கெளுத்தி மீனின் அற்புதமான பயன்கள்.. பெண்கள், குழந்தைகளுக்கு உயர்தர புரோட்டீன், கால்சியம் சத்துக்கள்
சென்னை: நரம்புகள் வலுப்படவும், இதயம் சீராக இயங்கவும் கெளுத்தி மீன்களை சாப்பிட சொல்வது ஏன் தெரியுமா? மீன்கள் என்றாலே மிகச்சிறந்த உணவாக கருதப்படும் நிலையில், கெளுத்தி மீனில் மட்டும் ஸ்பெஷல் சத்துக்கள் என்னென்ன உள்ளன? வளரும் குழந்தைகள் இந்த மீனை சாப்பிடலாமா? எந்தெந்த கெளுத்தி மீன்களை தேர்ந்தெடுப்பது உடலுக்கு நல்லது? இவைகளை சுருக்கமாக பார்ப்போம்.
மீன்கள் என்றாலே உடலுக்கு நன்மைகளை தரக்கூடியது என்று சொல்லிவிட முடியாது.. பாதரசம் குறைவாக உள்ள மீன்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.. அந்தவகையில், சங்கரா, வெளவால், நெத்திலி, விரால், ஆற்று நண்டு, ஏரி நண்டு, காணாங்கெளுத்தி, சிப்பி காலா, மத்தி, சிறிய இறால், ஊசி கனவா, கரி மீன், கிழங்கா போன்ற சிறிய வகை மீன்களின் உடலில் பாதரசத்தின் அளவு மிக குறைவாகவே இருக்கிறதாம்.

பாதரசம் குறைவு
இப்படி பாதரசம் குறைவாக இருந்தால், இதுபோன்ற சிறிய வகை மீன்களை குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் ஓரளவு சாப்பிடலாம். இதில் கெளுத்தி மீன்களும் அடக்கம். பெரிய பெரிய மீசையுடன் கடலில் வலம் வரும் இந்த கெளுத்தி மீன்களுக்கு, இரவு நேரத்தில் கண் தெரியாதாம்.
வைட்டமின் A, C, D, B12, சாச்சுரேட்டடு கொழுப்பு, பாலிஅன்சாச்சுரேட்டடு கொழுப்பு, மோனோசாச்சுரேட்டடு கொழுப்பு, சோடியம், பொட்டாசியம், கால்சியம், கார்போஹைட்ரேட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் கெளுத்தி மீனில் உள்ளன.. சோடியம் மிகவும் குறைவாக உள்ள மீன்களில் இந்த கெளுத்தி மீனும் ஒன்றாகும் .
2 முக்கியமான சத்துக்கள்
துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம் மிதமாக உள்ளதால், உடலுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.. மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களும் எளிதில் நெருங்குவதில்லை.. இதற்கு காரணம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஒமேகா 6 கொழுப்பு அமிலம் என்ற இரண்டு முக்கியமான சத்துக்களும் இந்த கெளுத்தி மீனில் உள்ளன.
கெளுத்தி மீனை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வருவதால், புரதச்சத்து, தசை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல் திறன் சிறப்புறும்.. இதிலுள்ள புரோட்டீன், கார்போஹைட்ரேட் உடலுக்கு ஆற்றலை தருகின்றன.. வளரும் பிள்ளைகளுக்கு நரம்புகள், எலும்புகள் வலுவாவதற்கு B12 வைட்டமின் அவசியமாகும். அத்தகைய இந்த B12 சத்துக்கள் கெளுத்தி மீனில் நிறையவே உள்ளன. இதனால். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.
பண்ணை மீன்கள்
6.1 கிராம் கெளுத்தி மீனில், 122 கலோரி மட்டுமே இருப்பதால், உடல் எடை அதிகரிப்பதில்லை.. புரோடீன் அதிகமாகவும், கார்போஹைட்ரேட்கள் குறைவாகவும் உள்ளதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்போரும், கெளுத்தி மீனை சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் பிரச்சனையும் தீரும்.
ஆனால், பண்ணைகளில் வளர்க்கப்படும் கெளுத்தி மீன்களில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவைகளை சாப்பிடும்போது, கேன்சர் போன்ற அபாயமும் ஏற்படுவதாக ஆய்வுகளில் நிரூபணமாகியிருக்கிறது.. எனவே, பண்ணை மீன்களை வாங்கும்போது, ரசாயனம் எதுவும் இல்லாமல் இயற்கையான முறையில் வளர்க்கப்படும் மீன்களாக பார்த்து வாங்குவது ஆரோக்கியமானதாகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications