பச்சை முட்டை சாப்பிடறீங்களா.. தினமும் எத்தனை முட்டை சாப்பிடலாம்.. ஒரே கோழி முட்டையில் இத்தனை விஷயமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவுதான் முட்டை.. பலநூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் உணவுதான் இந்த முட்டை.. இந்த முட்டையை பச்சையாக சாப்பிடலாமா? ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் வரை சாப்பிடலாம்?

ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும், 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன... ஆனால், இந்த வெள்ளை கருவில் 90 சதவீதம் தண்ணீர்தான் இருக்கிறது.. 10 சதவீதம் மட்டுமே புரதம் இருக்கிறது.. கொழுப்பும் சுத்தமாக இல்லை.. கார்போஹைட்ரேட் சத்தும் மிகக்குறைவு. கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம் உள்ளன.

Health Benefits of Eggs do you know Excellent Medicinal Food Egg, Can we eat raw eggs

சத்துக்கள்: இதைத்தவிர, செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 போன்ற 10 வகையான வைட்டமின்கள் இருக்கின்றன.. இதைத்தவிர, கால்சியம், இரும்பு, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் போன்ற பல சத்துக்கள் உள்ளன..

ஆனால், மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது... வைட்டமின் டி உள்ளது.. இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலு தரக்கூடியது... இந்த மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்ச கொழுப்பால், ஹார்ட் அட்டாக் வரும் என்றார்கள்.. ஆனால், அதற்கு பிறகு நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், ஆபத்து எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, வாரம் 6 முட்டைகளை சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கொழுப்புகள்: முட்டையில் நல்ல கொழுப்புகளே உள்ளதால், எந்த ஆபத்தும், முட்டையால் ஏற்படாது என்கிறார்கள். உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக முட்டை சாப்பிடலாம்.. முட்டையில் உள்ள மஞ்சள் கருவைத் தவிர்த்துவிட்டு, வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது.. அதிலும் பிராய்லர் கோழி முட்டைகளைவிட நாட்டுக்கோழி முட்டைகளை சாப்பிட்டால் அதைவிட சிறப்பு.

ஆனால், ஒவ்வொருவரின் உடல்வாகு பொறுத்தே முட்டை எடுத்துக் கொள்ளலாம்.. கடினமாக உழைப்பவர்கள், ஜிம்முக்கு போகிறவர்கள், ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளை கரு, 2 மஞ்சள் கருவையும் சாப்பிடலாம்.. உடல் உழைப்பு அவ்வளவாக இல்லாதவர்கள், தினமும் ஒன்று சாப்பிட்டாலே போதுமாம். ஒரு முட்டை சாப்பிட்டால் அதில், 155 கலோரி ஆற்றல் கிடைக்கிறதாம்.. ஒரு நேரத்தில் 2 முட்டை சாப்பிட்டால் ஒரு சராசரி மனிதருக்குக் காலை உணவுக்குத் தேவையான சக்தி கிடைத்துவிடும்.

பச்சை முட்டை: சிலர் பச்சை முட்டைகளை அப்படியே குடிப்பார்கள்.. பூப்பெய்தும் பெண்களுக்கும் பச்சை முட்டையை குடிக்க செய்வார்கள்.. ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்களும் பச்சை முட்டைகளை உடைத்து குடிப்பார்கள். இப்படி குடிப்பதால், அதிக புரோட்டீன் நம்முடைய உடலுக்கு கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள். அது தவறு.

முட்டையை வேக வைக்காமல் குடித்தால், ஆபத்துதான் ஏற்படுமாம்.. பச்சை முட்டையின் வெள்ளைக்கருவில் அவிடின் என்ற புரோட்டீன் உள்ளது.. இது முட்டையில் உள்ள பயாட்டின் என்ற வைட்டமினுடன் இணையும்போது, சில இடர்களை உண்டுபண்ணுகிறது.. பயாடின் சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. ஆதனால், முட்டையை வேகவைத்து சாப்பிட்டால், அந்த அவிடின் அழிந்துபோய்விடும். முட்டையின் முழு பலனும் நமக்கு கிடைத்துவிடும்.

சுருக்கமாக சொல்லப்போனால், அவிடின் என்ற சத்தைவிட, பயாட்டின்தான் என்ற சத்துதான் நமக்கு மிகவும் முக்கியம். இன்றைய சூழலில், ஹார்மோன் ஊசிகளை போட்டு கோழிகளை வளர்ப்பதால், முட்டைகளை வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

அஜீரணம்: அதுமட்டுமல்ல, வேகவைக்கும்போது, அதிலுள்ள பாக்டீரியாக்களும் அழிந்துவிடும்.. இதனால் தொற்று வராது.. குழந்தைகளுக்கும் தரலாம்.. தினம் ஒரு முட்டை சாப்பிட்டால், மந்ததன்மை வந்துவிடும் என்கிற அச்சமும் தேவையில்லை. அதேபோல, முட்டையை முழுமையாக வேக வைக்காமல், இட்லி சட்டியில் வைத்து, ஆஃப் பாயில் போல வேகவைத்தால், இன்னும் நல்லதாம்.. ஜீரணமும் எளிதாகிவிடும் என்கிறார்கள் சத்துணவு நிபுணர்கள்.

பயன்கள்: முட்டையை தவறாமல் தினமும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் ஆபத்தானது குறையும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.முட்டையிலிருக்கும் கோலின் சத்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியது. கருவுற்ற தாய்மார்கள் முட்டை சாப்பிட்டால், வயிற்றிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தை, மூளை தொடர்பான எந்தக் குறைபாடும் இல்லாமல் பிறக்கும்.

காலை உணவில் முட்டை எடுத்துக்கொண்டால், அன்றைய நாள் முழுவதும் உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும்.. பல்வேறு வகையான நோய்களை எதிர்த்து போராடக்கூடியவைதான் இந்த முட்டை.. மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும்.. உடல் வீக்கத்தை குறைக்கும்.. பெரும்பாலும் இரவில் முட்டை சாப்பிடுவதை தவிர்த்துவிடலாம். காரணம், அந்த நேரத்தில் நமக்கு உடல் உழைப்பு குறைவாக இருக்கும்.

தவிர்க்கலாம்: அதேபோல, சர்க்கரைநோய் இருப்பவர்கள் மட்டும் முட்டை சாப்பிடுவதில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முட்டையுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உகந்ததல்ல என்கிறார்கள். வேண்டுமானால், முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. அதுவும் வேகவைத்து சாப்பிடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+