மணத்தக்காளி கீரை தரும் மகத்துவம்.. அல்சர், மண்ணீரல் வீக்கத்தை குணமாக்கும் மணத்தக்காளி இலைகள்
சென்னை: குடல்புண்கள், வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களை ஆற்றும் மணத்தக்காளி கீரையின் வேறு பல நன்மைகள் என்னென்ன தெரியுமா? அதை எப்படி பயன்படுத்துவது? மணத்தக்காளி பழங்களின் வேறு பல நன்மைகளை என்னென்ன தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.
பசியை தூண்டிவிடக்கூடிய மணத்தக்காளி கீரையில் வைட்டமின் D, E நிறைந்திருக்கின்றன. மேலும் இந்த கீரையில் ரிபோபிளோவின், வைட்டமின் C, பீட்டா கரோட்டின், கால்சியம், பொட்டாசியம் இரும்புத் தாதுக்களும் உள்ளன.

மணத்தக்காளி கீரை: மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, இதய செயல்பாடு அதிகரிக்கும். தூக்கம் அதிகரிக்கும்.. கண்கோளாறுகள் நீங்கும். காச நோயாளிகளுக்கு நிவாரணத்தை தருகிறது.. ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு ஹீமோகுளோபின் பிரச்சனையை தீர்க்கிறது.
சிறந்த மலமிளக்கியாகவும் இந்த கீரை செயல்படுகிறது. இந்த கீரைகளில் நைட்ரிக் ஆக்சைடு என்ற வேதிப்பொருள், வயிற்றிலுள்ள கட்டிகளை கரைக்க உதவுகிறது. கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கங்களையும் குறைக்க உதவுகிறது. வாய்ப் புண், வயிற்றுப்புண், வயிற்றில் கட்டியுள்ளவர்கள் இந்த கீரையில் சூப்பை அடிக்கடி செய்து குடிக்கலாம்.
சிறுநீர் எரிச்சல்: சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு, உள்ளிட்ட உஷ்ண கோளாறுகளை மணத்தக்காளி கீரை தீர்க்கிறது. ஜீரண சக்தியை தூண்டிவிடும்... வாய் துர்நாற்றம் இருப்பவர்கள், இந்த கீரையை கசக்கி தண்ணீரில் கலந்து வாய்க்கொப்பளித்து வந்தாலே போதும். இது வாய்ப்புண்களை ஆற்றக்கூடியது.
காதுவலி இருப்பவர்களும், இந்த சாற்றினை காதில் விடலாம். தொண்டைப்புண்களையும் இந்த சாறு ஆற்றுகிறது. சளி, இருமல், காய்ச்சல் வந்தாலும், இந்த கீரையை கடைந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
மணத்தக்காளி பழம்: இந்த கீரையின் பழங்கள் கறுப்பு மற்றும் சிகப்பு நிறத்தில் இருக்கும். மணத்தக்காளி பழம், உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது. மலச்சிக்கல் இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம். கட்டுக்கடங்காத காய்ச்சல் இருந்தால், இந்த பழத்தையும், கீரையையும் ஒன்றாக கஷாயம்போல வைத்து குடிக்கலாம். மணத்தக்காளியை வற்றலாக காயவைத்து, நெய்யில் வதக்கி பயன்படுத்தினால், நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதுடன், வாந்தி, குமட்டல், தலைசுற்றல் போன்ற கோளாறுகளை நீக்கும்.
மலச்சிக்கலை நீக்கும் மருந்து தயாரிப்புகளில் மணத்தக்காளியின் வேர்கள் சேர்க்கப்படுகின்றன. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த வேண்டுமானால், இந்த வேர்கள், இலைகளை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வரலாம்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications