குழந்தை வரத்தை தரும் பழம்.. கிடைப்பதே அரிது.. என்னென்ன நன்மைகள்? மதுவுடன் சாப்பிடவே கூடாது!
சென்னை: பார்க்க கரடுமுரடாக காணப்படும் பழம் ஒன்று பாலுணர்வை தூண்டி குழந்தையின்மைக்கு மருந்தாக செயல்படுகிறது. இது ஒரு சீசனல் பழமாகும்.
தூரியன் பழங்கள் இந்தியாவில் நீலகிரி மாவட்டத்திலும் மேற்கு கடலோரத்தின் சில இடங்களிலும் கேரளாவிலும் பயிரிடப்படுகிறது. இது 30 இனங்களை கொண்டது. இதில் 9 இனங்களை மட்டும் நாம் உணவாக பயன்படுத்துகிறோம். தூரியன் பழங்கள் மிகவும் பெரியவை.

இவை 25 முதல் 50 மீட்டர் உயரம் வரை வளரும். பூமியில் நட்டதுடன் 7 ஆண்டுகளில் பழம் காய்க்கத் தொடங்கும். மகரந்த சேர்க்கை நிகழ்ந்த 3 மாதங்களில் பழங்கள் முதிர்ச்சி அடையும். பழம் 30 செ.மீ நீளத்திலும் 15 செ.மீ. சுற்றளவும் கொண்டிருக்கும். எடை மட்டும் 1 முதல் 3 கிலோ எடையுடன் இருக்கும்.
பழத்தின் தோல் பழுப்பு பச்சை நிறத்தில் காணப்படும். பழத்தில் அறை அறையாக இருக்கும். அதில் வெளீர் மஞ்சள், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் கிடைக்கும். ஒவ்வொரு பழமும் 7 விதைகளை கொண்டிருக்கும். இந்த பழத்தின் சதை வெண்ணெய் போல் வாசமிருக்கும். இதுதான் பலருக்கு இந்த பழம் பிடிக்க காரணமாகிறது.
அது போல் நெய் சாப்பிடாதவர்களுக்கு இதன் வாசனை பிடிக்காமல் போகும். இது பழுத்தவுடன் தானாகவே மரத்திலிருந்து கீழே விழும். பழுத்த 5 அல்லது 6 நாட்களில் கெட்டுவிடும். இவற்றை நேரடியாகவே சாப்பிடலாம். இவை கேக், ஐஸ்கிரீம்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பழத்தை அதிகமாக உண்ணக் கூடாது.
கர்ப்பிணிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை உண்ணவே கூடாது. இந்த பழத்தில் ஈஸ்ட்ரோஜன் எனும் பெண்களுக்கான ஹார்மோன் அதிகம் காணப்படுகிறது. இது பெண்களுக்கு குழந்தையின்மையை போக்கும். இது பாலுணர்வை தூண்டும். பாலியல் பிரச்சினைகளை தீர்க்கும். ஆரோக்கியத்தை அள்ளித் தரும் அற்புத டானிக். மூளையின் செரோடோனின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. இதனால் மனசோர்வை நீக்கி தூக்கத்தை கொடுக்கும்.
இது எடை கூட்டுவதற்கு உதவும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், இதய நோயை தடுக்கும். புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். எலும்புகளையும் மூட்டுகளையும் வலுப்படுத்தும். இது பழங்களின் ராஜா என அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு சீதா பழம் போல் இருக்கும். நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் வல்லமை உண்டு.
இந்த பழத்தை மது குடித்துவிட்டு சாப்பிடக் கூடாது. இதில் சல்பர் இருப்பதால் இவை ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை அதிகரிக்கும். இதனால் வாந்தி, குமட்டல், இதய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதில் நார்ச்சத்து, கொழுப்பு, தாதுக்கள், விட்டமின் பி, விட்டமின் சி ஆகியவை உள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications