முருங்கை இலை ஆச்சரியம்.. முருங்கைக்கீரை ஒன்னு போதும்.. உடல் எடை குறைஞ்சிடும்.. கற்பகவிருட்ச முருங்கை
சென்னை: உடல் எடையை குறைக்க விரும்புவதில், கீரைக்கு நிகர் வேறில்லை.. அதிலும் முருங்கைக்கீரையை எப்படியெல்லாம் உணவில் பயன்படுத்தி பலன் பெறலாம் தெரியுமா?
முருங்கைக்கீரையில், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் செறிந்து காணப்படுகின்றன.. முருங்கை இலைகளில் உள்ள வைட்டமின் C, ஆரஞ்சு பழத்தை விட அதிகமாக இருக்கிறது..

இதிலுள்ள கால்சியம் செறிவு, பசும்பாலை விட அதிகமாக இருக்கிறது.. இந்த இலையை காய வைத்து, பொடியாக்கி, காலை டீ போல குடித்து வரலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த டீ மிகவும் நல்லது. இதனால், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
முதன்மை கீரை: ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே நிரம்பி கிடக்கின்றன. வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து உடல் எடையை குறைக்கும் கீரைகளில் முதன்மையானது முருங்கைக்கீரை என்கிறார்கள்.
எலுமிச்சம் சாறு: முருங்கைக் கீரையை 1 கப் தண்ணீர் ஊற்றி, நன்றாக அரைத்து, வடிக்கட்டி வைத்து கொள்ள வேண்டும்.. அதில், அரை ஸ்பூன் எலுமிச்சம் சாறு + தேன் கலந்து வெறும்வயிற்றில் காலையில் குடித்து வந்தால், அவ்வளவும் உடல் எடை குறைக்க உதவும்.. குடலை சுத்தம் செய்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கலோரிகளை வேகமாக கரைத்து, உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
ஒரு கைப்பிடி கீரையை, 1 டீஸ்பூன் நெய் விட்டு, வதக்கி, 5 பல் பூண்டு, 5 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போன்றவற்றை பொடித்து, தினமும் மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டால், ஏகப்பட்ட உடல்பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள்.
முருங்கைக்கீரை பொரியலை நம் விருப்பம்போல் செய்யலாம்.. சிலர் பருப்பு சேர்த்து முருங்கை கீரை பொரியல் செய்வார்கள். சிலர் தேங்காய் துருவி சேர்ப்பார்கள்.. சிலர் தேங்காய்க்கு பதில் வேர்க்கடலையை உடைத்து தூவுவார்கள்.. சிலர் முட்டை ஊற்றி கிளறி இறக்குவார்கள்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையை தரும். ஒவ்வொன்றும் சத்துக்கள்தான்.
முருங்கைக்கீரை சூப் : மல்லி விதை, சீரகம் இரண்டையும் தலா 1 ஸ்பூன் எடுத்து, வெறும் வாணலிலில் வறுத்து, ஆறவைத்து கரடுமுரடான பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு, இளசான முருங்கைக்கீரையை சுத்தம் செய்து, அலசி எடுத்து, ஒரு குக்கரில் சேர்க்கவும், அதனுடன் சிறிது பாசி பருப்பு, 10 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, 1 தக்காளி, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவேண்டும்.
இப்போது கீரை நன்றாக வெந்ததும், கீரையிலுள்ள தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்,, பிறகு, குக்கரில் உள்ள கீரை, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கடைந்து, அதில் மேலும் சிறிது தண்ணீரை சேர்த்து, அதையும் வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். இப்போது, ஏற்கனவே எடுத்து வைத்த கீரை தண்ணீர், இந்த சாறு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, இதனுடன் பொடி செய்து வைத்துள்ள மல்லி+வெந்தய தூளை சேர்த்தால், முருங்கைக்கீரை சூப் ரெடி.
சூப் முருங்கை: இதை பருப்பு சேர்க்காமலும் ஆப் செய்யலாம்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதனுடன், இளம் முருங்கைக்கீரையை காம்புடன் சேர்க்க வேண்டும். பிறகு, நறுக்கிய தக்காளி, பூண்டு ,வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.. பிறகு, சோம்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மறுபடியும் 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடித்தால் அவ்வளவும் இரும்புச்சத்து. குழந்தைகளுக்கும் (சிறிய அளவில்) தரலாம்.
இந்த சூப், சூப் ரத்த சுத்திகரிப்புக்கு நல்லது.. எலும்புகளை பலப்படுத்தக்கூடியது.. கர்ப்பப்பை வலுப்படுத்தும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற சுவாச கோளாறுகளுக்கு, இந்த சூப் சிறந்த நிவாரணமாக இருக்கும். அத்துடன், தலைவலி, இடுப்பு வலி, வாத மூட்டு வலி, உடல் வலி, பித்தம், போன்றவற்றை நீக்கும்.. உடல் பலவீனமாக இருந்தால், இந்த முருங்கை சூப் சிறிது குடித்தாலே தெம்பாகிவிடலாம்.

தோசை மாவு: ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம், மிளகு, பூண்டு போன்றவற்றை ச்ரத்து வதக்கவும்.. இதனுடன், இளசான முருங்கைக்கீரையை 1 கப் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.. இலை வெந்ததும் ஆற வைத்து, மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து அதை இட்லி மாவில் சேர்த்து, தோசை ஊற்றலாம்.
இந்த முருங்கைக்கீரையில் அடை செய்வார்கள்.. இதற்கு பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய 3 பொருளையும், 2 மணி நேரம் ஊறவைத்து, அதிலுள்ள நீரை மட்டும் வடிகட்டி எடுத்துவிட வேண்டும். இப்போது 3 பொருட்களுடன் மஞ்சள் தூள், பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
முருங்கை அடை: பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிப்வேப்பிலை, முருங்கைக்கீரை போன்றவற்றை அரைத்த மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கி, அடை போல சுடுவார்கள். இந்த அடை வேகும்போது, அதற்கு நடுவில் ஓட்டை போட்டு, அதனுள் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்ற வேண்டும். இதனால், அடை நன்றாக வெந்து வரும். அல்லது கேழ்வரகு மாவில், முருங்கை இலை கொழுந்துகளை சேர்த்து, வெங்காயம், ப.மிளகாய், உப்பு சேர்த்து அடை போல ஊற்றலாம்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications