கட்லா மீனின் பெஸ்ட் இதுதான்.. கெண்டை மீனை விடுங்க.. நம்பர் 1 புரோட்டீன் தரும் கட்லா மீனை அள்ளுங்க
சென்னை: கெண்டை மீனை சேர்ந்த கட்லாவை பற்றி தெரியுமா? யார் யாரெல்லாம் இந்த கட்லா மீனை சாப்பிடலாம் தெரியுமா? என்னென்ன மருத்துவ குணங்கள் கட்லாவில் உள்ளன? என்பதை பார்ப்போம்.
சில நாட்களுக்கு முன்பு, கெண்டை மீன் பற்றி குறிப்பிட்டிருந்தோம்.. மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்போதெல்லாம், அசைவப்பிரியர்களுக்கு கை கொடுத்து உதவுவது இந்த ஜிலேபி கெண்டை மீன்தான். காரணம், ஆறு, குளம் ஏரி போன்றவற்றில் இந்த மீன் நிறைய வளரும்.. "கடலின் கோழி" என்பார்கள் இந்த கெண்டையை.

சத்துக்கள்: இந்த மீனில், வைட்டமின் பி12, வைட்டமின் பி6, நியாசின், பாந்தேனிக் அமிலம், கெண்டை மீனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளன.. இதனால், சருமத்துக்கு மேன்மை தருகிறது.. உடல் சுருக்கங்களை தள்ளிப்போடுகிறது.. சரும பளபளப்பும் கிடைக்கிறது. நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், முடக்கு வாதம் வருவதற்கான வாய்ப்புகளை இந்த மீன் குறைக்கிறது..
மலச்சிக்கல் தீர்வதுடன், வயிறு கோளாறுகள், குடல் பிரச்சனைகள் நீங்கிவிடும்.. மூலநோய் உள்ளவர்கள், தைலாய்டு பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட்டால், பாதிப்புகள் குறையுமாம்.
கொழுப்பு குறைவு: ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள இந்த மீன், இதய நோயாளிகளுக்கு சிறந்த மீனாக திகழ்கிறது. காரணம் இந்த கெண்டையிலுள்ள கொழுப்பு அமிலங்கள், இதயத்துக்கு நன்மை தரக்கூடியதாம். இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் குறைவதாக சொல்கிறார்கள்.
அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கெண்டை மீனை, கர்ப்பிணிகள் மட்டும் டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று சாப்பிடலாம். இந்த கெண்டை மீனில் உள்ள ஒருவகைதான் கட்லா. பெரிய இந்திய கெண்டை மீன் என்பார்கள் இந்த கட்லாவை.
உருவ அமைப்பு: பெரிய தலை, உருளை உடம்பில் காணப்படும்.. தலைகீழான வாய், அதாவது நீண்ட தாடையுடன் இருக்கும்.. உடலின் பின்பகுதியும் பக்கவாட்டிலும் சாம்பல் நிறமாகவும், கீழ்பகுதி வெள்ளை கலராகவும், இருக்கும்.
இந்த மீன்கள் நன்னீரில் 5 அடி நீளத்துக்கு வளரக்கூடியவை.. கிட்டத்தட்ட 45 கிலோ எடைக்கு வளரும்.. இதன் குஞ்சுகளை அணை, ஏரிகளில் வீட்டு உணவுக்காக நிறைய பேர் வளர்ப்பார்கள். இந்தவகை கட்லா மீன்கள், மட்கிய பொருட்களைதான் சாப்பிடுமாம்.. புழு, பூச்சிகள், சிறு தாவரங்கள், இப்படியான உணவுகளை உண்ணும். ஆனால், ஆரோக்கியமான கட்லா தேவையானால், நடுக்கடலில்தான் கிடைக்குமாம். அதிக எண்ணெய் நிறைந்த மீன்களில் ஒன்றாக கட்லா உள்ளது..

பொட்டாசியம்: இந்த கட்லாவில், ஒமேகா 3 மட்டுமல்லாமல், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் சேர்ந்தே காணப்படுகிறது. அத்துடன் துத்தநாகம், பொட்டாசியம், அயோடின், வைட்டமின்கள், செலினியம் குறைவான கொலஸ்ட்ரால் உள்ளதால், தாராளமாக சாப்பிடலாம். கண்களுக்கு மிகவும் நல்லது இந்த கட்லா.. வைட்டமின் A அதிகமுள்ளதால், கண் பிரச்சனைகளை சரிசெய்கிறது..
நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.. குடல் நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.. கலோரிகளில் குறைவாக உள்ளதுடன், உயர்தர புரதம் நிறைந்துள்ள இந்த கட்லாவை வாரம் ஒருமுறையாவது சாப்பிடுவது நல்லது. அதாவது, 100 கிராம் கட்லா மீனில், 16 முதல் 22 கிராம் புரோட்டீன் இருக்கிறது. அதனால்தான், இந்தியாவின் மிகவும் புரதம் நிறைந்த மீன்களில் கட்லாவும் ஒன்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications