மரவள்ளிக்கிழங்கு.. கப்பக்கிழங்கை நேசிக்கும் மலையாளிகள்.. மரவள்ளிக் கிழங்கில் ஒளிந்திருக்கம் நன்மைகள்
சென்னை: "கப்ப கிழங்கு" என்று கேரளாவில் உயிருக்கு உயிராக நேசிக்கப்படும், நம்ம ஊர் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவத்தை பலரும் அறிவதில்லை.
மரவள்ளிக்கிழங்கு ஒரு வேர் காய்கறியாகும்.. மரவள்ளிக்கிழங்கில் நிறைய கலோரிகள், நிறைய கார்போஹைட்ரேட்டுகள், நிறைய வைட்டமின்கள், நிறைய தாதுக்கள் உள்ளன.

கண்ணுக்கு குளிர்ச்சி: மரவள்ளிக்கிழங்கில் வைட்டமின் A உள்ளதால், கண்ணுக்கு மிகச்சிறந்த பலனையும், நலனையும் தரக்கூடியது.. கண்களில் ஏற்படும் வறட்சியை போக்குவதுடன, பார்வை குறைபாடு பிரச்சனையையும் போக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது. செரிமான மண்டலத்தை சீர்செய்கிறது.. இதனால் உடலிலுள்ள கழிவுகள் மட்டுமல்ல, குடலிலுள்ள கழிவுகளும் நீங்குகிறது..
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த கிழங்கை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.. காரணம், இந்த கிழங்கிலுள்ள நார்ச்சத்து, உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, எடையை குறைக்க உதவுகிறது..
மரவள்ளிக்கிழங்கு: தலைவலி இருந்தால், இந்த கிழங்கை 2 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, ஜூஸாக அரைத்து குடித்தால், வலி நீங்கும். மரவள்ளிக்கிழங்கின் தோல் கூட உபயோகமாகக்கூடியது.. சருமத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும், இந்த தோல் அவைகளை நிவர்த்தி செய்துவிடும்.. தழும்புகளைகூட நீக்கிவிடும். இந்த கிழங்கு காயங்களை ஆற்றக்கூடியது..
அதாவது, இந்த தோலை சீவி எடுத்து, பசை போல செய்து கொண்டு, எந்த இடத்தில் பாதிப்பு, ரணம் அல்லது தழும்பு இருக்கிறதோ, அங்கு தடவினால் போதும். இந்த கிழங்கு இலையில் உள்ள பசையை பிழிந்து, வெளியில் எடுத்து காயங்கள் மேல் தடவுவதால் நிவாரணம் விரைவில் கிடைக்கும்.
ரத்த விருத்தி: நினைவுத்திறனை அதிகரிக்கக்கூடியது.. ரத்த விருத்திக்கும், சிவப்பணுக்களை அதிகரிக்கவும் இந்த கிழங்கு உதவுகிறது.. இந்த கிழங்கில் செய்யப்படும் ஜவ்வரிசி கஞ்சி, உடலுக்கு தெம்பை தரக்வடியது.. வயிற்றுப் புண்ணை ஆற்றக்கூடியது. உடல் சூட்டையும் குறைக்கக்கூடியது.. இந்த மரவள்ளி கிழங்குகளில் வைட்டமின் K அதிகம் உள்ளது.. கால்சியமும் நிறைய உள்ளதால், இதனால், எலும்புகளுக்கும் பற்களும் வலுவை தருகிறது.
மரவள்ளிக்கிழங்கை சர்க்கரை சத்து இருப்பதால், இதை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்பார்கள்.. அத்துடன் மலச்சிக்கலையும், வாயுத்தொல்லையையும் இந்த கிழங்கு ஏற்படுத்தும்.
கெட்டி அட்டைகள்: மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் என்ற மாவு, பருத்து தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.. இந்த ஸ்டார்ச்சை பயன்படுத்திதான், துணிகளுக்கு கஞ்சி போடுவார்கள்.. காகிதம் தயாரிகக்வும் கோந்து செய்யவும், கெட்டியான அட்டைகள் தயாரிக்கும் தொழிலிலும் மூலப்பொருளாக பயன்படுகிறது.
ஆனால், இந்த கிழங்கு பறித்தவுடன் அதாவது 2 நாட்களுக்குள்ளேயே வேக வைக்கப்பட வேண்டுமாம்.. இல்லாவிட்டால், கிழங்கு அழுகி கெட்டுவிடுமாம்.. நன்றாக வேகவைக்க வேண்டும்.. அப்படி வேகவைத்தால், ஏகப்பட்ட நன்மைகளை பெறலாம். மரவள்ளிக் கிழங்கை ஒரு மணி நேரம் தண்ணீரில் வேக வைத்து உண்பதால், வயிற்றில் படிந்த பாக்டீரியாக்கள் அழிந்து வயிறு சுத்தமாகிறது.
மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா செய்வார்கள்.. சிலர் பாயாசமும் செய்வார்கள். சிலர் கஞ்சி வைத்து குடிப்பார்கள்.. இந்த கிழங்கை சாம்பார், காரக்குழம்புகளில் பயன்படுத்தலாம். சிப்ஸ் போட்டு சாப்பிடுவார்கள்..
மரவள்ளிக்கிழங்கு: மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால், இஞ்சி அல்லது சுக்கு சாப்பிடக்கூடாது என்பார்கள்.. காரணம், இரண்டுமே மண்ணிலிருந்து வருவதால், விஷத்தன்மையாகிவிடும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, மரவள்ளிக்கிழங்கில் மிகக்குறைந்த அளவு புரதங்கள் மற்றும் கொழுப்புகளே உள்ளன. அதனால், இந்த கிழங்கை சாப்பிடும்போது, நிறைய காய்கறிகள் அல்லது புரதம் இருக்கும்படி மற்ற உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications