கல்லீரலை காலி செய்யாமல் காக்கும் ஆரோக்கிய உணவு.. சத்து நிறைந்த பூண்டு, நெல்லிக்காய்.. ஹெல்த் டிப்ஸ்
சென்னை: கல்லீரலை பலவீனப்படுத்தும் உணவுகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வதுடன், கல்லீரல் பலம் பெற உதவும் உணவுகள் என்னென்ன என்பதையும் அறிந்து கொள்ளலாம். நெல்லிக்காய், பூண்டு இவை இரண்டையும் எப்படி உணவில் சேர்த்து கொள்வது தெரியுமா?
உடலின் மிகப்பெரிய உறுப்பு.கல்லீரல் ஆகும்.. இதயம், மூளை போல கல்லீரலும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். கல்லீரலும் மூளையும் எடையில் சமமானவைகள்.. அதாவது 1400 கிராம் இருக்கும்.

எண்ணெய் பொருள்களை சீரணம் செய்வது கல்லீரல்தான்.. உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும் மிகப்பெரிய பணியை செய்யக்கூடியது.. உடலில் சுரக்கும் பல புரதங்கள், கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தக்கூடியது இந்த கல்லீரல்தான்.. உடலிலுள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தும் மிகபெரிய பணியை செய்வதும் கல்லீரல்தான்...
கல்லீரல்: உடலுக்கு தேவையான புரோட்டீனை உற்பத்தி செய்வதும் கல்லீரல்தான். வளர்சிதை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து சேமிப்பு போன்ற செயல்பாடுகளுக்கு உதவுவதும் கல்லீரல்தான்.
பித்தப்பையின் சுரப்பி நீரான பித்தநீர் தான், எண்ணெய் மற்றும் கொழுப்பை உடைத்து ஜீரணம் செய்ய உதவுகிறது. எனவேதான், மஞ்சள் காமாலை வந்தால், பால் பொருள்கள், எண்ணெய் உணவுகளை சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். காரணம், மஞ்சள் காமாலை என்பது ஹெபடிடிஸ்(Hepatitis) A, B & C போன்ற வைரஸ்களால் கல்லீரலுக்கு பாதிப்பை தருவதாகும்.
மாற்றங்கள்: இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த கல்லீரலை பாதுகாக்க வேண்டுமானால், உணவில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலே போதும்.. மதுபானம், சிவப்பு இறைச்சி, உப்பு, அதிக இனிப்பு, எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு, வெள்ளை மாவில் செய்யப்படும் பேக்கரி உணவுகளை தவிர்த்துவிட்டு, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
கீரைகளை பொறுத்தவரை நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை.. எளிதில் செரிமானம் தரக்கூடியவை.. குளோரோஃபில் அதிகமாக உள்ளவை.. எனவே, கழிவுகள், நச்சுகளை நடுநிலையாக்குவதற்கும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் கீரைகள் பேருதவி புரிகின்றன.. கீரைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதுடன், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்தும் கல்லீரலை பாதுகாக்கின்றன.
காய்கறிகள்: காய்கறிகளில், ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றை வாரம் 3 முறையாவது சாப்பிட வேண்டும். ஏனென்றால், இதிலுள்ள குளுக்கோசினோலேட்டுகள், உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் பொருட்களை உடைத்து, கல்லீரலை காக்கின்றன.
சமையலை ஆலிவ் எண்ணெய்யில் சமைக்கலாம்.. அதேபோல இஞ்சி, மஞ்சள், பூண்டு போன்றவற்றை அதிகமாக சேர்த்து சமைக்க வேண்டும். மஞ்சளில் 'குர்குமின்' என்ற சத்துக்கள் கல்லீரலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கின்றன.
பூண்டுகள்: இதில் பூண்டுகள் சற்று கூடுதலான பணிகளை செய்கின்றன. சல்பர் கலவைகள் பூண்டில் நிறைந்துள்ளதால் கல்லீரல் என்சைம்களை சீராக்கி, கழிவுகளை வெளியேற்றுகின்றன.. பூண்டிலுள்ள அல்லிசின், வைட்டமின் C, வைட்டமின் B6 மற்றும் செலினியம் ஆகிய சத்துக்கள் நச்சு நீக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பூண்டிலுள்ள அல்லிசின் என்பது ஒரு கந்தக கலவையாகும்.. இது ஆன்டிஆக்ஸிடன்டு மற்றும் ஆன்டிபயாடிக் பண்புகளை பெற்றிருக்கின்றன.. செலினியம் என்பது இயற்கையாகவே நச்சு நீக்கும் கனிமமாகும்... இது ஆன்டிஆக்ஸிடன்டுகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம், கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்க செய்து, கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பையும் தடுத்து நிறுத்துகிறது.
மீன்களில், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்றவைகளை சாப்பிடலாம். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இந்த மீன்களில் அதிகமாக உள்ளதால், வீக்கத்தை குறைப்பதுடன், கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தையும் வெகுவாக குறைக்க செய்கின்றன.
காய்கறிகள்: முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் சல்ஃபர் நிறைய உண்டு. இவற்றில் உள்ள குளுக்கோசினோலேட் (Glucosinolate) என்ற சல்ஃபர் கலந்த கலவை, என்ஸைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சு நீக்கத்துக்கு உதவுகிறது. திராட்சை, முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட், எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள், ஆப்பிள் சீடர் வினிகர், கீழாநெல்லி, மீன், முட்டை, க்ரீன் டீ இவைகள்தான் கல்லீரலை பலப்படுத்தக்கூடிய உணவுகளாகும்.
எலுமிச்சம் பழத்தை ஏதாவது ஒரு வகையில் சாப்பிட்டு வரவேண்டும். இதில் D-Limonene என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால் கல்லீரல் செயல்பாட்டை தூண்டுகிறது. ஆரோக்கியமான என்சைம்களை அதிகரிக்க செய்து, உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. எனவே, எலுமிச்சம் ஜூஸ், எலுமிச்சம் டீ போன்றவற்றை தினமும் குடித்து வரலாம்..
பருப்புகள்: எலுமிச்சையை போலவே, வைட்டமின் C நிறைந்த அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரிகள், அக்ரூட் பருப்புகள், பாதாம், ஆளிவிதைகள், வைட்டமின் E நிறைந்த உணவுகளையும் சேர்த்து கொள்ளலாம்.
கிரீன் டீ ஒருநாளைக்கு 2 வேளை குடிக்கலாம்.. அதேபோல காபியும் குடிக்கலாம்.. காரணம், காபியிலுள்ள காபின், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலிபினால்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், இவை சிரோசிஸ் நோய்க்கு எதிரான ஆற்றலை அதிகரிக்க செய்கின்றன. இதனால கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்படாது.
கல்லீரல் சேதாரத்தை தடுக்க வேண்டுமானால், பெர்ரிக்களை அதிகமாக உணவில் சேர்த்து கொள்லளாம்.. ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் கிரான்பெர்ரி போன்றவற்றில் பாலிபினால்ஸ் (polyphenols) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகாக காணப்படுகின்றன. இவை நம்முயைட நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்க உதவுகின்றன. உயிரணு மறுமொழியை (cell response) அதிகரிப்பதன் மூலமும் வீக்கத்திற்கான வாய்ப்பை குறைப்பதன் மூலமும் பெர்ரிக்கள் நம்முடைய கல்லீரல் சேதமாகாமல் பாதுகாக்கின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications