மஞ்சள் மஞ்சளா பற்கள் இருக்கா.. இந்த "இலை"யை வாயில் போட்டு மெல்லுங்க.. நடக்கும் மாற்றத்தை பாருங்க
சென்னை: பலருக்கு பளிச் பற்கள் வேண்டுமென்பது பெரிய கனவாகவே இருந்து வருகிறது.. எனினும், சில சமயம், கறைகள் பற்களில் தங்கிவிடும்.. வெண்மை பற்களை பெறுவதற்கு நாம் சில டிப்ஸ்களை வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கலாம்.
பற்களில் கூச்சத்திற்கும், பற்களில் கறை படிவதற்கும் நிறைய காரணங்கள் இருக்கலாம்.. பல் கறைகளை எடுத்துக் கொண்டால், பல் சரியாக துலக்காவிட்டாலும், அல்லது சாப்பிட்ட பொருள்கள் பற்களில் தேங்குவதாலும், மஞ்சள் அல்லது பழுப்பு நிற கறைகள் ஏற்பட்டுவிடும்...

இந்த கறைகளை நீக்காவிட்டால், பாக்டீரியாக்கள் உற்பத்தி அதிகமாகி, பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகரித்து விடும் அபாயம் உண்டு. அதனால், கறை படிய துவங்கும்போதே, இதை வீட்டு மருத்துவத்திலேயே சரிசெய்யலாம்.
சின்ன சின்ன டிப்ஸ்: கறைகளை போக்க வேண்டுமானால், ஒரு கிண்ணத்தில், பேக்கிங் சோடா + உப்பு இந்த இரண்டையும் தண்ணீர் கலந்து சேர்ந்து, அதை பிரஷ்ஷால் டூத் பேஸ்ட் போல எடுத்து பற்களை தேய்த்து வரலாம். பிறகு, தண்ணீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து கலந்து அதை சிறிது சிறிதாக வாயில் ஊற்றி சில விநாடிகள் வைத்திருந்து வாயை கொப்பளிக்கலாம்.. அடுத்து சாதாரண நீரில் ஒருமுறை வாயை கொப்பளித்தால், கறைகள் மெல்ல குறைய ஆரம்பிக்கும்.
2 பல் நசுக்கிய பூண்டு + தக்காளி சாறு ஒரு ஸ்பூன், + சோடா உப்பு ஒரு துளி இவைகளுடன் வழக்கமாக பல்தேய்க்கும் பேஸ்ட் போன்றவற்றை கலந்து தேய்த்து வந்தாலும், கறைகள் நீங்க தொடங்கும்.
ஆரஞ்சு பழத்தோல்: ஸ்ட்ராபெர்ரி பழத்தை மசித்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து, இரண்டையும் சேர்த்து பல் தேய்க்கலாம்.. ஆரஞ்சு பழதோலை, பற்களில் கறை உள்ள இடங்களில் சில நிமிடங்கள் வைத்து தேய்த்தாலும், கறைகள் மெல்ல கரையும்..
கற்றாழை ஜெல்லுடன், கிளிசரின், பேக்கிங் சேடா, பழத்தின் சாறு போன்றவற்றை கலந்து, டூத் பிரஷ்ஷில் பற்களை தேய்த்து வரலாம். தொடர்ந்து கறை படியாமல் இருக்க வேண்டுமானால், தினமும் 4 மிளகை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டாலே போதும். அல்லது தினமும் 2 கொய்யா இலைகளை எடுத்து சுத்தம் செய்து அதை மென்று துப்பினாலே போதும். பற்கள் பளிச் பளிச்தான்..!!
பல்கூச்சம்: பல் கூச்சத்தை எடுத்துக் கொண்டாலும், இதற்கும் பல காரணங்கள் உள்ளன.. சரியான முறையில் பற்களை சுத்தம் செய்யாவிட்டால் பல்கூச்சம் ஏற்படும்.. அழுத்தியும், வேகமாகவும், பற்களை தேய்த்தால் எனாமல் தேய்ந்து போகும். ஈறுகளில் பிரச்சனை இருந்தாலும் பல்கூச்சம் வர வாய்ப்புள்ளது..
பல் சொத்தை இருக்கும்போது பற்களில் கூச்சம் வரலாம்.. வைட்டமின் குறைபாடு இருந்தாலும் பல்கூச்சம் வரலாம்.. பற்களுக்கு ப்ளீச்சிங் செய்தாலும், கூச்ச உணர்வு வரலாம்.. சிலருக்கு மழைக்காலங்களில் பற்களில் கூச்சம் வரலாம்.. புளிப்பான அல்லது மிகவும் சூடான அல்லது குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடும்போதும் பற்களில் கூச்சம் வரும்..
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன் வாயில் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்கள் வாயில் வைத்திருந்து, எண்ணெய்யை கொப்புளித்து வந்தாலே பல் கூச்சம் குறைய துவங்கும்.. பற்களின் கறைகளை நீக்க உதவும் கொய்யா இலை, பல்கூச்சத்தை போக்கவும் உதவும். அதனால், கொய்யா இலைகளை மென்று வரலாம்.
2 பல் பூண்டு எடுத்து நசுக்கி + அத்துடன், கல்உப்பு சேர்த்து பல்லில் 15 நிமிடங்கள் வைத்திருந்து வாய் கொப்பளித்து வந்தாலும் பல் கூச்சம் குறையும். வெங்காயத்தையும் இப்படி பயன்படுத்தலாம்.. கிராம்பு எண்ணெய்யை ஈறுகளில் தேய்த்து வந்தாலும் தீர்வு கிடைக்கும்.. எனினும் இதெல்லாம் தற்காலிகம்தானே தவிர, பல் டாக்டரிடம் நேரடியாகவே சென்று ஆலோசனை பெறுவதே நல்லது.












Click it and Unblock the Notifications