"கிழங்கான் மீன்" செய்றீங்களா.. கிழங்கான் செய்யும் நன்மைகள்.. மூலநோய் இருப்பவர்கள் இதை நோட் பண்ணுங்க
சென்னை: மீன்களை வாரத்தில் 2 நாட்களாவது சாப்பிட சொல்கிறார்கள்.. ஒமேகா 3 கொழுப்புகள் உள்ள மீன் என்றால் உடலுக்கு இன்னும் நல்லது.. இதில் கிழங்கான் மீனும் ஒன்று.
பொதுவாகவே, மீன்களை சாப்பிடுவதால், மாரடைப்பு போன்ற இதய நோய் பிரச்சனைகள் வருவதில்லை. மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகுவதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மூளைக்கு சிறந்த உணவாக இந்த மீன் விளங்குகிறது.. ரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் தவிர்க்கிறது.. அதில் முக்கியமானது கிழங்கான் மீன்கள்..

முதல்வர் ஸ்டாலின்: தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய நிறைய பேட்டிகளில், தனக்கு பிடித்த உணவாக மீன்குழம்பை அடிக்கடி குறிப்பிடுவார்.. குறிப்பாக, அவர் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் மீன் குழம்பு சுவைக்க சொல்லி பரிமாறுவாராம்.
அதுமட்டுமல்ல, சமீபத்தில், துர்கா ஸ்டாலினின், கிச்சன் டூர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.. அதில், துர்கா ஸ்டைல் மீன் குழம்பு செய்திருந்தார்.. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் மீன் எது என்று கேட்டதற்கு, வறுவலில் வஞ்சரம் எல்லாருக்கும் பிடிக்கும்.. குழம்பு என்றால் கிழங்கான் மீன்தான் விரும்பி சாப்பிடுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
கருப்புக்கிழங்கான்: ருசியும் + மருத்துவமும் சேர்ந்தே நிரம்பி உள்ளதுதான் இந்த கிழங்கான் மீன்.. கருப்புக்கிழங்கான், வெள்ளைக்கிழங்கான் என்று 2 வகைகள் உள்ளன. பார்ப்பதற்கு, உருடையாக, கருப்பாக காணப்படும் கருப்புக்கிழங்கானை, நாய்க்கிழங்கான் என்றும் சொல்வார்கள்..
வெள்ளைக்கிழங்கான், ஒரு சாண் நீளத்தில் காணப்படும்.. இவைகளில் வறுப்பதற்கும்சரி, குழம்புக்கும் சரி, வெள்ளைக்கிழங்கான் மீன்தான் சிறந்தது.. அதனால்தான், இந்த கிழங்கான் விலை மட்டும் எப்போதுமே கொஞ்சம் அதிகமாக இருக்கும். கிழங்கானுக்கு லேடி மீன் என்ற ஸ்பெஷல் பெயரும் உண்டு.
கிழங்கான் மீன்: புரோட்டீன் அதிகமுள்ள மீன்களில் இந்த கிழங்கானும் ஒன்று.. அதனால் வளரும் குழந்தைகளுக்கு இந்த மீனை அடிக்கடி தருவார்கள்.. நரம்பு மண்டலத்தை இந்த கிழங்கான் மீன் பலப்படுத்துகிறது.. மனச்சோர்வை எளிதாக்குகிறது... கிழங்கான் மீன் சாப்பிடுவது சருமத்துக்கு மிகவும் நல்லது.. தோலில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்கிறது.. அதனால்தான், வெயில் காலங்களில் இந்த கிழங்கான் மீனை நிறைய சாப்பிடுவார்கள். இதனால், அரிப்பு, எரிச்சல் போன்ற தொந்தரங்கள் தடுக்கப்படும்..
வாதநோய்களை தடுப்பதில் கிழங்கான் மீனுக்கு நிறைய பங்கு உள்ளது. புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கப்படுகிறது.. கிழங்கானிலுள்ள மீன் எண்ணெய்யானது, மூட்டுவலியைக் குறைத்து நிவாரணம் தரக்கூடியது. இந்த கிழங்கான் குளிர்ச்சி தன்மையை உடையது.. எனவே, மூலப்பிரச்சனை உள்ளவர்கள் கிழங்கான் மீனை வாரம் 2 முறையாவது சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.
ஆனால், மெர்க்குரி அளவு அதிகமாக உள்ள மீன்களையும், எண்ணெய் அதிகமுள்ள மீன்களையும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், மருத்துவர்களின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.. காரணம் கானங்கெழுத்தி மீனை போலவே, இந்த கிழங்கான் மீனிலும் எண்ணெய் அதிகம் என்கிறார்கள்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications