அஞ்சே அஞ்சு அயிட்டம்தான்.. மின்னல் வேகத்தில் உடல் எடை குறையுதாமே.. அதென்ன ப்ளூ கலர்ல.. ஜஸ்ட் ட்ரை
சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டுமானால், தவிர்க்கவே முடியாத விஷயம் உடற்பயிற்சிகள்தான்.. கட்டாயம் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றாலும், உடல்எடை குறைய பக்கபலமாக இருப்பது காய்கறிகளும், பழங்களும்தான்.
பெரும்பாலும் ஜூஸ்களும் உடல் எடையிழப்பில் பங்கு பெறுகின்றன.. அதில் முக்கியமானது சுரைக்காய்.. சிறிது புதினா இலைகளுடன் சுரைக்காய், சிறிது இஞ்சி, ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் என அனைத்தையும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இறுதியில், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது கல்உப்பு சேர்த்து, வடிகட்டி குடித்தால் அவ்வளவும் பலன்.

சுரைக்காய் ஜூஸ்:சுரைக்காய் ஜூஸும் சாப்பிடலாம்.. 92% சதவீதம் நீர் + தாதுக்கள் இதில், உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
சுரைக்காயில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால் இது எடை இழப்புக்கு மிகவும் சிறந்தது. நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த சுரைக்காய் மிகவும் நல்லது.. ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன.
இஞ்சி ஜூஸ்: அடுத்ததாக இஞ்சி ஜூஸ் செய்யலாம்.. ஒரு கண்ணாடி பாட்டிலில், இந்த துருவிய இஞ்சி, சீரகப்பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.. இந்த கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்தால், அதுவே இஞ்சி ஜூஸ்.. உணவு எடுத்துக் கொள்வதற்கு, அரை மணி நேரத்திற்கு முன்னதாக இதை குடிக்க வேண்டும்.
இதைத்தவிர, குடைமிளகாய், வெள்ளரிக்காய் இவை இரண்டையும் அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.. இவைகளிலுள்ள வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்கள் உடல் எடையை குறைப்பதுடன் உடலை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. குடைமிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் ஆகியவை குறைவாகவே உள்ளது. வெள்ளரியில் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளன. நார்ச்சத்தும் அதிகம்.
பீன்ஸ், பசலைக்கீரை, ப்ரோக்கோலியும் உணவில் நிறைய சேர்த்து கொள்ளலாம்.. எடை இழப்பில் பெரும்பங்கு ப்ரோக்கோலிக்கு உண்டு.. இதை சாப்பிட்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.. கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்கிறது. ஆனால், நீலநிற பழங்கள், நீலநிற காய்களை இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை குறைகிறதாம்.
கத்தரிக்காய்: நீலம் மற்றும் ஊதா நிற காய்கள், உடல்எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்கிறார்கள்.. திராட்சை, நாவல்பழம், பிளம்ஸ்பழம், கத்தரிக்காய் இதெல்லாம் சத்துக்கள் நிறைந்தவை.. வைட்டமின் சி, நார்ச்சத்து இதில் உள்ளன.. கெட்ட கொழுப்பை குறைத்து, நோய் எதிர்ப்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. செரிமானத்துக்கு பேருதவி புரிகிறது..
இந்த இரண்டு கலர்களில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆன்டிஆக்சிடெண்டுகள் நிரம்பியுள்ளன.. ரத்த அழுத்தத்தை முறைபடுத்தவும் இதய நோய் வராமல் தடுக்கவும் இவை பயன்படுகிறது. இனிமேல், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், ப்ளூபெரி, கருப்பு திராட்சை, ஊதா நிற முட்டைகோஸ், கத்தரிக்காயை உங்கள் டயட் சார்ட்டில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இரவு சாப்பாடு: இரவு சாப்பாட்டில், இரவில் ஒரு கிண்ணம் சாதம் + ஒரு கிண்ணம் தயிர், பீட்ரூட், கத்தரிக்காய் லேசாக அவிய வைத்து ஒரு கிண்ணம், ஒரு ரொட்டி சாப்பிடலாம் அல்லது பீட்ரூட் சாறு ஒரு கிளாஸ் + ஒரு கிண்ணம் தயிர் சாதம் + ஒரு ரொட்டி, கத்தரிக்காய் அவியல் அரை கிண்ணம் என்று இரவு சாப்பாட்டை தினமும் வைத்துக்கொண்டால் உடல் எடை குறையும் என்கிறார்கள்.
இந்த நீலம், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் உள்ள பழங்கள் காய்கறிகளில் உள்ள தாவரச்சத்துக்கள் உணர்ச்சிகளை மெல்ல அமைதிப்படுத்துவதுடன், தூக்கமின்மை பிரச்சினையையும் நீக்குகிறதாம்..!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications