காராமணி கலக்குதே.. சர்க்கரை நோயாளி சாப்பிடலாமா? தலைமுடி உதிர்வு, வெயிட் லாஸுக்கு உதவும் தட்டைப்பயிறு
சென்னை: சர்க்கரை நோயாளிகள் காராமணியை தவிர்க்க கூடாது.. அதேபோல, வளரும்பிள்ளைகள், பாலூட்டும் தாய்மார்கள், உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள், தலைமுடி உதிர்வு, வாயு தொந்தரவு இருப்பவர்களும் காராமணியை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். பக்கவாதம்(stroke), உயர் ரத்த அழுத்தம்(hypertension), ஆஸ்டியோபோரோசிஸ்( osteoporosis) போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கக்கூடிய காராமணி தரும் மருத்துவ நன்மைகளை பார்ப்போம்.
பயத்தங்காய், தட்டைப்பயிறு என்று சொல்லப்படும் காராமணியை, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களை உணவில் சாப்பிட சொல்வார்கள்.. காரணம், இந்த காராமணியில் அதிக அளவில் ஃபோலேட் சத்து நிறைந்திருப்பதால், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் பேருதவி புரிகிறது.. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று கர்ப்பிணிகள் இதை உணவாக எடுத்து கொள்ளலாம்.

அதேபோல, இரவு நேரங்களில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், வாயு பிரச்சனை உள்ளவர்கள் இரவு உணவில் காராமணி சேர்த்து கொள்ளலாம். ஏனென்றால், இந்த பயரில் டிரிப்தோபன் சத்து சற்று கூடுதலாக உள்ளதால் உடலிலுள்ள களைப்பை போக்கி, நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது. இது வாயுப்பிரச்சனையும் நீக்குகிறது.
சருமம், தலைமுடி, எலும்புகள்
இறந்த சரும செல்களை நீக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் , தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்தி கூந்தலை பளபளப்பாக வைத்துக்கொள்ளவும் இந்த காராமணி உதவுகிறது.. இதிலுள்ள வைட்டமின் K, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.
வளரும் குழந்தைகளுக்கு காராமணி சுண்டல் செய்து தரலாம்.. கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு சத்துக்கள், எலும்புகள், பற்களை உறுதிபெற செய்கிறது.. இரும்புச்சத்து நிறைந்த காராமணியை தருவதன் மூலம், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். ரத்த சோகையும் அண்டாது.
உடல் எடை குறைக்க முயற்சியா
நார்ச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதச்சத்து, போன்ற சத்துக்களும் காராமணியில் இருப்பதால், உடல் எடை குறைபவர்கள் தாராளமாக காராமணி சாப்பிடலாம்.. அரை கப் காரமணியில் 1 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளதால், வெறுமனே காராமணி வேகவைத்து, பொடி பொடியாக நறுக்கப்பட்ட சின்ன வெங்காயம், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம். உடல் எடை குறைவதில் கண்ணெதிரே மாற்றம் தெரியுமாம்.
கோலின் என்ற வைட்டமின் B நிறைந்த இந்த பயிறு, கல்லீரல் கோளாறுகளை உருவாக்குவதில்லை. வைட்டமின் C, ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் நிறைந்துள்ளதால், புற்றுநோயையைம் நெருங்க செய்வதில்லை.. அதிலும் வயிறு புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடிய பண்புகள் இந்த காராமணிக்கு உள்ளது.
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்ககூடாது
ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. B காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், வைட்டமின் K, C, மாவுச்சத்து, புரதச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியிருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை தவிர்க்கக்கூடாது..
மேலும், காராமணியில் மெக்னீசியம் போதுமான அளவுக்கு உள்ளதால், இன்சுலின் சுரப்பினை சீராக வைத்திருக்க உதவுகிறது.. இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இதிலுள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, நார்ச்சத்துக்கள், சர்க்கரை நோயாளிகளின் நரம்புகளுக்கு வலு தரக்கூடியது. காராமணியிலுள்ள கோலின் என்ற வைட்டமின் B, கல்லீரல் கோளாறையும் அண்டவிடாமல் செய்கிறது.












Click it and Unblock the Notifications