சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே தலைக்குப்புற கவிழ்ந்த கார்! ஓட்டுநர் சொன்ன காரணம் என்ன?
சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்தின் கீழ் வேகமாக சென்ற கார் சாலை தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ளது பீட்டர்ஸ் சாலை. இங்கு மேம்பாலத்தின் மீதும் அதன் கீழேயும் ஏராளமான வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை தினத்தில் மேம்பாலத்தின் கீழ் யூ-டர்ன் எடுக்க கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலைத்தடுமாறி, சாலை தடுப்பில் மோதியதில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வேகமாக சென்று காரில் இருந்தவரை பத்திரமாக காப்பாற்றினர். இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் அந்த வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். அப்போது என்ன நடந்தது என கார் ஓட்டி வந்தவரிடம் விசாரித்த போது பீட்டர்ஸ் சாலையின் மேம்பாலத்தின் அருகே யூ-டர்ன் எடுக்கும் போது எதிரில் இருசக்கர வாகனம் வந்தது.
அப்போது தான் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக acclerator- ஐ அழுத்தியதன் காரணமாக வாகனம் நிலைக்குலைந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது என்றார்.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் கார் ஓட்டியவருக்கும், அருகில் இருந்தவர்கள் யாருக்கும் எந்தவித விபத்துக்களும், காயங்களும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த காரில் எல் போர்டு காணப்படுகிறது. கார் அதிவேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் கார் ஓட்டுநரோ எதிரே இரு சக்கர வாகனம் வந்ததாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications