Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடுவா மீனோட சிறப்பு.. கடல் பாஸ் மீனின் நன்மை.. கொடுவாவை இப்படி செய்யுங்க.. சூப்பர் ஆரோக்கிய மருந்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன்கள் என்றாலே நலன் தரக்கூடியது என்றாலும், ஒவ்வொரு மீனிலும், ஒவ்வொரு நன்மைகள் உண்டு.. அதிலும் அரிதாக கிடைக்ககூடிய மீன்கள் என்றால், அதை கட்டாயம் வாங்கி உணவில் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள். அப்படிப்பட்ட மீன்தான் இந்த கொடுவா.

நிறைய புரோட்டீன் உள்ள மீன்களில், இந்த கொடுவா மிக முக்கியமானது.. 1.5 மீ. நீளம் வரை வளரக்கூடிய இந்த கொடுவா நீளமாக காணப்படும்.. இதற்கு பெரிய பெரிய செதில்கள் இருக்கும்.. மொத்தமே 8 முதல் 10 வரையிலான செதில்கள்தான் இருக்கும்

Health Benefits of Koduva Fish and Do you know See Bass is the Amazing Health food

கொடுவா மீன்: வால் பகுதியை பார்த்தால், உருண்டையாக இருக்கும்.. உடல் முழுவதும் சில்வர் கலரில் ஜொலிக்கும். பொதுவாக இந்த கொடுவா மீன்கள், இறால், நத்தை போன்ற உயிரினங்களை சாப்பிடக்கூடியது.. அதாவது மற்ற மீன்களையே கொன்று சாப்பிட்டுவிடுவதால், பெரும்பாலும் இதை யாரும் பண்ணைகளில் வளர்ப்பதில்லை.

உவர்நீர் மற்றும் கழிமுக நீர்களில் வாழக்கூடியது.. அதனால்தான் தாராளமாக இந்த மீன்கள் கிடைப்பதில்லை.. இந்த கொடுவா மீனில் நிறைய வகைகள் உண்டு. அசல் கொடுவா, கொருக்கை, கல்கொடுவா, கூரை கத்தலை, இன்னும் ஏராளமாக உண்டு..

அசல் கொடுவா: இதில் அசல் கொடுவா கிடைப்பதே அரிது என்கிறார்கள்.. நம்ம நாட்டைவிட, வெளிநாடுகளில் அசல் கொடுவா-வுக்கு படுகிராக்கி உள்ளது.. அதிலும் இந்த கொடுவாவின் செவுள்கள், மருத்துவ பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவார்களாம். அதனால்தான், கொடுவா மீன் வெளிநாடுகளில் அதிக அளவில் கிடைக்கிறது.

பிற மீன்களில் உள்ளதுபோலவே, ஒமேகா -3 கொழுப்பு, ஒமேகா -6 கொழுப்பு போன்ற அமிலங்கள், வைட்டமின்கள் A, B -12 போன்ற சத்துக்கள் இந்த மீனிலும் உள்ளது. இதன்காரணமாகவே, நம்முடைய உணவுகளில் கொடுவா மீன் இடம்பெற்று வருகிறது.

மூளை ஆரோக்கியம்: கொடுவா மீனில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு.. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதில் கொடுவா பேருதவி புரிகிறது.. இதயம் மூளை ஆரோக்கியத்துக்கு கொடுவா மீன் உதவுகிறது.. கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளதால், பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன. புரோட்டீன் அதிகமுள்ள இந்த கொடுவா மீனை, தாரளமாக வாரம் 2 முறையாவது சாப்பிடலாம்..

கொடுவா மீனில், மீன் எண்ணெய் வளமாக இருப்பதால், இதை உணவாக எடுத்து கொள்ளும்போது, சருமம் பாதுகாக்கப்படுகிறது.. மென்மையை தருகிறது. இந்த மீனை சமைத்து சாப்பிடும்போது, முள்ளுடன் சேர்த்தே சாப்பிட சொல்கிறார்கள். அந்த முள்ளிலும்கூட, நிறைய சத்துக்கள் உள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+