ஆட்டு இருதயம் ஆரோக்கியம்.. உறுப்பு இறைச்சியின் சத்துக்கள்.. யாரெல்லாம் உறுப்பு இறைச்சி தவிர்க்கலாம்?
சென்னை: இறைச்சியின் சதைப்பகுதியை அதிகமாகவே சாப்பிடுகிறோமே தவிர, உறுப்பு இறைச்சிகளை பெரும்பாலும் பலர் சாப்பிடுவதில்லை.. இந்த உறுப்பு இறைச்சிகளில் உள்ள சத்துக்கள் யாவை? யாரெல்லாம் இந்த உறுப்பு இறைச்சிகளை தவிர்க்கலாம்? என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஆடுகள், கோழிகளை சாப்பிடும் பெரும்பாலானோர், அதன் தசை இறைச்சிகளைத்தான் அதிகம் சாப்பிடுகிறார்கள்.. ஆனால், தசைகளைவிட அதிக சத்துக்கள் அதன் உறுப்புகளில் உள்ளன..

ஆடு, கோழி: குறிப்பாக மூளை, குடல், கால், கல்லீரல், எலும்பு போன்ற உறுப்புகளில் ஆரோக்கியமான நன்மைகள உள்ளன.. வைட்டமின் B12, ஃபோலெட் ஊட்டச்சத்துகள், இரும்புச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் போன்றவை இந்த பாகங்களில் நிறைந்திருக்கின்றன..
இந்த உறுப்பு இறைச்சிகளில் அதிகமான அளவில் இரும்புசத்து உள்ளது. மாதவிடாய் காலத்திலும்சரி, மெனோபாஸ் சமயங்களிலும் சரி, பெண்களுக்கு கால்சியமும், இரும்புச்சத்தும் அதிகமாக தேவைப்படுகின்றன.. எனவே, அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது பெண்களுக்கு இரும்புச்சத்தை அதிகரிக்க இதுபோன்ற உறுப்பு இறைச்சிகள் உதவுகின்றன.
உறுப்பு இறைச்சிகள்: உறுப்பு இறைச்சிகளை சாப்பிடும்போது, வயிறு நிரம்பிய உணர்வை தருகின்றன.. உயர்தர புரோட்டீன்கள் இருப்பதால், தசை வளர்ச்சிக்கும் பெருக்கத்திற்கும், சிக்கன், மட்டனின் பாகங்கள் உதவுகின்றன.. மூளை, தசை, கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் உதவும் ஊட்டச்சத்துக்களை இவை தருகின்றன.. ஆடு, கோழிகளின் எந்த உடல் பாகங்களை நாம் சாப்பிடுகிறோமோ, நம்முடைய அதே உடல் பாகங்களும் பலம் பெறும்.
உதாரணத்துக்கு ஆட்டு இருதயம் எடுத்துக் கொண்டால், Q10 என்ற மிகவும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் இதில் நிறைந்துள்ளது. இதனை சமைத்து சாப்பிடும்போது, மனித இருதயமும் வலுப்படுகிறது.. வைட்டமின் E, B சத்துக்கள், நம்முடைய உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதய தமனிகளை பாதுகாக்கக்கூடிய, இந்த ஆட்டு இருதயத்தை பாதுகாக்கவும், இதய படபடப்பு உள்ளவர்கள் அடிக்கடி, ஆட்டு இருதயம் எடுத்துக்கொள்ளலாம்.
ஹார்மோன்: ஆட்டின் விதைப்பையை பொறுத்தவரை புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளதால், ஆண்களுக்கு தேவையான டெஸ்டோஸ்ட்ரோன் என்று சொல்லக்கூடிய ஹார்மோனை அதிகரிக்க செய்யும்.. ஆண்மை குறைவு மற்றும் விந்தணுக்களின் குறைபாடு உள்ளவர்கள் ஆட்டின் விதைப்பையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பார்கள்.
அதேசமயம், விலங்கு இறைச்சிகளில் உறுப்புகளை பொறுத்து, இதிலுள்ள கொழுப்புகளின் அளவானது மாறுப்படுகிறது. இதன்காரணமாக தமனி அடைப்பு, இதய நோய்கள் ஏற்படலாம் என்கிறார்கள்.. எனினும், உறுப்பு இறைச்சிகளில் உள்ள கொழுப்பை கல்லீரலில் உருவாகும் உடல் கொழுப்பானது சமன் செய்கிறதாம். ஆரோக்கியமான கொழுப்புகள் இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு காரணமாவதில்லை என்று சமீபத்தில்கூட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
தவிர்க்கலாம்: எனினும், உறுப்பு இறைச்சிகள் சிலருக்கு உடலில் கொழுப்பு அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, பக்கவாதம், மாரடைப்பு, உடல்பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் இவைகளை உணவில் தவிர்த்து விடலாம்.
அதேபோல, உறுப்பு இறைச்சிகளில் ப்யூரின்கள் நிறைய உள்தளால், யூரிக் அமிலத்தை உருவாக்க செய்கின்றன. இதனால், கீல்வாதம் போன்ற பாதிப்புகளும் வரலாம். எனவே, கீல்வாதம் உள்ளவர்கள், இதனை சாப்பிடுவதை தவிர்க்கலாம். அதேபோல, கர்ப்பிணி பெண்கள் அதிகமாக உறுப்பு இறைச்சிகளை சாப்பிக்கூடாது. இதனால், குழந்தை பிறப்பில் குறைபாடுகள் வரலாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications