மூக்கிரட்டை கீரை.. மூக்கு மேல விரல் வைக்க சொல்லுதே! மூக்கிரட்டை இலையின் சத்துக்கள்.. மூலமும் விலகும்
சென்னை: சமையலில் அவ்வளவாக பயன்படுத்தப்படாத மூக்கிரட்டை கீரைகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? மூக்கிரட்டை இலைகளை உணவில் சேர்த்து கொள்வதால், தீரக்கூடிய நோய்கள் என்னென்ன? மூக்கிரட்டை பவுடர் எப்படி சாப்பிட வேண்டும்? அனைத்தையும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சிறுநீரகம், கல்லீரல் உறுப்புகளுக்கு ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தரக்கூடியது இந்த மூக்கிரட்டை இலை.. சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களையும் அகற்றக்கூடியது.. இதனை மூக்கரட்டை என்றும் சொல்வார்கள். ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த இந்த கீரையானது, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடியது..

குறைபாடுகள்: ரத்தத்தில் பெருகியிருக்கும் கிரியேட்டினின் அளவை குறைக்க செய்வதில் இந்த கீரைக்கு மகத்தான பங்கு உள்ளது.. உடலில் ரத்தம் இல்லாதவர்கள் இந்த கீரையை தவறவிடக்கூடாது. அதிகமான ரத்த விருத்தியை பெற உதவுவது இந்த மூக்கிரட்டை கீரைகள்தான்.
சிறுநீரகத்தில் கற்கள், அல்லது வேறு ஏதாவது உபாதைகள் இருந்தால் அவைகளை போக்க இந்த கீரைகளே உதவுகின்றன. மூக்கிரட்டை இலை மற்றும் அதன் தண்டுகளை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, அது பாதியாக வரும்வரை சுண்ட காய்ச்ச வேண்டும். இந்த நீரை குடித்து வந்தால் சிறுநீரகத்திலுள்ள கற்கள் கரைந்து வெளியேறும். சிறுநீரகத்தில் தொற்றுநோய்கள் இருந்தாலும் விலகிவிடும்.
மூலம் நோய்: குளிர்ச்சி நிறைந்த இந்த மூக்கிரட்டை இலைகள், மோசமான மூலத்தையும் விரட்டக்கூடியது. இந்த மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து அரைத்து, நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வருவதால் மூலநோய்களும் தீரும். அதனால்தான், மூக்கிரட்டை கீரையை உணவில் எடுத்துகொள்ளும்போது அதிக காரம் சேர்க்கக்கூடாது என்பார்கள்.. குளிர்ச்சித்தரும் உணவுகளையே சாப்பிட வேண்டுமாம்.இதனால் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் தணிகிறது.
மஞ்சள் காமாலை நோயால் அவதிப்படுபவர்கள் கீழாநெல்லியுடன் மூக்கிரட்டை இலைகளையும் சேர்த்து அரைத்து குடிக்க தரலாம். புற்றுநோய் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியது இந்த மூக்கிரட்டை..
செரிமான கோளாறு: செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை மட்டுமல்லாமல், ஆண்மைக்குறைபாடுகளை இந்த கீரைகள் போக்குகின்றன.. சரும நோய்களை விரட்டக்கூடிய இந்த கீரைகள், இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்னைகளை சரி செய்யவும் உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த மூக்கிரட்டை உதவுகிறது. மூக்கிரட்டை கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வருபவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. கெட்ட கொழுப்புகளை நீக்கியும் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள இந்த கீரைகள் உதவுகின்றன.. அதேபோல மூக்கிரட்டை பொடி என்றே கடைகளில் விற்கிறார்கள். இந்த பொடியை வாங்கி வந்து வெந்நீரில் கலந்து குடித்து வர உடல் எடையை நன்கு கட்டுக்குள் கொண்டு வரலாம்.
சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் அளவு மேம்பட மூக்கிரட்டை இலைகளை சேர்க்கலாம். ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், மூக்கிரட்டை இலைகளிலிருந்து சாறு எடுத்து உணவுக்கு முன்பு 10 மில்லி அளவு குடித்து குடித்து வரலாம். இதனால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறைவதுடன், இன்சுலின் அளவையும் மேம்படும்.
கீரை ரசம்: மூக்கிரட்டை இலைகளை போலலே, அதன் வேர்களும் மருத்துவ குணம் நிறைந்தவை. இந்த வேர்களை காயவைத்து, பவுடர் செய்து சுடுநீரில் கலந்து குடித்து வந்தால், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீர்ந்துவிடும். இந்த கீரையில் ரசம் வைத்து சாப்பிடலாம். கூட்டு வைக்கலாம். எனினும், எவ்வளவுதான் மருத்துவ குணம் இருந்தாலும், டாக்டர்களின் ஆலோசனையை பெற்று இந்த கீரையை சாப்பிடுவது பாதுகாப்பானது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications