மீனின் முள்.. மீன் கண்ணுக்குள்ளே இவ்ளோ இருக்கா.. மீன் முள்ளை சாப்பிட்டால் நடக்கும் ஆச்சரியம்.. வாவ்
சென்னை: கடல்வாழ் உயிரினங்களில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.. அதிலும் மீன்களை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள்.. எனினும், மீன் தலைகளை பற்றி தெரியுமா? மீன் முள்ளை பற்றி தெரியுமா?
ஒருமுறை நடிகை மீனா பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், சின்ன வயதில் நடித்தபோது, ஷூட்டிங் ஸ்பாட்டில், மீன் சாப்பிட்டதை பற்றி சுவாரஸ்யமாக நினைவு கூறியிருந்தார்.

சிவாஜி சார்: "பாப்பா...ம்கூம்..." என்று என்னுடைய பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவாஜி சார், நான் ஒரு பொறித்த மீனை எடுத்ததும் எடுக்கக்கூடாது என்பது போல் சைகை காட்டினார். ஆசைப்பட்டு சாப்பிட எடுத்ததை தடுத்துவிட்டாரே என்று நினைத்து என் முகம் வாடிவிட்டது.
நடிகை மீனா: அதை கவனித்தவர் சிரித்துக்கொண்டே, "அங்கிள் இப்படி மீனை எடுப்பேனாம்.. இப்படி முள்ளை எடுப்பேனாம்.. அதை இப்படி வைப்பேனாம்.. அப்புறம் மீனை மட்டும் பாப்பாவுக்கு ஊட்டுவேனாம்" என்றபடி ஊட்டியதுமே, நான் சிரித்தபடியே சாப்பிடுவேன். இப்படித்தான் மீன் மற்றும் இறைச்சி துண்டுகளை முள், எலும்பு இல்லாமல் பக்குவமாக பிய்த்து எடுத்து எனக்கு ஊட்டுவார்" என்று கூறியிருந்தார்.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு, மீனை முள் இல்லாமல்தான் ஊட்ட வேண்டும்.. ஆனால், 30, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், இந்த முள்ளை தூக்கி வீசிடாமல் சாப்பிட வேண்டுமாம்..
மீன் தலைகள்: கடைகளில் இருந்து மீன்களை வாங்கும்போதே, மீனின் தலையை வெட்டிவிடுவோம்.. அப்படியே அதன் கண்ணையும் வெட்டிவிடுவோம். சாப்பிடும்போது முள்ளையும் வீசிவிடுவோம். உண்மையை சொல்லப்போனால், இவைகள் அனைத்திலுமே, மீனைவிட சத்துக்கள் அதிகம் இருக்கிறதாம். பலவகையான வைட்டமின்களும், தாதுக்களும், ஆரோக்கியமான கொழுப்புகளும் இந்த மீன் தலைக்குள்தான் அடங்கி உள்ளன.. ஆரோக்கியமான புரதம் அதிக அளவில் மீனின் தலைப்பகுதியில் இருக்கிறது.
மற்ற இறைச்சி வகைகளில் இல்லாத அளவுக்கு, செறிவூட்டப்பட்ட கொழுப்பு மிகவும் குறைவாக இருப்பது இந்த மீனின் தலைப்பகுதியில்தான்.. எனவே, மீன் தலையை சாப்பிட்டால், கொழுப்பு கூடாது.. பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் குறையும்..
பக்கவாதம்: அதுபோலவே, மீன் முட்டையில், கோழிமுட்டையை விட அதிகளவு ஊட்டச்சத்தும் எதிர்ப்புச்சக்தியும் இருக்கிறதாம்.. ரத்தம் சுத்தமாகி ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது..
இது எலும்புகளை, பற்களை வலுவாக வைத்திருக்க உதவும். வைட்டமினி C, E, A போன்ற சத்துக்கள் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்திக்கு பேருதவி புரிகின்றன.. இந்த முட்டைகளில் உள்ள திரவ வடிவிலான சுரப்பியில், வைட்டமின் E அதிகளவில் இருக்கிறது.. இதனால், மாலைக்கண் போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணம் பெறுவதாக சொல்கிறார்கள்..
அதேபோல, மீன் முள்ளில் ஏகப்பட்ட கால்சியம் இருக்கிறது. நம்முடைய எலும்புகளையும், பற்களையும் வலுவாக்குவதும் இந்த கால்சியம்தான். சால்மன் மற்றும் சார்டின் வகை மீன்கள் கால்சியம் சத்தில் முதல் இடம் பிடிக்கிறது.
சால்மன் மீன்: 50 கிராம் சார்டின் மீனில் 340 மிகி அளவு கால்சியம் இருக்கிறதாம். 85 கிராம் சால்மன் மீன் உண்பதால் 241 மிகி கால்சியம் சத்து கிடைக்கிறதாம்.. மீனிலுள்ள மென்மையான எலும்புகளை, முட்களை மென்று விழுங்கலாம். இதற்காக பெரிய பெரிய மீன்களை தேர்ந்தெடுக்க தேவையில்லை.. மத்தி, நெத்திலி போன்ற சின்ன சின்ன மீன்களை பொரித்து உண்ணலாம். அதேசமயம், கவனமுடன் மீன் முட்களை மென்று விழுங்க வேண்டும்..
ஒருவேளை, சிறிய அளவிலான மீன் முள் மாட்டிக்கொண்டால் ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது உப்பு போட்டு குடித்தாலே போதும்.. அல்லது ஒரு பெரிய துண்டு வாழைப்பழத்தை கடித்து, தொண்டையிலேயே சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அப்போது, வாயில் சுரக்கும் உமிழ்நீருடன் தொண்டையில் மாட்டிக் கொண்ட மீன் முள்ளையும் சேர்த்து வயிற்றுக்கு தள்ளி விடும்...
ஆலிவ் ஆயில்: மீன் முள் தொண்டையில் மாட்டிக் கொண்டால் சாதத்தை உருட்டி முழுங்க வேண்டும்.. அப்போது சாதத்துடன், மீன் முள்ளும் சேர்ந்து வயிற்றுக்குள் சென்றுவிடும். அதேபோல, ஆலிவ் ஆயிலையும் உபயோகிக்கலாம். இது வழவழப்பு தன்மை கொண்டதால், முள்ளை எடுக்க உதவி செய்கிறது. 1-2 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை விழுங்கினால் போதும்.
ஒரு பெரிய பிரட் துண்டை எடுத்து, தண்ணீரில் அதை முக்கி வேகமாக முழுங்க வேண்டும்.. முள் வயிற்றுக்குள் சென்றுவிடும்.. அல்லது 2 ஸ்பூன் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து 1 ஸ்பூன் மட்டும் எடுத்து குடித்தால் போதும். சோடா குடிப்பது வயிற்றில் உள்ள மீன் முள்ளைக் கரைக்கும். ஆனால், மீன் முள்ளை எடுக்க, கம்பியோ அல்லது ஸ்பூன் போன்ற பொருட்களையோ பயன்படுத்தக்கூடாது.. தொண்டையை அழுத்தி பிடிப்பது, அழுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது..
மீன் முள்: தொண்டையில் முள் எடுக்க முடியாமல் போனால், அல்லது தொண்டைக்குள்ளேயே முள் இருப்பது தெளிவாகி விட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும்.. அதிகப்படியான இரத்த போக்கு, தொண்டையில் கடுமையான வலி, அடைப்பு காயங்கள் இருந்தாலும் உடனே டாக்டரை அணுக வேண்டும்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications