காசினி கீரை செய்றீங்களா.. உடல் எடை குறைஞ்சிடும்.. "அந்த" பிரச்சனை இருந்தாலும் காசினி கீரை போக்கிடும்
சென்னை: கீரைகளில் காசினி கீரை மிகவும் முக்கியமானது.. நாம் குடிக்கும் காபியில் சிக்கிரி கலப்பார்களே? அந்த சிக்கிரி இந்த காசினி கீரையில் இருந்துதான் எடுக்கப்படுகிறது.
வைட்டமின் A, B, C, மற்றும் தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து, என சகல சத்துக்களையும் வைத்திருப்பது காசினி கீரையாகும். காசினி கீரை விந்தணு உற்பத்தியை ஊக்குவிக்கும்.

பெயர்க்காரணம்: காணாம்கோழி கீரை என்பதுதான் மருவி காசினி கீரையாகிவிட்டது. இந்த காசினி கீரையை உணவில் சேர்த்து கொள்வதால், ஜீரண கோளாறு, பித்தப்பை, ரத்தகை, நீங்குகிறது.
உள்ளுறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், இருதயம் சம்பந்தமான பிரச்சனைகளையும் குணப்படுத்தும் வீர்யம் இந்த காசினிக்கு உண்டு. சிறுநீரகக் கற்கள் கரையும். காசினி கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயம் போல காய்ச்சி குடித்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.
இன்சுலின் சுரப்பை இந்த கீரை சுரக்க செய்வதால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவாக இது திகழ்கிறது. காசினிக்கீரையை சுத்தம் செய்து நன்றாக கழுவி, நிழலில் உலர்த்தி காயவைக்க வேண்டும். சருகு போல காய்ந்ததும், அதை மிக்ஸியில் பொடி செய்து வைத்து கொண்டால், பல வகைகளில் பயன்படுத்தலாம். காசினிகீரை பொடி நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் காசினி கீரை பொடியை காலை நேரத்தில் குடித்து வந்தால், நீரிழிவு கட்டுப்படும்.. அல்லது இந்த பொடியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால், நீரிழிவை கட்டுப்படுத்தலாம். காயங்களை ஆற்றக்கூடிய சக்தி இந்த காசினிக்கு உண்டு. குறிப்பாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் வந்தால், இந்த கீரையை அரைத்து புண்களின் மீது பற்று போட்டு கட்டினால், சீக்கிரமாகவவே குணமாகிவிடும்.
உடலில் எந்த இடத்தில் வீக்கம் எற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் குணம் கொண்டது காசினி கீரை. எவ்வளவு மோசமான புண்கள் இருந்தாலும், அதை காசினி குணப்படுத்திவிடும். அல்லது இந்த கீரையின் சாறினை, புண்களின் மீது தடவினாலும், புண்கள் விரைவில் ஆறிவிடும்.
காசினி வேர்கள்: வெள்ளைப்படுதல், அதிக உதிரப்போக்கு போன்ற பிரச்சனைகளில் அவதிப்படும் பெண்கள், காசினிக் கீரையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம். அல்லது காசினி கீரையை உலர்த்தி பொடிசெய்து, அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும். அல்லது இந்த பொடியை காலையில், அரை ஸ்பூன் தேனில் குழைத்து 21 நாட்கள் வெள்ளைப்படுதல் குணமாகும். காசினி கீரையின் வேர்கூட மருந்தாகும்.. இந்த வேர் காய்ச்சலை குணமாக்குவதுடன்,
எப்படி பயன்படுத்துவது: மற்ற கீரைகளை போலவே, காசினிக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைக்கலாம்.. இதனால், ரத்தம் சுத்தி அடையும்.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.. பற்களில் உள்ள பிரச்சனையை சரிசெய்யக்கூடியது காசினி கீரை..

உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கீரையை பயன்படுத்தலாம். காரணம், உடலிலுள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி, ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.. அதுமட்டுமல்ல, இந்த கீரையில் சூப் செய்து குடித்தாலும், எடை குறையும். அல்லது காசினி கீரையை உலர்த்தி பொடி செய்து, தினமும் இரவு நேரத்தில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டாலும் உடல் பருமன் குறையும்.
காசினி கீரையில் சட்னி செய்வார்கள்.. காசினி கீரையை நன்றாக அலசி, அதை விழுதுபோல் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, அதில் இந்த விழுதை கொட்டி கொதிக்க விட வேண்டும்.
காசினி சட்னி: நன்றாக விழுது கொதித்ததும், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயத்தை நறுக்கி அதில் போட வேண்டும். சிறிது பூண்டையும் தட்டி அதில் போட வேண்டும். இவைகள் அனைத்துமே நன்றாக கொதித்து வந்ததும், சிறிது தேங்காயை அரைத்து கீரையில் கொட்டி இறக்கிவிட வேண்டும். மற்றொரு வாணலியில், எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து கீரையில் கொட்டினால், காசினி கீரை சட்னி ரெடி. இதை இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications