Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நுரையீரலை "ஸ்ட்ராங்" செய்ய இது போதுமே.. நுரையீரலுக்குள் "நீர் கோர்ப்பு".. உடனே இதை மட்டும் செய்யுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனித உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பு நுரையீரலாகும்.. அதனால்தான், தொற்றுக்கள் எதுவும் அண்டாதவாறு, நுரையீரலை பாதுகாக்க வேண்டி உள்ளது. அந்தவகையில், நுரையீரலில் நீர்தேக்கம் இருந்தாலும், உடனடியாக கவனிக்க வேண்டும். இதற்கான அறிகுறிகள் என்ன தெரியுமா?

நுரையீரல் : சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, புற்று நோய், குறட்டையினால் வரும் மூச்சுத்திணறல், தொழில்சார்ந்த நுரையீரல் தொற்று நோய்கள் போன்ற காரணங்களால், நுரையீரலுக்கு தொற்று ஏற்படுகிறது. இதைத்தவிர, சர்க்கரை நோய், இருதயநோய், உடல்பருமன், சிறுநீரக செயல்பாடு குறைதல், கல்லீரல் செயல்பாடு குறைதல் போன்றவைகளும், நுரையீரலுக்கு பாதிப்பை தரக்கூடியவையாகும்.

Health Benefits of Green Vegetables and What are the Symptoms of Pulmonary Edema

10 நாட்களுக்கு மேல் சளி, இருமல் இருந்தால், உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டுமே தவிர, இதற்கெல்லாம் கைவைத்தியம், பாட்டி வைத்தியம் முறைகளை கையில் எடுக்கக்கூடாது. ஒருவேளை சளி பிடித்துவிட்டால், அது உங்கள் நுரையீரலை பாதிக்கும் முன்பே அதை வேண்டுமானால் வீட்டு மருத்துவத்தில் வெளியேற்றலாம்.

மிளகு தண்ணீர்: இதற்கு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இத்துடன் சிறிது மிளகையும் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். மிளகில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட், வலி நிவாரண பண்புகள் உள்ளதால், சளியை உடைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

வெந்நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் மஞ்சளில் உள்ள குர்குமின், சளியை இளக செய்யும்.. பால் சேர்க்காமல், ஒருநாளைக்கு 2 அல்லது 3 கப் ப்ளாக் காபி குடிக்கலாம்.. ஓரிரு முறை ஆவி பிடிக்கலாம்.

சிவப்பு நிறம்: அதனால்தான், நுரையீரல் எப்போதுமே ஆரோக்கியத்துடன் செயல்பட, ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப்பழங்களையும், காய்கறிகளையும் அதிகம் சாப்பிட சொல்கிறார்கள். குறிப்பாக, கொய்யா, கிவி, எலுமிச்சை, சாத்துக்குடி, மாதுளை, பைன் ஆப்பிள் சக்கரவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் போன்றவைகளை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும்.

ஒமேகா 3 சத்துக்கள் அடங்கிய, மீன்கள், பாதாம், வெள்ளரி விதைகளையும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும. இஞ்சி - பூண்டு, மஞ்சள், இந்த மூன்றையும், சமையலில் அதிகம் சேர்க்க வேண்டும். இதெல்லாம் சுவாசப்பாதையை சரிசெய்து, நுரையீரலுக்கு பாதுகாப்பை தரக்கூடியது.

மூச்சுத்திணறல்: அதேபோல நுரையீரலில் நீர்த்தேக்கம் இருந்தால் அதையும் அலட்சியப்படுத்தக்கூடாது.. மூச்சுத்திணறல், இதய செயலிழப்பு, நுரையீரல் புற்றுநோய், வைரஸ் பக்டீரியா தொற்றுக்கள் காரணமாக, நுரையீரலில் நீர் தேக்கம் ஏற்படலாம்... இப்படி நுரையீரலில் நீர் சேர்ந்திருந்தால், ஃப்ளு போன்ற காய்ச்சல்கள் தாக்கலாம்.. அல்லது நிமோனியா பாதிப்பு வரலாம்.. அல்லது நுரையீரலில், மூச்சுக்குழாயில் தொற்று பாதிப்பும் ஏற்படலாம்.

அதனால்தான், 102Fஐ விட காய்ச்சல் அதிகமாக இருந்தாலோ அல்லது சிறிய ஒவ்வாமை அல்லது தொடர்ச்சியான இருமல் போன்றவைகள் இருந்தால், அதை உடனடியாக டாக்டரிடம் சென்று கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

புற்றுநோய்: எக்ஸ்ரே, ECG மூலம் எந்த இடத்தில் திரவம் சேர்ந்துள்ளது என்பதையும் பரிசோதனையில் கண்டறிந்துவிடலாம். மொத்தத்தில், எதையுமே அலடசியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரை அணுகினால், முன்கூட்டியே நுரையீரல் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் எளிதாக களையப்பட்டுவிடும். அதேபோல, மாடி ஏறி இறங்குவதில் மூச்சு வாங்குதல் பிரச்சனை இருந்தால், வயது காரணம் என்று அதையும் அலட்சியப்படுத்திவிடக்கூடாது.

(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+