மட்டி வாழைப்பழம்.. குட்டி குட்டி "மட்டி"யில் இத்தனை நன்மையா? கன்னியாகுமரிக்கு அங்கீகாரம் வாழைப்பழம்
சென்னை: கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்தில் அப்படி என்ன சிறப்பு? புவிசார் குறியீடு தரும் அளவுக்கு அந்த வாழைப்பழத்தில் அப்படி என்ன இருக்கிறது? என்று பார்ப்போமா?
ஜடேரி நாமகட்டி, செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் சமீபத்தில் கிடைத்து உள்ளது.

ஸ்பெஷல் அங்கீகாரம்: இந்த குறியீடு கிடைத்துள்ளதால், இந்த 3 பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். இந்த பொருட்களின் விற்பனை விலையும் உயரும். இந்த பொருட்களுக்கென்றிருக்கும் தனி சட்டப்பாதுகாப்பு கிடைக்கும். விற்பனை செய்ய உலக நாடுகள் அங்கீகாரம் வழங்கும்.
அங்கீகாரம்: அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட இடங்களில் உற்பத்தி செய்யும் பகுதியை தவிர மற்ற பகுதியில் வேறு யாராவது தயாரித்து அந்த பொருளை விற்கும்போது, இந்த குறிப்பிட்ட பெயரை பயன்படுத்த முடியாது. அந்தவகையில், புவிசார் குறியீடு தரும் அளவுக்கு இந்த மட்டி வாழைப்பழத்தில் உள்ள சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
தமிழ்நாட்டில் விளையும் வாழை பழங்களில் பெரும்பாலானவை விளையும் மாவட்டம் கன்னியாகுமரி என்றே சொல்ல வேண்டும்.. குறிப்பாக, செவ்வாழை, நேந்திரம், பாளையங்கோட்டை, பேயன், சிங்கன், பூவன் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்ட வாழை தரங்கள்தான்... இதில், மட்டி என்பது வாழையின் ஒரு இனம்...
வாழைத்தார்கள்: வாழைத்தார்கள் நெருக்க நெருக்கமாக வளரக்கூடியவை.. ஒவ்வொரு வாழை சீப்புகளிலும், குறைந்தபட்சம் 150 பழங்கள் இருக்குமாம்.. ஒவ்வொரு தாரும் 15 கிலோவுக்கு மேல் இருக்குமாம்..
அதேபோல, ஒரே ஒரு வாழைப்பழம் மட்டும் 50 முதல் 60 கிராம் வரை எடையில் காணப்படும்.. இந்த மட்டி பழம் பார்ப்பதற்கு சிறிதாக இருக்கும்.. வாழைப்பழங்களிலேயே மிகவும் சிறியது இந்த பழம்தான். கிட்டத்தட்ட ரஸ்தாளி போல இருக்கும்.. முனைப்பகுதி மட்டும் சற்று நீளமாக இருக்கும்.. அதேபோல, மற்ற வாழையைவிட இனிப்பு சுவையும் இதில், அதிகமாக இருக்கும்.. மணமும் அபாரமாக இருக்கும். குமரியில்தான் இந்த மட்டி அதிகமாக விளைகிறது... இந்த வாழையை முதலை விரல் என்றும் சொல்வார்கள்.
நேரு விரும்பிய பழம்: ஒருமுறை, நம்முடைய ஜவஹர்லால் நேரு, பிரதமராக இருந்தபோது, திருவனந்தபுரத்துக்கு வருகை தந்திருந்தாராம்.. அப்போது அவருக்கு தரப்பட்ட விருந்தில், குமரி மாவட்ட மட்டிப்பழம் பரிமாறப்பட்டதாம்..
அதை சாப்பிட்ட நேரு, இப்படியொரு சுவையான வாழைப்பழத்தை சாப்பிட்டதே இல்லை என்று சொன்னாராம். இதற்கு பிறகு பலமுறை, குமரி மாவட்ட மட்டிப்பழம் திருவனந்தபுரத்தில் இருந்து, நேருக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

சரி, இந்த மட்டி வாழைப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? வழக்கமாக வாழைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கும். அந்தவகையில், மட்டியில் உள்ள பொட்டாசியம், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.. நோய் எதிர்ப்பு சக்தியை இந்த ரக வாழை அதிகரிக்க செய்கிறது.
ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த மட்டி சிறந்த தீர்வு.. ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க துணை புரிகிறது.. ஜீரண சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.. இரைப்பை மற்றும் குடல் பிரச்சினைகள் உள்ளவர்கள் தாராளமாக மட்டி வாழையை சாப்பிடலாம். இதனால், சருமம் பளபளக்கும். கண் பார்வை அதிகரிக்கும். அதனால்தான் குழந்தைகளுக்கு இந்த பழத்தை மசித்து ஊட்டுவார்கள்.
எத்தனையோ வருடங்களுக்கு முன்பே மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு அளித்திருக்க வேண்டும் என்றாலும், தற்போது, மட்டி வாழைக்கு புவிசார் குறியீடு அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தென்மாவட்டங்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications