எள்ளோடு வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? பெண்கள், குழந்தைகளுக்கு உதவும் எள் விதை
சென்னை: எள் விதைகளின் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னென்ன? எள்ளுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? சர்க்கரை நோயாளிகள் எள் விதைகளை சாப்பிடலாமா? இவைகளை எல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பார்கள்.. இளைப்பு என்றால் களைப்பு என்று பொருள்.. களைப்பு உட்பட பல உடல் உபாதை இருப்பவர்கள் எள் சாப்படும்போது, உடலுக்கு பலமும், ஊக்கமும், ஆற்றலும் கிடைக்கும்.

கருப்பு எள் விதைகள்: கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகம்.. வெள்ளை, சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகம். எனவே, எந்த எள்ளாக இருந்தாலும் சத்துக்கள் அதிகமாகும். அதாவது, ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள், ஒரே ஒரு கைப்பிடி எள்ளில் இருக்கிறதாம். எனவே, பற்கள், எலும்புகள் உறுதிப்பட, வளரும் பிள்ளைகளுக்கு எள்ளில் செய்யப்பட்ட பலகாரங்களை அதிகம் தரலாம்.
உடல் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெற எள் விதை உதவுகிறது. படபடப்பு தன்மையை குறைத்து, மனதை சாந்தப்படுத்தும் தன்மை எள் விதைகளுக்கு உண்டு. அதேபோல, இந்த விதைகளை சாப்பிட்டு வரும்போது, சிறுநீர் தாராளமாக பிரியும். சிறுநீரகங்களின் கற்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும். சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலும் தணியும்.
மாதவிடாய்: மாதவிடாய் தொந்தரவு உள்ள பெண்களுக்கு எள் விதைகள் சிறந்த மருந்தாகும். மாதவிடாய் முடிந்து, 15 நாட்களுக்கு பிறகு, எள் சாப்பிட்டால் அடுத்த முறை மாதவிடாய் நேரத்தில், வலியும் தொந்தரவும் இருக்காது. அல்லது பனை வெல்லம், கருஞ்சீரகத்துடன் எள் சேர்த்து சாப்பிடுவதாலும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
வயிற்று கழிவுகளை வெளியேற்றி, குடல் ஆரோக்கியத்தை எள் விதைகள் காக்கின்றன. மூலநோய் தொந்தரவு இருப்பவர்கள், எள்ளு விதையை லேசாக வறுத்து பவுடர் செய்து, நெய்யுடன் கலந்து சாப்பிடலாம். அதேபோல, எள் இலைகளுடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டாலும், ரத்த மூலநோய் குணமாகும்.
வறுத்த எள்: 1 ஸ்பூன் வறுத்த எள்ளுடன், 1 ஸ்பூன் வெல்லத்தை சேர்த்து சாப்படும்போது, இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. காரணம், எள், வெல்லம் இவை இரண்டிலுமே நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. எனவே, இந்த கலவையை சாப்பிட்டு வரும்போது, இதய நோய்களின் ஆபத்து குறைகிறது.
இந்த கலவையை சர்க்கரை நோயாளிகளும் ஓரளவு அதாவது ஒரு நாளைக்கு அரை ஸ்பூனுக்கும் குறைவாக எடுத்து கொள்ளலாம். ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு எள்ளும், வெல்லமும் சேர்ந்த கலவை சிறந்த வரப்பிரசாதமாகும். உடலில் கெட்ட கொலஸ்டிரால் இருந்தாலும் குறைந்துவிடும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications