Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முருங்கை விதை".. ஜஸ்ட் கைப்பிடி போதும்.. முருங்கை விதையின் மேஜிக் பாருங்க..ஆண்களே இதை நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருங்கையில் வேர் முதல் இலை வரை அத்தனையும் மருத்துவம்தான்.. அதிலும், இந்த முருங்கை விதையை பிரத்யேகமாக குறிப்பிட்டு பேசலாம். அந்த அளவுக்கு ஏகப்பட்ட அதிசயங்கள் இந்த விதைக்குள் உள்ளது.

முருங்கை மரத்தில், பூ, காய், விதை என அனைத்துமே ஆண்களின் அருமருந்து என்றே சொல்லலாம்.. இயற்கை அளித்த வயாக்ராவாக இந்த முருங்கை மரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

சிலர் இந்த முருங்கை பூக்களை அலட்சியமாக நினைத்து, கண்டுகொள்ளவில்லை.. அதை சமைப்பதும் இல்லை. முருங்கை விதைகளை உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். அல்லது முருங்கைக் கீரை, முருங்கைப்பூ இரண்டையுமே சம அளவு எடுத்து நறுக்கி, எண்ணெயிட்டு வதக்கி வறுத்த வேர்க்கடலையை இடித்து போட்டு சுடசுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தாலும் ஆண்மைத் தன்மை அதிகரிக்கும் என்பார்கள்.

Health Benefits of Drumstick Seed Do you know that Drumstick Seeds are the best Medicine for men

முருங்கை விதை: அதேபோல, முருங்கை விதையும் ஆண்களுக்கு பலனளிக்கக்கூடியது.. முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் A, C, B போன்ற சத்துக்கள் உள்ளதால், இதனை பெரும்பாலும் லேகியம் தயாரிக்கவே பயன்படுத்துகிறார்கள். முருங்கை விதைகளில் 30 விதமான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்..

இந்த முருங்கை விதைகளை, நெய்யில் வறுத்துப் பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும். நரம்புகள் வலுப்பெறும். பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் தண்ணீர் போன்ற விந்து கெட்டிப்படும். விந்தணுக்கள் அதிகரிக்கும்.

முருங்கை இலை பொடி: முருங்கை இலையை எப்படி செய்து சாப்பிடுகிறோமோ, அதுபோலவே, முருங்கைக்காயில் உள்ள விதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி, நன்றாக காய்ந்ததும், அதனை அரைத்து பொடித்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை, ஒரு சுத்தமான வெள்ளை துணியில் சலித்து எடுத்து வைத்துக்கொண்டால், பசும்பாலில் இரவு 21 நாட்கள் கலந்து ஆண்கள் குடிக்க வேண்டும் என்பார்கள்.

எனினும் மருத்துவர்களிடம் முறையான வழிகாட்டுதலுடன் இந்த முருங்கை விதை பொடியை எடுத்து கொள்வது, ஆரோக்கியத்துக்கு மேலும் நன்மை பயக்கும்.

அதேபோல, முருங்கைவிதை பல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. ரத்தசோகை உள்ளவர்கள் இந்த விதையை சாப்பிடலாம்.. குறிப்பாக, பெண்கள் நிறைய சாப்பிட வேண்டும்.. இந்த முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை பிரச்சனை நீங்கிவிடும்.. முருங்கை விதை, இதயத்தை பலப்படுத்தும்..

காய்கறிகள்: இந்த முருங்கை விதைகளில் அதிக அளவு ஜிங்க் இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குப்படுத்தி, சீராக பராமரிக்க துணைபுரிகிறது.. அத்துடன், சர்க்கரை நோய் வராமலும் தடுக்கிறது.. சர்க்கரை நோய் வந்தவர்களும், அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டிய காய்கறிகளில் முருங்கையும் ஒன்றாக உள்ளது.. எனவே, இந்த முருங்கை விதைகளை பொடி செய்து, சூப் ஆகியவற்றில் மிளகுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Health Benefits of Drumstick Seed Do you know that Drumstick Seeds are the best Medicine for men

கால்சியம் அதிகமாக உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் உறுதித்தன்மையை தரும்.. இந்த முருங்கை விதைகளை வீட்டிலேயே சூப் போல செய்து சாப்பிடலாம்.

பெஸ்ட் தீர்வு: தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இந்த முருங்கை விதையை சாப்பிடலாம்.. இதயத்திற்கும் நல்லது.. காரணம், இதயத்தை சுற்றி படிந்துள்ள கொழுப்புகளை அகற்றுவதில் முருங்கை விதை சிறப்பாக செயல்படுகிறது.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+