பச்சை வைரம் புளிச்சக்கீரை.. ஆணின் வரப்பிரசாதம்.. பெண்ணின் அருமருந்து.. அற்புதமான கோங்குரா சத்துக்கள்
சென்னை: மிகச்சிறந்த மூலிகையாக திகழக்கூடிய புளிச்சக்கீரையை பெரும்பாலானோர் சமையலுக்கு பயன்படுத்துவதில்லை.. இதிலுள்ள சத்துக்கள் அபாரம்... புளிச்சக்கீரையை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
புளிச்சக்கீரையில் வைட்டமின் A, C, இரும்பு சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை நிறைந்திருக்கின்றன. அனைத்துவிதமான வாத கோளாறுகளுக்கும் புளிச்சக்கீரை அருமருந்து என்று சொல்லலாம்.

ஆண்மை குறைபாடு: ஆண்மைக்குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த புளிச்சக்கீரை ஒரு வரப்பிரசாதம். இந்த கீரையை நிழலில் உலர்த்தி, ஜாதிக்காய், சுக்கு சேர்த்து இடித்து பவுடராக்கி வைத்து கொள்ள வேண்டும்.. பின்னர், பாசி பருப்பு, மிளகாய், உப்பு இவைகளை மிக்ஸியில் நன்றாக பொடி செய்து, அதனுடன் புளிச்சக்கீரை பொடியையும் சேர்த்து, மதியம் சுடசுட சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சாப்பிடலாம். இப்படி 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்குமாம்.
கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் என்றாலும், இந்த புளிச்சக்கீரையில் அது சற்று அதிகம்.. புளிச்சக்கீரையை மசியல் செய்து சாப்பிட்டு வரும்போது, ரத்தம் விருத்தியாகும்.. இதில் வைட்டமின் C சத்தும் உள்ளதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது.
கெட்ட கொழுப்புகள்: உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இந்த புளிச்சக்கீரை பெஸ்ட் சாய்ஸாகும்.. கெட்ட கொழுப்புகளை அழிக்கும் சக்தி இந்த கீரைக்கு நிறையவே உள்ளது.. அத்துடன், உடலில் கொலஸ்ட்ரால் படிவதையும் தடுத்து நிறுத்துகிறது.. இதனால் உடல் எடை பெருகுவது முன்கூட்டியே தடுத்துவிடப்படுகிறது.
வளரும் குழந்தைகளுக்கு இந்த புளிச்சக்கீரையை உணவில் தந்து வருவதால், அவர்களின் பார்வை மேலும் கூர்மையாகும்.. பசி உணர்வு தூண்டப்படும்.. புளிச்சக்கீரையை அடிக்கடி பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட தந்துவந்தால், குடலிலுள்ள புழுக்களும் அழியும்.. வயிறும் சுத்தமாகும்... நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.. .
இருமல் மருந்து: இருமல், காய்ச்சலில் அவதிப்படுவோர், புளிச்சக்கீரையுடன் மிளகு சேர்த்து மசியல் செய்து சாப்பிடலாம். இதை மையப்படுத்திதான், புளிச்சக்கீரையில் இருந்து இருமல் மருந்து தயாரிக்கப்படுகிறது.
சொறி, சிரங்கு என எந்தவிதமான சரும நோய் இருந்தாலும், இந்த கீரையை சட்னி அல்லது துவையல் செய்து சாப்பிடும்போது, விரைவில் குணம் பெறலாம்.. அதேபோல, இந்த கீரையை விழுதாக அரைத்து, கட்டிகள், புண்கள், காயங்கள் மீது பூசிவந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்..
கருத்தரிப்பு: பெண்களின் பிசிஓஎஸ் கருத்தரித்தலில் இந்த புளிச்சக்கீரையின் பங்கு அபரிமிதமானது.. காரணம், உடலில் ஈஸ்ட்ரோஜன், ப்ரஜஸ்ட்ரோன் ஹார்மோன் அளவுகளை இந்த கீரை சமநிலைப்படுத்துகிறது... பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அனைத்துவிதமான தொந்தரவுகளையும் புளிச்சக்கீரை சரிசெய்கிறது. குறிப்பாக, அதிகமான ரத்தப்போக்கை உடனடியாக தடுத்து நிறுத்தி, வயிற்று வலியையும் குணமாக்குகிறது.
இதயநோயாளிகளுக்கேற்ற கீரை இதுவாகும்.. நீர்ச்சத்து நிறைந்த கீரை என்பதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க செய்கிறது.. குரோமியம் பிக்ரோலினேட் என்ற மூலப்பொருள் இக்கீரையில் உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கும், உயர் ரத்தம் அழுத்தம் உள்ளவர்களும், அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கும், இந்த கீரை மிகச்சிறந்த உணவாகும்.
புற்றுநோய் செல்கள்: புளிச்சக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலின் செல்கள் வலுப்பெறுவதுடன், புற்று செல்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் ஆற்றலை தருகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள், புளிச்சக்கீரையிலுள்ள பழத்தில் சாறு எடுத்து, அதில் சர்க்கரை, மிளகு கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.. இதனால் குடல் புண்களும் ஆறிவிடும். புளிச்சக்கீரையின் விதைகளும் மருத்துவ குணம் கொண்டவை... இந்த விதைகள் பால் உணர்வுகளை தூண்டிவிட துணைபுரியக்கூடியது..
சளி இருமல் இருந்தாலும், அதற்கும் இந்த கீரையின் சாறு மருந்தாகிறது.. அதாவது புளிச்சக்கீரையிலுள்ள பூக்களை தனியாக எடுத்து, நசுக்கி அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும். ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப்பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி சாப்பிடும்போது, எப்பேர்பட்ட இருமலும் சரியாகும் என்பார்கள்.. நெஞ்சிள் சளி கட்டியிருந்தாலும் அவைகளை கரைத்து வெளியேற்றும். இதனால் சுவாச கோளாறுகள் முழுமையாக நீங்குகின்றன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications