சல்லுன்னு வெயிட் குறைக்கணுமா? இந்த மீனை நோட் பண்ணுங்க.. மீன் சிக்கன் பெஸ்ட்? வாவ் ஆச்சரியம் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மீன் சாப்பிடலாமா? அல்லது சிக்கன் சாப்பிடலாமா? இதில் எது நல்லது? மீன் வகைகளில் என்ன சாப்பிடலாம்? சிக்கனைவிட சிறந்ததா மீன்கள்? ஆய்வுகள் சொல்வது என்ன? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

அசைவ உணவுகளிலேயே கடல் உணவுகளில் அதிக சத்துக்கள் உள்ளதால், அவை உடலுக்கு நன்மை தரக்கூடியதாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வகை மீனிலும், வித்தியாசமான சத்துக்கள் இருக்கின்றன என்றாலும், சில அடிப்படையான சத்துக்கள் அனைத்து மீன்களிலுமே நிறைந்திருக்கின்றன.

Fish Chicken Weight Loss

எனினும், உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், மீன்களை மட்டுமே சாப்பிடலாம் என்றும், இதனால், வேகமாக எடை இழப்பை ஊக்குவிக்கும் என்றும் சொல்கிறார்கள்.. அதாவது 8 வார காலத்தில், மீன்களை மட்டுமே சாப்பிட்டவர்கள் எடை குறைந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. காரணம், சாச்சுரேட் கொழுப்பு மீன்களில் அடங்கியிருப்பதால், உடல் எடை கூடாது.

உடல் எடை குறைக்க உதவும் மீன்கள்

கானாங்கெளுத்தி, முரல் மீன், சங்கரா மீன் போன்றவைகளை உடல் எடை குறைப்புக்கு பயன்படுத்தலாம். இவைகளில் வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் B5, B6, ஜிங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், உள்ளிட்டவை நிறைந்திருக்கின்றன.

அதேபோல, மத்தி, சாளை மீன், சங்கரா மீன், நெத்திலி, சூரை மீன், மத்தி மீன் போன்றவைகளையும் தேர்ந்தெடுக்கலாம்.. ஆனால், இந்த மீன்களிலுள்ள முட்களையும் சேர்த்து சாப்பிட வேண்டும். அதிக மசாலா, எண்ணெய் இல்லாமல் மேரனேட் அல்லது கிரில் செய்து அல்லது நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம்..

மீனை விட பெஸ்ட் கோழிக்கறி?

அதேபோல கோழிக்கறியில் நிறைய புரோட்டீன்கள் நிறைந்திருக்கின்றன.. சமீபத்தில் வளர்சிதை மாற்றம் மற்றும் இருதய நோய்கள் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வு குறித்து ஜர்னல் நியூட்ரிஷன் சில தகவல்களை வெளியிட்டிருந்தது.. அதில், மீன் சாப்பிடுவது மற்ற இறைச்சி மூலங்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக இருக்கும் என்றும், மீன் சாப்பிடுவது வேகமாக எடை இழப்பை ஊக்குவிக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

சிக்கனில் 27% புரதம் உள்ளதுடன், குறைந்த கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் வைட்டமின் B6, செலினியம், நியாசின், பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன. இவை அனைத்துமே எடை இழப்புக்கு உதவுகின்றன.. அந்தவகையில், கோழியின் மார்பக பகுதி, அதிக சத்துக்கள் நிறைந்ததாகும்.

கோழி சிறந்ததா? மீன் சிறந்ததா?

ஆனால் ஊசி போடப்பட்ட கோழிகள், ரசாயனம் அதிகமுள்ள கோழிக்கறி, பதப்படுத்தப்பட்ட கோழிக்கறியை தவிர்க்க வேண்டும். எப்போதுமே கொழுப்பு அதிகமாக உள்ள சிக்கன் தோலையும் தவிர்த்து விட வேண்டும்.

ஆக மொத்தம் மீன், சிக்கன் இரண்டுமே நல்லது என்றாலும், கோழியை விட மீனில் சற்று அதிகம் சத்துக்கள் உள்ளன.. அதுதான் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்.. கோழிக்கறியை சாப்பிடுவதை விட மீன்கள் சற்று கூடுதலான ஆரோக்கியமானது. எனினும், இந்த கோழி, மீன் இரண்டையுமே மிதமாக எடுத்துக் கொள்வது அவசியம் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+