைமுடியில் வறட்சிகள் கட்டுப்படுகின்றன.
முருங்கைக்கீரையிலுள்ள வைட்டமின் K சத்துக்கள், தலைமுடிக்கு உறுதியை தருகின்றன.. அதைவிட முக்கியமாக முருங்கைக் கீரையிலுள்ள இரும்புச்சத்துகள், ரத்தத்தில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரித்து, தலைமுடியை வலுப்படுத்த செய்கிறது. முருங்கைக்கீரையில் சிங்க் சத்துக்கள், வலுவற்ற தலைமுடிக்கு சத்துக்களை தருகின்றன. இதனால், முடிகள் உடைவது முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன.
பொரியல்: இத்தனை சத்துக்கள் உள்ள முருங்கைக்கீரையை உணவிலும் உட்கொண்டு, தலைமுடிக்கும் பயன்படுத்த வேண்டும்.. வாரம் ஒருமுறை முருங்கைக்கீரையை பொரியல், குழம்பு செய்து சாப்பிடலாம்.. அல்லது முருங்கைக்கீரை சூப் செய்து சாப்பிடலாம்.. உள்ளுக்குள் முருங்கைக்கீரையை சாப்பிடும்போது, அது ரத்தத்தில் கலந்து தலைமுடிக்கு தேவையான சத்துக்களை பெறச்செய்கிறது.
அதேபோல, முருங்கை எண்ணெய்யை தலைமுடிக்கு தடவி, மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகமாகி, தலைமுடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.. அதேபோல, முருங்கை பொடிகளை வாங்கி ஹேர்பேக்காகவும் பயன்படுத்தலாம். அதாவது, முருங்கை பொடியுடன் நெல்லிக்காய், கறிவேப்பிலை, மருதாணி, தயிர், முட்டை, செம்பருத்தி போன்றவற்றையும் சேர்த்து பயன்படுத்தும்போது, தலைமுடி வலுவாகி, வளர்ச்சியும் அதிகமாகும்.
பாதாம் எண்ணெய்: அதேபோல, முருங்கை எண்ணெய்யில், சிறிது பாதாம் எண்ணெய் கலந்து பயன்படுத்தி தலைமுடிக்கு தேய்க்கலாம்.. முருங்கை எண்ணெய்க்கு பதிலாக, பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய்களையும் சேர்த்து பயன்படுத்தினால் தலைமுடி வளர்ச்சிக்கு கூடுதல் வலு கிடைக்கும்.
முருங்கை இலையில் ஹேர் பேக் ஒன்றினை நாமே வீட்டில் தயார் செய்யலாம்.. முருங்கை இலையை அரை கப் எடுத்துக் கொண்டு, அதனுடன் பாதாம் 2 ஸ்பூன், கற்றாழை 1 ஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொண்டு, தலைமுடியின் வேரில் மட்டும் படும்படி தடவி மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து குளித்துவிடலாம்..
வாழைப்பழம் பேக்: அல்லது, முருங்கை கீரை அரை கப், நெய் 2 ஸ்பூன், கற்றாழை 1 ஸ்பூன் இவைகைளையும் மிக்சியில் அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். முருங்கைக்கீரை, வாழைப்பழம், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை சேர்த்தும் தலைக்கு பேக் போடுவதால், தலைமுடி வலுவாகும்..
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications