"முருங்கையிலை".. முருங்கை மரத்தின் ஆச்சரியம் தரும் வேர்கள்.. "அந்த" பிரச்சனை இருக்கா? இதை விட்றாதீங்க
சென்னை: முருங்கையை ஆரோக்கிய பெட்டகம் எனலாம்.. மருத்துவ பொக்கிஷம் எனலாம்.. அதனால்தான், அன்றைய காலங்களில் வீட்டுக்கு ஒரு முருங்கை மரத்தை, நம்முடைய முன்னோர்கள் கட்டாயம் வளர்த்து வந்திருக்கிறார்கள்.
முருங்கை கீரை: கீரை வகைகளிலேயே மிக முக்கிய இடத்தில் உள்ளது இந்த முருங்கை கீரை ஆகும்... கிராமங்களில் மட்டுமின்றி, நகரங்களிலும் முருங்கை மரம் பெரும்பாலானோர் வீடுகளில் இன்றும் வளர்க்கப்படுவதற்கு இதுதான் காரணம்.

பார்ப்பதற்கு வலுவில்லாத தோற்றத்துடன் காணப்படும் இந்த முருங்கை மரம், மனித குலத்திற்கே மருந்தாகவும், விருந்தாகவும் பயன்படுகிறது என்பதை மறுக்க முடியாது.. முருங்கை மரத்தின் எல்லா பகுதிகளையுமே, நம்வீட்டு பெரியவர்கள் அன்று மருத்துவத்தில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
ஏகப்பட்ட சத்துக்கள்: வாழைப்பழத்தை போல 3 மடங்கு பொட்டாசிய சத்தும், தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு புரோட்டீன் சத்தும் இந்த கீரையில் உள்ளது. எந்த கீரையிலும் இல்லாத அளவுக்கு 75 மடங்கு இரும்பு சத்து முருங்கையில் உள்ளது. அதனால்தான், இதை பிரம்ம விருட்சம் என்று சித்தர்கள் அன்றே சிலாகித்து சொல்லி உள்ளார்கள். இந்த முருங்கையின் வேர்கள்கூட, நமக்கு மருந்தாக பயன்படுகிறது. எப்படி தெரியுமா?
முருங்கை வேரை பொடி செய்து வைத்து கொண்டால் பல நன்மைகளை பெற்று தரும்.. அதேபோல, முருங்கை வேரில் கஷாயம் செய்து சாப்பிடலாம்.. அல்லது முருங்கை வேரை பொடி செய்து, சீரகம், சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டியும் சாப்பிடுவார்கள். இந்த வேரின் சாறுடன், பால் சேர்த்து குடித்தால், உள்ளுறுப்புகளுக்கு பலத்தை பெற்று தரும்.. வயிற்றிலுள்ள பூச்சிகளையும் இந்த வேர் வெளியேற்றிவிடும்..
நரம்புத்தளர்ச்சி: முருங்கை வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் 2 வேளை, 2 கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சிகள் முற்றிலுமாக நீங்கும்... முருங்கை வேரை கஷாயம் போல செய்து, கஷாயமாக்கி கொப்புளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும். இந்த தண்ணீர் காய்ச்சலை தடுப்பதற்காக எடுத்துகொள்ளவும் செய்யலாம். கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களுக்கு இந்த முருங்கை வேர் நலன் தரக்கூடியது..
முருங்கையில் உள்ள அனைத்து பாகங்களையும் ஏதாவது ஒருவகையில் உணவில் நாம் சேர்த்து வருவதால், ஆரோக்கியம் பெருகும் - ஆயுளும் நீடிக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications