கீழாநெல்லி கீரை சத்துக்கள்.. கல்லீரல், சிறுநீரகம் ஆரோக்கியத்துக்கு உதவும் கீழாநெல்லி மூலிகை அற்புதம்
சென்னை: பற்கள் முதல் கல்லீரல் வரை, உடல் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்வதில் மிகப்பெரிய பங்கு இந்த கீழாநெல்லிக்கு உண்டு. பேருதவி புரிகிறது அதேசமயம், பெண்களுக்கும் பலவழிகளில் இந்த கீழாநெல்லி உதவுகிறது?
கீழாநெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் C, இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் அடங்கியிருக்கின்றன. கீழாநெல்லி இலை மாத்திரை என்றே கடைகளிலும் விற்கப்படுகிறது..

கீழாநெல்லி செடியில் காணப்படும் சின்ன சின்ன இலைகளுக்கு கீழே, குட்டி குட்டி காய்கள் குவிந்திருக்கும். அதனால்தான், இதற்கு கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்றும் பெயர் வந்தது. இதுவே பின்னாளில் மருவி கீழாநெல்லி என்றாகிவிட்டது.
கல்லீரல் நோய்: கல்லீரல் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்த மருந்து இந்த கீழாநெல்லி மூலிகையாகும்.. எவ்வளவு மோசமான மஞ்சள் காமாலை நோய் வந்தாலும், இந்த கீரையைதான், விழுதாக அரைத்து பசுமோருடன் கலந்து தருவார்கள். வெறும் வயிற்றில் இதை குடித்து வரும்போது, மஞ்சள் காமாலை குணமாகும்.. அல்லது இந்த பொடியை வெறும் தண்ணீரில் கொதிக்க வைத்து, சீரகத்தூள், தேன் கலந்து குடித்தாலும் மஞ்சள் காமாலைக்கு நிவாரணம் கிடைக்கும்.
அல்லது இந்த செடியை சுத்தம் செய்து, காய வைத்து தூள் செய்து, மோரில் கலக்கி சாப்பிட்டாலும் காமாலை குணமாகும். அல்லது கீழாநெல்லி இலைகளுடன் சீரகம், ஏலக்காய், திராட்சையை, நீரில் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தாலும், குணமாகும்.
மஞ்சள் காமாலை: காமாலை மட்டுமல்ல, ஹெப்படைட்டிஸ்-B, ஹெப்படைட்டிஸ்-C போன்ற நோய்த்தொற்றுகளையும் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லி மூலிகைக்கு உண்டு. சர்க்கரை நோய் இருந்தாலும் இந்த கசப்பு மூலிகையால் குணமாகும்..
அதைவிட முக்கியமாக, கல்லீரலில் புற்றுநோய் வராமலும் இந்த கீழாநெல்லி பாதுகாக்கிறது. மதுபோதைக்கு அடிமையாகி உள்ளவர்களை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர உதவுவதும் இந்த கீழாநெல்லிதான். உஷ்ணம், வாய்ப்புண், வயிற்றுப்புண்கள் இருந்தாலும் ஆறிவிடும்.. சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், கீழாநெல்லியில் 3 பங்கு தண்ணீர் சேர்த்து, அதை 1 பங்கு தண்ணீரா சுண்ட காய்ச்சி குடித்து வரும்போது, அந்த கற்கள் உடைந்து வெளியேறிவிடும்.
நீரிழிவு நோய்: தினமும் 3 வேளை சாப்பிட்ட பிறகு, கீழாநெல்லி தூள் அரைடீஸ்பூன் அளவு சாப்பிட்டு வரும்போது நீரிழிவு கட்டுக்குள் வரும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தாலும்கூட, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெறாமல், கீழாநெல்லியை உட்கொள்ளக்கூடாது..
அதேபோல, பெண்களுக்கு அதிக ரத்த போக்கு இருந்தாலோ அல்லது ரத்தசோகை பிரச்சனை இருந்தாலும், இந்த கீழாநெல்லியே மருந்தாகின்றன.. இந்த பொடியை 3 முதல் 6 கிராம் வரை தேனில் கலந்து சாப்பிடும்போது, வயிற்று வலி குறைவதுடன், வெள்ளைப்பாடு தொந்தரவும் நீங்கும். அல்லது கைப்பிடி கீழாநெல்லி இலையை நசுக்கி தண்ணீரில் சேர்த்து சுண்ட காய்ச்சி, தினமும் 2 வேளை குடிக்கும்போது, வெள்ளைப்படுதல் மட்டுமல்ல, மலட்டுத் தன்மையையும் நீங்குகிறது.
தலைமுடி, சருமம்: தலைமுடி அதிகமாக கொட்டினால், இந்த குளிர்ச்சியான கீழாநெல்லி இலையை அரைத்து முடியில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து குளிக்கலாம்.. கீழாநெல்லி தைலம் என்றே கடைகளில் விற்கிறது.. கீழாநெல்லி இலைகளுடன் கடலை மாவு சேர்த்து அரைத்து, உடலில் தேய்த்து, ஊறவைத்து குளித்து வரும்போது, சருமத்துக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.












Click it and Unblock the Notifications