தேனில் ஊற வைத்த அத்திப்பழம்.. 2 துண்டு போதுமே.. அத்தி காட்டும் அதிசயம் பாருங்க.. தழைக்கும் ஆரோக்கியம்
சென்னை: அத்திப்பழம் தரும் அதிசய நன்மைகள் என்னென்ன தெரியுமா? தேனில் ஊறவைத்து அத்திப்பழம் சாப்பிட்டால் உடலில் தீரும் நோய்கள் என்னென்ன தெரியுமா? சத்துக்கள் நிறைந்த அத்திப்பழத்தின் ஆரோக்கிய பலன்களை சுருக்கமாக பார்ப்போம்.
அத்திப்பழத்தில், இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து, வைட்டமின் C, A, K, E, K உள்ளதால், உடலுக்கு தேவையான ஆக்சிஜன் சுழற்சியை கொடுக்கின்றன.. பித்தத்தை தணிக்கக்கூடியது இந்த அத்திப்பழம்..

தேன் நன்மைகள்: தேனில் அத்திப்பழத்தை ஊறவைத்து சாப்பிடும்போது பலன்கள் இரட்டிப்பாகின்றன. ஆன்டிபயாடிக்ஸ் தரும் பக்க விளைவுகளிலிருந்தும் விடுதலை பெற உதவுவது தேன்.. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களில் 9 வகையான அமினோ அமிலங்களும் தேனில் உள்ளன. வைட்டமின் C சத்து இதில் அதிகம் உள்ளது.
பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய தாதுகள் தேனில் உள்ளதால், புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுத்து நிறுத்தும் அற்புத மருந்தாகத் தேன் செயல்படுகிறது. தேனில் அத்திப்பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
அத்திப்பழம்: சொத்தை இல்லாத, புழுக்கள் இல்லாத தரமான 20 அத்திப்பழங்களை வாங்கி, அதை சுத்தமாக கழுவி 8 துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒருபாட்டில் அத்திப்பழத்தை போட்டு, சுத்தமான தேன் 30 ஸ்பூன் தேனை ஊற்றி, பழத்தை மூழ்க வைத்துவிட வேண்டும். இதை தினமும் காலை, மாலை வெயிலில் அரைமணி நேரம் வைத்து கலந்து விட்டு வர வேண்டும்..
இப்போது இதிலிருந்து தினமும் 2 துண்டு, 2 வேளை சாப்பிட்டு வரவேண்டும். ஆனால், ஈரமான கைகளையோ, வேறு வேறு கரண்டிகளையோ அதில் பயன்படுத்தக்கூடாது.
செரிமானம்: அத்திப்பழத்தில் நார்ச்சத்தும், வைட்டமின் K, B6, பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளதால், ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாக திகழ்கிறது... தேனும் அத்திப்பழமும் செரிமானத்தினை தூண்டக்கூடியவை.. இரண்டுமே சீரான குடல் இயக்கத்திற்கு உதவக்கூடியவை. குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும், ஆரோக்கியமான செரிமான அமைப்பை தேனும், அத்திப்பழமும் ஆதரிக்கின்றன. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், தொடர்ந்து 21 நாட்கள் தினமும், இதில் 2 துண்டுகளை சாப்பிட்டு வந்தால் நிவாரணம் பெறலாம்.
தேனுடன் அத்திப்பழத்தை ஊறவைத்து சாப்பிடும்போது, உடலுக்கு தேவையான நீடித்த ஆற்றலும், சுறுசுறுப்பும் கிடைக்கிறது.. ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகிறது.. அனீமியா மட்டுமல்ல, மலச்சிக்கல், பைல்ஸ் போன்ற நோய்களுக்கு தீர்வை தரக்கூடியது தேனில் ஊறவைத்த அத்திப்பழம்.. உள் மூலம், வெளி மூலத்தை குணப்படுத்தக்கூடிய அத்திக்காய்.
நரம்புகளுக்கு பலம்: ஆண்களுக்கு பாலியல் தூண்டுதலை தூண்டக்கூடியது அத்திப்பழம்.. எனவே, ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த தீர்வை தரும்.. கல்லீரல் வீக்கத்தை குறைக்கக்கூடிய தன்மை அத்திப்பழத்துக்கு உண்டு..
நிறைந்த இந்த அத்திப்பழத்தை வளரும் பிள்ளைகளுக்கும், 40 வயதான பெண்களுக்கும் கட்டாயம் தர வேண்டும். இதனால், எலும்புகள் உறுதிப்பெறும்.. செரிமான தொந்தரவு இருந்தால், காலை உணவுக்கு பிறகு, இதில் 2 துண்டு அத்திப்பழம் சாப்பிடலாம். அத்திப்பழம் சாப்பிடுவதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சருமம்: சருமத்திற்கு கவசம் போல இவை இரண்டும் பாதுகாக்கின்றன.. தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், தோலில் உள்ள எரிச்சலை ஆற்றி, பராமரிப்பை தருகிறது.. அத்திப்பழத்திலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தோல் அழற்சியை குறைக்க செய்கிறது.. எனவே, தேன், அத்திப்பழம் இரண்டையுமே உள்ளுக்குள் சாப்பிடுவதுடன், இரண்டையுமே சேர்த்து அரைத்து ஃபேஷியலுக்கும் பயன்படுத்தலாம்.
தேனுடன் அத்திப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி வரலாம்.. அதேபோல தேனுடன் அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவது பல்வேறு நன்மைகளை தரக்கூடியது என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது சிறந்த ஆரோக்கியமாகும். \
அடர்த்தி நிறைந்த தேனில் அதிக ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் அடங்கியிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தேன் உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்கு ஆற்றலை வழங்குவதில் தேன் முக்கிய பங்களிப்பை தருகிறது.. மலச்சிக்கல் தொந்தரவு இருப்பவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் தினமும் 2 துண்டுகளை சாப்பிட்டு வரும்போது, மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெறலாம்... சரும சருக்கத்துக்கு மட்டுமல்லாமல், வறண்ட கூந்தல், தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த அத்திப்பழம் நன்மை பயக்கிறது.












Click it and Unblock the Notifications