குப்பைக் கீரை.. எளிதாக கிடைக்கும் குப்பைக்கீரையில் ஏராள நன்மை.. மூட்டு வலி, உடல் உஷ்ணம் போயே போச்சு
சென்னை: குப்பைக் கீரைகள் என்றால் என்ன? ஊட்டச்சத்து நிறைந்த இந்த கீரையால் நமக்கு கிடைக்கும் மருத்துவ பலன்கள் என்னென்ன? எந்தெந்த நோய்க்கு இந்த கீரையை எப்படியெல்லாம் உணவில் பயன்படுத்தலாம் தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.
குப்பைகள் அதிகமாக இருக்கும் இடங்களில் செழித்து வளர்வதால், இதற்கு குப்பைக்கீரை என்று பெயர் வந்ததாம்.. அதேபோல, குப்பை போன்ற உடம்பை தேற்றுவதால்தான், குப்பைகீரை என்றும் பெயர் வந்ததாக சொல்கிறார்கள். இதற்கு குப்பைகீரைக்கு முள்ளிக்கீரை என்ற பெயரும் உண்டு.

குப்பை கீரைகள்: இந்த குப்பைகீரையானது தண்டுக்கீரை வகையைச் சார்ந்தது.. பார்ப்பதற்கு இந்த கீரை சாம்பல் நிறத்தில் இருக்கும்.. இதிலுள்ள பூக்கள் வெளிரிய சிவப்பு நிறத்தில் இருக்கும்... பெரும்பாலும், இந்த குப்பை கீரையில் முற்றிய இலைகளைவிட, தளிர்களைதான் சமையலுக்கு பயன்படுத்துவார்கள்.. நார்சத்து மிகுதியாக உள்ள இந்த குப்பைக்கீரையில், வைட்டமின் C, A, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது.
நோயெதிர்ப்பு செயல்பாடுகளை அதிகப்படுத்தி, தோல் ஆரோக்கியத்தை காக்க இந்த கீரை பயன்படுகிறது.. இந்த குப்பைக்கீரையை சமையலில் சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பார்வை பிரச்சனை ஏற்படுவதில்லை.. நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.. நரம்புகள் பலவீனமாக உள்ளவர்கள், இந்த கீரையை சாப்பிடும்போது நரம்பு மண்டலம் வலுப்பெறும்.. நரம்பு தளர்ச்சியும் நீங்கும்.
ரத்தசோகை: அனீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த கீரையை கடைந்து சாப்பிடும்போது, ரத்தவிருத்தி அதிகமாகும். வளரும் பிள்ளைகளுக்கு இந்த கீரையை தரவதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் பலமும், ஆரோக்கியமும் பெருகும்..
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் கீரை என்பதால், வயது முதிர்ச்சியை தள்ளிப்போடுகிறது. நார்ச்சத்து நிறைந்த குப்பைக்கீரை மலச்சிக்கலை தீர்த்து, செரிமானத்திற்கு உதவுகிறது. உடலிலுள்ள தேவையில்லாத கெட்ட கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்கவும் பேருதவி புரிகிறது.
வாய்ப்புண்கள்: உடல் உஷ்ணம் உள்ளவர்கள், இந்த கீரையை வாரம் 2 முறையாவது சமைத்து சாப்பிடலாம்.. சருமத்திலுள்ள புண்கள், வயிற்றுப் புண்கள், வாய்ப்புண்கள் போன்றவற்றை அகற்றக்கூடியது இந்த குளுகுளு குப்பைக்கீரை..
உடல் சூடு தணிந்து சிறுநீர் நன்றாக பிரியும். உடலில் கட்டிகள், தழும்பு, மரு, முகப்பரு, கட்டிகள் இருந்தாலும், இந்த கீரையை வெறுமனே அரைத்து பூசும்போது, கட்டிகள் உடைந்துவிடும்.. உடல் வீக்கம் இருந்தாலும் இந்த கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் வீக்கம் குறைந்துவிடுமாம்... பாம்பு, தேள் கடிக்குகூட இந்த குப்பைக்கீரையே விஷ முறிவு மருந்தாக திகழ்கிறது.
கஷாயம்: குப்பைக் கீரையுடன், துவரம் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால், குடல் புண்கள் குணமாகும்... அதேபோல இந்த கீரையுடன் மிளகு, சீரகம் இரண்டையும் சேர்த்து, கஷாயமாக்கிக் குடித்தால், நன்றாக பசி எடுக்கும். இந்த கீரையுடன் சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்... பூண்டு, சீரகம், மஞ்சள் சேர்த்து, கஷாயமாக்கி குடித்தால் வாயுக் கோளாறுகள் குணமாகும்.
குப்பைக்கீரை, சீரகத்துடன், முடக்கறுத்தான் கீரையும் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் மூட்டுவலி, முழங்கால் வலி குணமாகும்... குப்பைக்கீரையுடன் மஞ்சள் தூள், அரை டீ ஸ்பூன் ஓமம் சேர்த்து நன்றாக காய்த்து அந்த சாற்றை பருகினால் நெஞ்சு எரிச்சல் குணமாகும். மற்ற கீரையை போலவே இதை பொரியல் செய்து சாப்பிடலாம். பருப்பு சேர்த்து கூட்டு போலவும் செய்யலாம்.. சத்தான அடை செய்யலாம்.. சாலட், சூப்களிலும் இந்த இந்த குப்பைக்கீரை இலையை பயன்படுத்தி பலன்பெறலாம்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications