கருவாடுன்னா அது "கீழக்கரை" மாசி கருவாடுதான்.. எகிறும் வியப்புகள்.. "மாசி" சம்பலாகும் சூறைமீன்.. வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருவாடு என்றாலே சத்தான உணவுதான்.. இந்த கருவாட்டில், "மாசி கருவாடு" பற்றி தெரியுமா? அதை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னென் தெரியுமா?

வாத, பித்தத்தை நீக்கி, இயல்பு நிலைக்கு கொண்டுவரக்கூடியது இந்த கருவாடு.. மூளை, இருதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், எலும்பு, நரம்பு, போன்ற உள்ளுறுப்புகளை பலப்படுத்தக்கூடியது இந்த கருவாடு..

Health Benefits of Maasi Dry Fish and Do you know Maasi Garuvadu is very good for youngsters

ஆண் - பெண்: ஆண் - பெண்களுக்கான அருமருந்துதான் இந்த மாசிக்கருவாடு.. அதிலும் திருமணமான தம்பதிகளுக்கு இந்த கருவாடை தினமும் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு மருத்துவம் குணம் வாய்ந்தது.

திருமணமான ஆண்களுக்கு இதை அதிக அளவு தருவதற்கு காரணம், ஆண்குறி, விதைப்பை, விந்துப்பை, நீர்ப்பை, இவைகளை சரி செய்து உணர்ச்சி பெருக்கத்தை உண்டாக்கி, விந்து திரவத்தை உண்டாக்கி, விந்துவில் உயிரணு உண்டாக்கி, அந்த விந்துவில் உண்டாகும் கரு முழு ஆரோக்கியத்தோடும், முழுஆயுளோடும் இருப்பதற்கு காரணமான வாதம் பித்தம், ரத்த ஓட்டம் போன்றவகைளை சீர் செய்து, ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்காகவே இந்த மாசிக்கருவாடு தினமும் தருவார்கள்.

கர்ப்பப்பை: அதேபோல, திருமணமான பெண்களுக்கு தினம் மாசிக்கருவாடு கொடுப்பது நமது வழக்கில் இன்றும் உள்ளது. காரணம், பெண்களின் கர்ப்பப்பையை வலுவாக்கக்கூடியது.. இதை சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு கரு நின்று, கருவில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியம் ஏற்படும்.. குழந்தை பிறக்கும்போதே ஆரோக்கியமாகவும், ஆயுள் உள்ள குழந்தையாகவும் பிறக்கும்..

பொதுவாக, இந்த கருவாடை தயாரிப்பதே வித்தியாசமாக இருக்கும்.. மற்ற கருவாடுகளை போல அல்லாமல், உப்பு சேர்க்காமல் காய வைப்பார்கள்.. பார்ப்பற்கு புளியங்கொட்டை போலவே இருக்கும். மற்ற கருவாட்டில் இருப்பதை போல, இந்த கருவாடில் முள் இருக்காது. எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெடாது.. அத்துடன் கருவாடு வாசமும் இதிலிருந்து வராது..

தயாரிப்பு: சூரை மீனை கருவாடாக்கினால், அதுதான் மாசி என்றழைக்கப்படும்.. முதலில், இந்த மீனை துண்டுகளாக்கி நன்றாக அவித்து வெள்ளைத்துணியில் முறுக்கி நிழலில் காய வைப்பார்கள்..

10 நாட்களுக்கு மேல் காய வேண்டுமாம். விறகுகட்டை போல இறுக்கமாக ஆகும்வரை காய வைப்பார்களாம். இந்த கருவாடு 2 வருடமானாலும் கெடாது. தமிழ்நாட்டிலேயே கீழக்கரை பகுதி மக்கள்தான், இந்த கருவாட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.. கிட்டத்தட்ட 25 கிலோ வரையில் கீழக்கரையில் தினமும் இந்த கருவாடு விற்கப்படுகிறதாம்.

இப்போது சேலம், திருச்சி பகுதிகளிலும், மாசிக்கருவாடு விற்கப்படுகிறது.. வெளிநாடுகளுக்கு தலா 50 கிலோ வரையில் இந்த கருவாடு அனுப்பியும் வைக்கப்படுகிறது. இந்த மாசி கருவாட்டில், பொரியல் செய்வது வழக்கம் என்றாலும், சிலர் இதில் ஊறுகாய் போடுவார்கள்.. பழைய சாதத்துக்கு, இந்த மாசி கருவாட்டை வைத்து சாப்பிடுவார்கள்.. மாசி பவுடர், மாசி சம்பல் என்று பாக்கெட்டுகளில் வெளிநாடுக்கு ஏற்றுமதியாகும்.

பவுடர்: இந்த பவுடரை, கேரட், முட்டைக்கோஸ், பாகற்காய், கத்திரிக்காய் போன்ற கூட்டுகளிலும் சேர்த்து சாப்பிடலாம்.. ரராமநாதபுரம் கீழக்கரை என்றாலே மாசிக்கருவாடுதான் ஃபேமஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+