மீனில் "சூப்பர் மீன்" எது தெரியுமா.. இந்த மீன்கள் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? ஆச்சரியம் மீன்கள்
சென்னை: வாரம் 2 முறையாவது மீன் சாப்பிட சொல்கிறார்கள்.. ஏன் தெரியுமா? மீன் சாப்பிடுவதால், நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன தெரியுமா?
அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம்.. ஒவ்வொரு வகையான மீன்களிலும், ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன என்றாலும், சில அடிப்படையான சத்துக்கள் கிட்டத்தட்ட அனைத்து மீன்களிலுமே உள்ளன..

சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது... மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது.. மனித ஆயுளையும் கூட்டுகிறது.
கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன.. மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது... நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒமேகா கொழுப்பு: புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். இந்த ஒமிகா 3 கொழுப்பு அமிலமானது, உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக அமைகிறது... அத்துடன், இதயத்துக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
உடல் எடை: தினமும் மீன் சாப்பிடுவதனால் ரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளும் சரியாகிறது.. முக்கியமாக, கொலஸ்ட்ராலில் இருந்து தப்பிக்கலாம்.. இதனால் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளும் குறையும்.. அதிலும், மீன்களில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால், இதய ஆரோக்கியத்திற்கு மீன்கள் நன்மை பயக்கின்றன.
மீனில் வைட்டமின் D சத்து நிறைந்துள்ளதால், எலும்பு மற்றும் பற்களுக்கு வலு கிடைக்கிறது.. நீரிழிவு நோய், முடக்கு வாதம் போன்ற நோய்களின் தாக்கமும் மிகக்குறைவாகவே காணப்படும்.. முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவில் மீன்களும் ஒன்று.. அடிக்கடி மீன் சாப்பிடுவதால், இயற்கையான மன அழுத்த எதிர்ப்பு, மனச்சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்களை எளிதாக தடுக்கலாம்.
சிறந்த உணவு: இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என்ற நம் உடலுக்கு தேவையான் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. அதனால், அனைத்து வயதினருமே மீன் வகைகளை எடுத்துக்கொள்வது அவசியம்... குறிப்பாக சால்மன் மீனில் ஒமேகா-3 அதிகம் நிறைந்துள்ளது. வயிற்றிலுள்ள குழந்தையின் மூளை, கண்கள் மற்றும் செரிமான மண்டலத்தின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால், எந்த மீனை சமைத்தாலும், நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். அரைவேக்காடு மீன்களையும் சாப்பிடக்கூடாது..
கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது.. குறிப்பாக, மத்தி, நெத்திலி, சங்கரா மீன், வஞ்சரம், வவ்வால் மீன், கோலா மீன், காரப்பொடி மீன் இப்படியான மீன்கள் ஓமேகா 3 சத்துகள் கொண்டவை என்பதால், இவற்றை அளவோடு சாப்பிடலாம்.
கர்ப்பிணிகள்: அதேசமயம் கடல் மீன்களில் மெர்க்குரி அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.. மெர்க்குறை குறைந்த மீன் வகைகளை 8 முதல் 12 அவுன்ஸ்கள் அளவிற்கு வாரத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.. அதிலும், வாளமீன், சுறா மீன், கெளுத்தி, மார்லின், BIG EYE TUNA போன்ற மீன்வகைகளில் மெர்குரி நிறைந்துள்ளதால், இதுபோன்ற மீன்களை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் அல்லது மருத்துவரின் அறிவுரையை கட்டாயம் பெற வேண்டும் என்கிறார்கள்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications