தேங்காயின் ஆரோக்கிய நன்மைகள்.. துண்டு பச்சை தேங்காய் போதுமே.. நீரிழிவு நோயாளி தேங்காய் சாப்பிடலாமா?
சென்னை: ஆரோக்கிய நன்மைகளையும், ஏராளமான சத்துக்களையும் தரும் தேங்காயை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? பச்சை தேங்காய் உடலுக்கு நல்லதா? யாரெல்லாம் பச்சை தேங்காய் சாப்பிடலாம்? தேங்காய் குணப்படுத்தும் நோய்கள் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம்.
தேங்காய்யில் வைட்டமின் C, E, B , தாதுக்களான இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் உணவு நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருக்கின்றன.

பொட்டாசியம்: தேங்காயில் ஏராளமான பொட்டாசியம் உள்ளதால், உடலிலுள்ள அதிகப்படியான சோடியத்தை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.. மேலும், தேங்காயிலுள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. ரத்த அழுத்தம், இதய ஆரோக்கியத்தை காக்கின்றன.
தினமும் 40-50 கிராம் பச்சை தேங்காயை சாப்பிட்டு வந்தால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதில்லை. காரணம் தேங்காயிலுள்ள மாங்கனீசு, உடலிலுள்ள கால்சியத்தை முழுமையாக உறிஞ்சிக் கொள்ள உதவி செய்யும். இதனால், நாள் முழுவதும் ஆற்றலை தக்க வைத்திருக்கும்.
பச்சை தேங்காய்: தேங்காயில் உள்ள லாரிக் அமிலம், ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுக்கு நன்மை தரக்கூடியது.. பாக்டீரியா, வைரஸ்கள் பூஞ்சைகளுக்கு எதிராக போராடவும் உதவி செய்கிறது.. தேங்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அல்சைமர் பாதிப்புகள் அண்டாது.. அனீமியா உள்ளவர்களுக்கு பச்சை தேங்காய்கள் வரப்பிரசாதம் எனலாம்.. இரும்புச்சத்து, தாமிரச்சத்துக்கள் தேங்காயில் உள்ளதால், உடலுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்வதுடன், ரத்த சிவப்பு அணுக்களையும் உடலில் அதிகரிக்க செய்கிறது.
உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு தேங்காய் பெஸ்ட் சான்ஸ்.. தேங்காய் சாப்பிடும்போது பசி கட்டுப்படுகிறது.. உடலிலுள்ள கொலஸ்ட்ரால் அளவுகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது. தேங்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் நிறைய உள்ளன.. தேங்காயை தவறாமல் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய்களின் அபாயத்தை தடுக்கும்..
சர்க்கரை நோயாளி: சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சாப்பிட்டால் , சர்க்கரை அதிகரித்துவிடுமோ என்ற ஒருவித பயம் இருக்கவே செய்கிறது.. தேங்காயில் ஏகப்பட்ட நார்ச்சத்துக்கள் உள்ளன. கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ், இன்னும் பல ஊட்டச்சத்துகள் உள்ளதால், யாருமே தேங்காயை தவிர்க்கக்கூடாதாம்..
முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான நார்ச்சத்தும், கார்போஹைட்டுகளும்தான். இவை இரண்டுமே தேங்காயில் இருப்பதால், ரத்த சர்க்கரை அதிகரிப்பதும் தடுக்கப்படுகின்றன. ஆனால், தேங்காயிலிருந்து பால் எடுத்து சாப்பிடாமல், தேங்காயுடன் சேர்த்து மென்று சாப்பிடும்போது, நார்ச்சத்து முழுமையாக கிடைக்கிறது.. ஆனால், எவ்வளவு தேங்காயை சாப்பிடுகிறோம் என்ற அளவுகோலும் சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கியம்.
வெறும் தேங்காய்: 100 கிராம் தேங்காயில் 444 கலோரிகள் உள்ளன.. அதேபோல, 4.5 கிராம் புரோட்டீனும் நார்ச்சத்தும் உள்ளன.. இதுவே கொப்பரை தேங்காயில் 660 கலோரிகள் இருக்கின்றன, எனவே, சர்க்கரை நோயாளிகள் தினமும் தேங்காய் சட்னி, தேங்காய் துவையல் போல சமையலில் சேர்க்காமல், பொரியல்களில் துருவிப்போட்டு சாப்பிடலாம். வெறும் தேங்காயை அப்படியே சாப்பிட கூடாது.
எவ்வளவு நன்மைகளை தந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் தேங்காயும் நஞ்சுதான்..தேங்காய் அதிக கலோரிகள் கொண்டது. அதிகப்படியாக சாப்பிட்டால் எடை அதிகரித்துவிடும். தேங்காயிலுள்ள கொழுப்பு LDL (கெட்ட) கொழுப்பின் அளவை அதிகரிக்கக்கூடும்... தேங்காய் ஒவ்வாமை உள்ளவர்களுக்குட்ம தீங்கு விளைவிக்கும். . அதேபோல, அதிக அளவு தேங்காய் தண்ணீர் ரத்தத்தில் பொட்டாசியம் அளவை அதிகரிக்கிறது.. ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடுகிறது.. சிலருக்கு தேங்காய் பால் மற்றும் அதன் பொருட்களுக்கு ஒவ்வாமை இருக்கும். தேங்காய் எண்ணெயை அதிகமாக உட்கொண்டாலும் குமட்டல் ஏற்படும்.22 Mar 2022
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications