வெண்ணெய் பழம்.. அதைவிடுங்க.. இது ஒன்னு மட்டும் போதுமாம்.. வெயிட் மளமளன்னு குறையும் பாருங்க.. சூப்பர்ல
சென்னை: மூட்டு வலி என்றாலே நினைவில் வருவது அவகோடா பழம்தான்.. அந்த அளவுக்கு நிவாரணத்தை தரவல்லது இந்த அவகோடா பழம்.
அவகோடா பழத்தில், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K1, B6, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், தாது உப்புக்கள், நல்ல கொழுப்புக்கள், என பல சத்துக்கள் அடங்கியுள்ளன.. உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உகந்த பழம் இது.

கெட்ட கொழுப்புகள்: காரணம், கெட்ட கொழுப்பை குறைப்பதில் இந்த அவகேடாவுக்கு பெரும்பங்கு உண்டு.. அத்துடன் செரிமான பிரச்சினைகளை சரிசெய்யக்கூடியது. இதனால் உடற்பருமன் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.. அவகேடோ பழத்தை தொடர்ந்து டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைந்து குறைவதுடன், இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கப்படும்.. நார்ச்சத்து அளவுக்கு அதிகமாகவே இந்த பழத்தில் உள்ளது..
ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இந்த பழத்தில் உள்ளதால், புற்றுநோய்கள் நம்மை அண்டாது.. நோய் எதிர்ப்பு சக்திகளும் பெருகும்.. செரிமான பிரச்சனை ஏற்படாமலும், சிறுநீரக பிரச்சனைகள் வராமலும் இந்த அவகேடோ பழம் பேருதவி செய்கிறது..
மூட்டு வலிகள்: அதைவிட முக்கியமாக ஆர்த்ரிடிஸ் ஆய்வுகளில் அவகேடோ பழத்தில் உள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்சனைகளை சரிசெய்வதாக தெரிய வந்துள்ளது.. அதனால், ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம், ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
தொடர்ந்து இந்த பழம் சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.. வாழைப்பழத்தை விட அதிக அளவிலான பொட்டாசியம், இந்த பழத்தில் உள்ளதால், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம் நன்மை புரிகிறது.
பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி குறைவாக இருந்தால், இந்த பழத்தை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.. கர்ப்பிணிகள் இந்த பழத்தை சாப்பிடும்போது, குழந்தைகளின் முழு வளர்ச்சிக்கு உதவும்.. கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைக்கும் தேவையான அனைத்து சத்துக்களும் இந்த அவகேடோ பழத்தில் நிறைந்துள்ளன.
அவகோடா அழகு: சரும அழகுக்கு அவகேடா பழங்கள் துணைநிற்க்னிற்ன.. காரணம் இதில், நிறையை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், சருமத்தை பாதுகாக்கின்றன.. சருமம் பொலிவாகிறது. இளமை தோற்றத்தை உண்டுபண்ணுகிறது.. அதனால்தான், ஃபேஸ் கிரீம் தயாரிப்புகளில் இந்த பழம் மூலப்பொருளாக பயன்படுகிறது..
இந்த பழத்தை கொண்டு, வீட்டிலேயே நாம் பேஸ் பேக் போல தயார் செய்யலாம். அதாவது, பப்பாளியை மசித்து, அத்துடன் வேக வைத்துள்ள அவோகேடோவின் பழத்தை சேர்த்து, சிறிது தேன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி கால் மணி நேரம் விட்டு, பிறகு கழுவிவிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி சருமம் பொலிவுபெறும்.
சருமம் + தலைமுடி: அல்லது வெறும் இந்த வெண்ணெய் பழத்தை வேக வைத்து மசித்து, சிறிது சர்க்கரை, பால் சேர்த்து முகத்தில் தடவி, ஸ்க்ரப் செய்து வந்தாலே போதும்.. சருமம் அழகுபெறும்.
வலுவற்ற தலைமுடி இருந்தால், இந்த பழத்தை நேரடியாகவே நாம் பயன்படுத்தலாம்.. இந்த பழத்தின் சதையை பகுதியை மட்டும் எடுத்து, சிறிது எலுமிச்சை சாறு, தேன் கலந்து தலைமுடிக்கு தடவி 30 நிமிடம் ஊறவைத்து கழுவிவிட வேண்டும். இதனால், தலைமுடி உறுதியாகவும், அடர்த்தியாகவும் வளரும். அதனால்தான், அவகோடா பழத்தில் ஃபேஸ் வாஷ், ஷாம்புகள், க்ரீம்கள் வரை தயாராகின்றன.. சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்வதில், இந்த பழத்துக்கு பெரும்பங்கு உண்டு.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications