கடம்பா மீன்.. பார்க்கவே தினுசா இருக்கே, பலனோ அள்ளுது.. கடம்பா மீன்களை இப்படி சுத்தம் செய்து பாருங்க
சென்னை: மீனை வாங்குவதைவிட முக்கியம், அதை சுத்தம் செய்வதுதான்.. கடல்வாழ் உயிரினங்களில் பெரும்பாலும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நச்சுப்பொருட்கள் இருக்கும் என்பதால், அதை நன்றாக செய்ய வேண்டியிருக்கிறது. கல் உப்பு, ம.தூள் இல்லாமல் எந்த மீனையும் கழுவ முடியாது. அந்தவகையில், கடம்பா மீனை எப்படி சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
இந்த கடம்பா மீனில் பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர், ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுல்லாமல், செலினியம் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் இந்த மீனில் நிறைந்துள்ளது..

அதாவது, 100 கிராம் கடம்பா மீனில் கிட்டத்தட்ட 44.8 µg செலினியம் இருக்கிறதாம்.. இந்த செலினியம் என்பது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது என்பதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த இந்த மீன் தேவையானதாக இருக்கிறது.
கடம்பா மீன்: கடம்பா மீனை சாப்பிடுவதால், இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. புற்றுநோய் தொடர்பான செல்கள் உருவாவது அழிக்கப்படுகிறது.. அத்துடன், ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் இந்த மீனை சாப்பிடலாம். இதனால், அனிமிக் தொந்தரவு நீங்கி, ரத்த சிவப்பணுக்களும், வெள்ளை அணுக்களும் அதிகரிக்கக்கூடும்.. அத்துடன், மூளைக்கு தேவையான ஆக்சிஜனையும் இந்த மீன் வழங்குகிறது.. இதனால், மூளை வளர்ச்சியும் அதிகமாகிறது.
இந்த கடம்பா மீனை நிறைய பேர் சுத்தம் செய்யதெரியாமல், கடைகளிலேயே காசு கொடுத்து சுத்தம் செய்து கொள்வார்கள்.. ஆனால், நாமும் வீட்டிலேயே கடம்பாவை சுத்தம் செய்யலாம். எப்படி என்று பார்ப்போம்.
இதன் தலைப்பகுதியை இழுத்தால், தலை பகுதி தனியாகவும், உடல் பகுதி தனியாகவும் வந்துவிடும். இப்போது தலைப்பகுதி மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இந்த தலையில் குடல் போன்ற பகுதி ஒட்டிக் கொண்டிருக்கும்.. இதை வெளியே துண்டித்து எடுத்துவிட வேண்டு. இந்த குடலுக்குள்தான், கருப்பான திரவங்கள் இருக்கலாம். அதனால், குடலை நீக்கிவிட வேண்டும்.
தலைப்பகுதிகள்: இப்போது மறுபடியும் தலைப்பகுதியின் உள்பக்கத்தை பார்த்தால், ஒரே ஒரு பல் போன்று ஒட்டிக் கொண்டிருக்கும்.. இந்த பல்லையும் கிள்ளி எடுத்து விட வேண்டும்.. இப்போது சுத்தம் செய்யப்பட்ட தலைப்பகுதியை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது நீளமாக இருக்கும் சதைப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். இதற்குள் பிளாஸ்டிக் போன்ற நீளமான குச்சி போல இருக்கும்.. அதை வெளியே எடுத்துவிட வேண்டும். இந்த உடல் பகுதிக்குள்ளேயே மேலும் சில அழுக்குகள் காணப்படும்.. அதையும் நீக்கிவிட வேண்டும்.
சிகப்பு தோல்: இப்போது, உடல் பகுதியின் மேல் பரப்பில் இளஞ்சிகப்பு கலரில் தோல் இருக்கும்.. அந்த தோலையும் விரல்களாலேயே தேய்த்தும், உரித்தும் எடுத்துவிடவேண்டும். இப்போது, வெள்ளையான உடல் பகுதி மட்டும் காணப்படும்.. இந்த வெள்ளை பகுதிதான், நாம் சமைக்க வேண்டும்.. இதை நமக்கு விருப்பமான வடிவத்தில் அறுத்து கொள்ளலாம்.. பெரும்பாலும் வட்ட வடிவத்திலேயே அறுப்பார்கள்.
இப்போது ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்யப்பட்ட அனைத்து மீனையும் போட்டு, சிறிது கல் உப்பு சேர்த்து நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.. 3 முறையாவது தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்து கொள்ளலாம். அடுத்து சமைக்க வேண்டியதுதான்.
கடம்பா பிரட்டல்: கடம்பா என்றாலே, அதை பிரட்டி சாப்பிடுவார்கள்.. அதாவது சுத்தம் செய்யப்பட்ட கடம்பாவில், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும். பிறகு இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து, தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு 5 நிமிடம் இருபுறமும் வேக விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், 5 நிமிடத்துக்கு மேல் வேகவைத்தால், இந்த மீன் ரப்பர் போலாகிவிடும்.
அடுத்து ஒரு வாணலியில், எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பச்சை மிளகாய், உப்பு போட்டு, தாளித்து, இந்த மீனையும் அதில் கொட்டி வதக்கினால், கடம்பா மீன் பிரட்டல் ரெடி.
கடம்பா கிரேவி: கடம்பா மீனில் கிரேவியும் செய்யலாம்.. எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, நறுக்கிய புண்டு போன்றவற்றை சேர்த்து, நன்றாக குழைந்ததும், சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.. இப்போது, தண்ணீர் கொதித்ததும், சுத்தம் செய்யப்பட்ட கடம்பா துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வேக விட்டு இறக்கினால் கடம்பா கிரேவி ரெடி.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications