Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மீன் குழம்பு" சைவத்தில் கொதிக்குமா? "மீனாட்சி" மீன் போல ஆளுவாள்.. தமிழிசை நறுக்.. வாட் டூ யூ "மீன்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீனை சைவத்தில் சேர்க்க வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் விடுத்துள்ள கோரிக்கை பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக பரவலாக கூறப்பட்டு வருகிறது.. குறிப்பாக, வடமாநிலங்களில் மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்திற்கு பிறகு, "பசு காவலர்கள்" என்ற பெயரில் சிலர் குழுக்களாக செயல்படுவதும், மாடுகளை விற்க செல்பவர்களை தாக்குவதுமாக உள்ளனர்..

பாஜக: இதனால், சிறுசிறு வியாபாரிகளால், மாட்டிறைச்சிகளை, தங்கள் பகுதிகளிலுள்ள கடைகளுக்கும், மார்கெட்டுகளுக்கும் கொண்டு போய் விற்கவும் முடியாத அளவுக்கு பீதி, கலக்கம் ஏற்பட்டுள்ளன..

Health benefits of fish and can be added under vegetarian, asks governor tamilisai soundararajan

பொதுவெளியில் சிறுபான்மையினர் தாக்கப்படும் வீடியோக்களும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி பகீரை கிளப்பி விட்டு செல்கின்றன.. சிலசமயம், உயிரிழப்புகளும் நடந்துவிடுகின்றன..
மாட்டிறைச்சி: மற்றொருபக்கம் பசுவை போற்றி பாதுகாக்கும் முறைகளையும் வடமாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.. அதிலும், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சி கடைகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், மீனை, சைவத்தில் சேர்க்க வேண்டும் என்று பாஜகவின் தமிழிசை சவுந்தராஜன் விடுத்துள்ள கோரிக்கை பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில், ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், நான் ஒரு டாக்டர் என்று கூறி தன் பேச்சை துவங்கியிருந்தார்.

அசைவம்: "மீன் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் மீன்குழம்பு என்றால் ரொம்ப பிடிக்கும்.. மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். நோய் நொடி இல்லாமல் இருக்கலாம். ராஜ் நிவாசில் மேற்கு வங்க நாள் கொண்டாடப்பட்டபோது, மீன் சமைத்தார்கள்.. அப்போது அவர்கள், "நாங்கள் மீன் உணவை அசைவம் என்றெல்லாம் நினைப்பது இல்லை. சைவம் என்றுதான் நினைக்கிறோம்" என்று சொன்னார்கள்..

முட்டையையே, சைவம் என்று சொல்லி பலர் இன்று சாப்பிட ஆரம்பித்துவிட்டனர்.. அதுபோல, முட்டையை சைவம் என்று சொல்லி பலர் சாப்பிட தொடங்குவதை போல, மீன் இறைச்சியையும் சைவம் என்று சொல்லிவிட்டால் இன்னும் பலர் மீனை சாப்பிட ஆரம்பிப்பார்கள்.. இதனால் மீனவர்கள் இன்னும் பயனடைவார்கள்..

"மீனாட்சி எப்படி ஆட்சி புரிவாள் என்று இலக்கியத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.. மீனாட்சி எப்படி ஆட்சி புரிவாள் என்றால், மீன் போல ஆட்சி புரிவாள்.. முட்டைகளை இட்டு கண்களில் வைத்து குஞ்சு பொறித்து வளர்ப்பது போல் ஆட்சி புரிவாள்".. அதேபோல தான் மத்திய அரசு தொலைவில் இருந்தாலும் மக்களை கண்ணில் வைத்து பாதுகாத்து வருகிறது.. மீன் முட்டையிட்டு கண்களால் பாதுகாப்பது போலவே மத்திய அரசும், மாநில அரசும் மீனவர்களை பாதுகாத்து வருகின்றன" என்றார்.

மீனை சைவத்துக்குள் சேர்க்க வேண்டும் என்ற தமிழிசையின் இந்த கோரிக்கை விவாதத்தை கிளப்பி வருகிறது.. மீன் சைவமா? அசைவமா? என்ற விவாதங்கள் நீண்டகாலமாகவே நடந்து வருகிறது.

Health benefits of fish and can be added under vegetarian, asks governor tamilisai soundararajan

சைவமா? அசைவமா?: ஒருசாரார் மீனை சைவம் என்கிறார்கள்.. காரணம், உண்பதற்கு தாவரங்கள் தான் சிறந்தது. ஆனாலும், பரிணாம வளர்ச்சியில் தாவரங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள கடல்வாழ் உயிரினங்களான மீன்களை உண்ணலாம். கடல்வாழ் உயிரினங்கள்தான் விலங்கினத்தில் முதல்முதல் தோன்றியவை என்கிறார்கள்.

ஆனால், மற்றொரு சாராரோ, கடல்வாழ் உயிரினங்கள் என்றாலே அது அசைவம்தான்.. தாவரங்களை உண்ணக்கூடியவை மட்டுமே சைவமாக கருதப்படும் என்கிறார்கள்.. இப்படியான விவாதங்கள் பல காலமாகவே வலம்வரும்நிலையில்தான், தமிழிசை இந்த வேண்டுகோளை வைத்துள்ளார். தமிழிசையின் இந்த பேச்சினை, பலரும் திரண்டு வந்து வரவேற்றும், பாராட்டும் தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்..

வரவேற்பு: மேலும் சிலரோ, "பேசாமல், கோழி, ஆடு, எல்லாத்தையும் சைவத்திலேயே சேர்த்துடுங்களேன்.. அவைகளிலும் நிறைய சத்துக்கள் இருக்கின்றன.. அசைவ உணவில் சத்துக்களே இல்லை என்று சொல்லிவிட முடியாதே" என்று, இன்னொரு கோரிக்கையை தமிழிசைக்கு விடுத்து வருகிறார்கள். மொத்தத்தில், மருத்துவர் தமிழிசையின் பேச்சுக்கு பெருத்த ஆதரவும், வரவேற்பும் இணையத்தில் கிளம்பி உள்ளன..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+