யூரிக் அமிலம் அதிகமிருக்கா? கீரைகள் நல்லதுதான், ஆனால் இவங்க மட்டும் "தொடாதீங்க".. இது தெரியாம போச்சே
சென்னை: கீரைகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன? கீரைகளை அதிகம் சாப்பிட்டால் உடல் உபாதைகள் வருமா? நிறைய கீரைகளை எடுத்து கொள்வதால், என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்? அவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஊட்டச்சத்தின் களஞ்சியமாக கீரைகள் திகழ்கின்றன.. காரணம் கீரைகளில் வைட்டமின் K, வைட்டமின் C, வைட்டமின் A, ஃபோலேட், இரும்பு சத்து, கால்சியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் அடங்கியிருக்கின்றன. இதனால் தினம் ஒரு கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.. நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடைய செய்கின்றன. நம்முடைய ரத்தவிருத்தியை பெருக்க செய்கின்றன.

நிறைய கீரைகள்: எனினும், கீரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். காரணம், அதிகளவில் நார்ச்சத்துகள் கீரைகளில் உள்ளன.. எனவே, செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் பிடிக்கிறது. செரிமானம் தாமதமாவதால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது பேதி மற்றும் காய்ச்சல் ஏற்பட காரணமாக அமைகிறது.
அதேபோல, அதிகளவில் கீரை வகைகளை சேர்த்துக் கொண்டால், அது நமது உடலில் வாய்வு பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது. கீரை வகைகளை, நமது உடல் செரிமானம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இதன்காரணமாக, வளர்சிதை மாற்றம் தடைபடுகிறது.
ரத்தம் உறைதல்: கீரை வகைகளில், ஏராளமான வைட்டமின் K உள்ளது. ரத்தம் உறைதல் தொடர்பான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த கீரை வகைகள் தீமை பயப்பவையாக உள்ளன. அதேபோல், குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளுடன் கீரையில் உள்ள வைட்டமின் K இணைந்து, ரத்த அழுத்தத்தை, இன்னும் குறைந்த அளவு கொண்டதாக மாற்றிவிடும்.. இது உயிருக்கே ஆபத்தாகவும் விளைந்துவிடுமாம்.
கீரைகளில் ப்யூரின் கீரையில் அதிகம் உள்ளது, இது உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கிறது. மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, யூரிக் அமில அளவு ஏற்கனவே அதிகமாக இருப்பவர்கள், கீரைகளை குறைத்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, கீரையில் ஆக்சலேட்டுகள் உள்ளதால், இது சிலருக்கு சிறுநீரக கற்களை உண்டாக்கும். மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் கீரையை குறைந்த அளவு சாப்பிட வேண்டும்.
தைராய்டு: கீரைகளில் காய்ட்ரோஜென்கள் நிறைய உள்ளன. எனவே, தைராய்டு கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் குறிப்பாக ஹைபோதைராய்டிசம் பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள், கீரையை உணவில் குறைத்து கொள்ள வேண்டுமாம். எப்போதுமே மதிய உணவில் கீரை வகைகளை சாப்பிட்டால், மாலைநேரத்தில், ஹெவி ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும்.












Click it and Unblock the Notifications